உலக கோப்பை கால்பந்து ; ஒரு இணைய ரவுண்ட் அப்

உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப்போட்டியை நினைத்தே ஆறுதல் அடைந்திருக்கிறது. பிரேசில் தான் ஐயோ பாவம் சோகத்தில் இருக்கிறது. கோப்பையை அசத்தலாக நடத்தி முடித்தாலும் சொந்த நாட்டு அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் வாங்கிய அடி இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக இருக்கும் .
நிற்க, நடந்து முடிந்த உலக கோப்பையின் மலரும் நினைவுகளில் அசை போட விருப்பமா? ஆன்லைனில் அதற்கு அழகான வழிகள் இருக்கின்றன. யூடியூப்பிலும் , ஆறு நொடி வீடியோ சேவையான வைனிலும் கோல்களையும் முக்கிய தருணங்களையும் பார்த்து ரசிப்பதை தாண்டி அழகான வழிகள் இருக்கின்றன. கில்லாடி கலைஞர்கள் சிலர் உலக கோப்பையின் மறக்க முடியாத தருணங்களை கலைவடிவமாக்கி ரசிக்க வைத்துள்ளனர்.

கலையாக மாறிய கோல்கள்
டேவிட் பெக்காமில் துவங்கி மெஸ்ஸி வரை எத்தனையோ வீரர்களின் ஃப்ரி கிக் அற்புத்ததை புகைப்படமாகவும் ,வீடியோ காட்சியாகவும் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால் ஃபிரி கிக்கை வரைகலையாக பார்த்திருக்கிறீர்களா? ரிக் ஹாங்சின் இணையதளத்திற்கு சென்றால் , கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் அடித்த ஃபிரி கிக்கை வரைகலையாக பார்க்கலாம். கோடுகளாக இருக்கும் இந்த படத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்திர்க்ள் என்றால் லூயிஸ் அடித்த ஃபிரி கிக் அப்படியே மனக்கண்ணில் உயிர் பெறும். ரிக் ஹாங்ஸ் , சும்மா ஒரு கோல் போஸ்ட்டை வரைந்து , அதில் லூயிஸ் கோல் அடித்த கணத்தில் வீரர்கள் இருந்த இடங்களை புள்ளிகளாகவும் கோடுகளாகவும் வரைந்திருப்பதன் மூலமே அந்த காட்சியின் துடிப்பான இயக்கத்தை வரைகலையாக்கி இருக்கிறார்.
இதே போல பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹாவர்டு பாய்ந்து பாய்ந்து பந்தை பிடித்து கோல்களை சேவ் செய்த சாகசத்தையும் அழகான வரைகலை ஆக்கி இருக்கிறார். ஹாவர்டு எங்கெல்லாம் பந்தை பிடித்தார் என்பதை கோல் கம்பாம் முன் வட்டங்களாக சுட்டிக்காட்டியே அவரது அருமையை உணர்த்தியிருக்கிறார் ஹாங்ஸ்.
இத்தாலி வீர்ர் காதை உருகுவே வீரர் சுவ்ரேஸ் கடித்த தருணத்தையும் வரைகலையாக்கி இருக்கிறார்.
2014 உலக கோப்பையின் கிளாசிக் தருணங்களை கலாப்பூர்வமாக பிளேஷ் பேக்கில் பார்க்க இந்த தளம் சிறந்த வழி: http://shop.rincks.co.uk/.
கிராபிக் டிசைனரான ஹாங்ஸ் இந்த வரைகலைகளை போஸ்டர்களாகவும் விற்கிறார்.

வீடியோ கேம் வடிவில்
நீங்கள் வீடியோ கேம் பிரியரா? அப்படி என்றால் உலக கோப்பையை வீடியோ கேம் வடிவில் ரசிக்கலாம் வாருங்கள் என்கிறார் மேத்யூஸ் டாஸ்கனோ. பிரேசில் நாட்டு கலைஞர் இவர். டாஸ்கனோ என்ன செய்திருக்கிறார் என்றால் உலக கோப்பையின் முக்கிய தருணங்ககளை வீடியோ கேம் வடிவில் சித்திரமாக்கி இருக்கிறார்.
விடியோ கேம் உலகம் எங்கேயே ஹைடெக்கில் வந்து விட்டாலும் , 1980 களில் பிரபலமாக இருந்த பிக்சல் வடிவிலான கேம்களை இப்போது நினைத்து ஏங்குபவர்கள் இருக்கிறார்கள். 8 பிட் என்று சொல்லப்படும் இந்த வீடியோ கேம் பாணியிலேயே டாஸ்கனோ , உலக கோப்பை தருணங்களை காட்சியாக்கியிருக்கிறார். இதற்காகவே 8பிட்புட்பால் எனும் (http://8bit-football.com/ ) இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். இந்த தளத்தில் அந்த கால வீடியோ கேம் பாணியில் இந்த உலக கோப்பையின் முக்கிய கணங்களையும் , இதற்கு முன்னர் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டிகளையும் காணலாம். அர்ஜெண்டினா பயிற்சியாளர் சாபெல்லா, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹிகுய்ன் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட போது நம்ப முடியாமல் அப்படியெ விழ்ந்து விடுபவர் போல பின்னால் சாய்ந்த காட்சியை பார்த்தீர்களா? இந்த காட்சியை வீடியோ கேம் சித்திரமாக உருவாக்கி இருக்கிறார். வீடியோ கேம் கார்ட்டுன் என்று சொல்லக்கூடியது போல இவை அசத்தலாக இருக்கின்றன. அட கால் பந்தை இப்படியும் ரசிகலாமா என்று வியந்து போகலாம்.

உலக கோப்பை விருந்து
ரசிகர்களுக்கு உலக கோப்பை கால்பந்து விருந்து தான். சந்தேகமில்லை. ஆனால் இன்னொரு விதமான கால் பந்து விருந்தை படைத்திருக்கிறார் இணைய கலைஞரான ஜார்ஜ் ஜிசைடிஸ். உண்மையில் இதை தான் உண்மையான விருந்து என்று சொல்ல வேண்டும்.. ஜார்ஜ், உலக கோப்பையில் பங்கேற்ற 32 நாடுகளின் தேசிய உணவை நாவில் நீர் ஊற வைக்கும் வகையில் கிளிக் செய்து அவற்றை கால்பந்து மைதானத்திற்கு மாற்றியிருக்கிறார். அதாவது உலக கோப்பையில் மோதிய நாடுகளின் உணவு வகையை அருகருகே வைத்து புகைப்படமாக்கி இருக்கிறார். அந்த உணவு வகையில் மீது அந்நாட்டு அணியின் தேசியக்கொடியும் பறக்கிறது. பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதோடு அப்படியே பல நாட்டு தேசிய உணவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஜார்ஜ், விளையாட்டு உணர்வை மதிக்கும் கலைஞர் போலும் .முதல் படங்களில் நாடுகளின் உணவு வகைகளை எதிரெதிரே வைத்திருப்பவர் அடுத்த படத்தில் அவற்றை ஒன்றாக சேர்த்திருக்கிறார்.
உலக கோப்பையை இப்படியும் ரசிக்கலாம்: http://www.georgezisiadis.com/#/world-cup-cuisine/

ஸ்நேப்சேட் ரீப்ளே
ஆயிரம் தான் சொல்லுங்கள், இறுதிப்போட்டி நடந்த போது ரியோ நகரில் இருந்திருந்தால் அந்த அனுபவம் தனியாக தான் இருந்திருக்கும் இல்லையா? என்ன தான் டிவியில் நேரடியாக பார்த்தாலும் அந்த கோலகலத்தையும் கொண்டாட்டத்தையும் முழுமையாக உணர முடியுமா? இறுதிப்போட்டியின் போது ரியோ மைதானத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை படங்களாக பார்க்க விருப்பமா? ஸ்நேப்சேட் அதற்கு வழி செய்திருக்கிறது. ஸ்நேப் சேட் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் புகைப்படங்களை அனுப்பியாச்சா, பார்ததா ரசித்தாயிற்று அவ்வளவு தான் தானாக டெலிட்டாகி விடும் வகையிலான புதுமையான சேவை. உலக கோப்பையின் போதும் ஏகப்பட்ட படங்கள் ஸ்நேப்சேட்டில் பகிரப்பட்டன.
இறுதிப்போட்டியின் போது ரியோ நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் எடுத்து பகிர்ந்து கொண்ட காட்சிகளில் இருந்து சூப்பரான புகைப்படங்களை தேர்வு செய்து அருமையான புகைப்பட கொலேஜாக உருவாக்கி உள்ளது.
ஸ்நேப்சேட்டில் உள்ள அவர் ஸ்டோரி எனும் வசதியை பயன்படுத்தி இந்த கோலேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி, கோலகலம்,உற்சாகம் , எதிர்பார்ப்பு என உலக கோப்பையின் இறுதி கட்ட உணர்வுகளை இந்த படங்களில் பார்க்கலாம்: http://www.youtube.com/watch?v=pZeDPfHiBC8

அழாதே அர்ஜெண்டினா
இறுதிப்போட்டியில் மெஸ்ஸி மரடோனாவாக மாறுவார் எனும் கணவில் இருந்த அர்ஜெண்டினா ரசிர்களுக்கு ஜெர்மனி கோப்பையை தட்டிச்சென்றது ஏமாற்றமாக தான் இருந்திருக்கும். ஆனால் எததனை ரசிகர்கள் இதை நினைத்து கண்ணீர் விட்டிருப்பார்கள் தெரியாது. ஜெர்ம்னி ஆடிய விதததை பார்த்தால் இறுதிப்போட்டியில் பிரேசில் போல் அடி வாங்காமல் தப்பித்தோமே என்றே நினைத்திருப்பார்கள் . ஆனால் குறும்பதிவு சேவையான ட்விட்டரில் பலரும் , அர்ஜெண்டினா ரசிகர்களை அழாதே அர்ஜெண்டினா என சொல்லி கலாய்த்துக்கொண்டிருந்தனர். டோன் கிரை பார் மீ அர்ஜெண்டினா எனும் ஆண்டி வெப்பரின் புகழ் பெற்ற பாடல் வரியை குறும்பதிவுகளில் பொருத்தமான இடங்களில் நுழைத்து கிண்டல் அடித்துக்கொண்டனர்.
இதே போல பிரபல பாப் பாடகியான ரிஹானாவும் இறுதிப்போட்டி பற்றி குறும்பதிவுகளை வெளீயிட்டு கலக்கிகொண்டிருந்தார். சும்மா இல்லை நேரடி வரணனை போல இருந்த குறும்பதுவுகள். உலக கோப்பை முழுவதும் அப்படிதான் இருந்தன அவர் டிவிட்டர் பக்கம். இறுதிப்போட்டிக்கு முன்பாக தனது புரபைல் புகைப்படத்தை (கவர்ச்சியான போசுடன் தான்) ஜெர்மனி அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாற்றியவர், ஜெர்மனி வீர்ர்களுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு எக்ஸ்குலுசிவ் படங்களையும் பகிர்ந்து கொண்டார். நம்மூர் பூணம் பாண்டேவை எல்லாம் மிஞ்சி விட்டார்!.
ரிஹானாவின் குறும்பதிவு ஒன்றை பார்ப்போமா ; ’நான் கோப்பையை தொட்டேன். கலையில் வைத்திருதேன். அதற்கு முத்தமிட்டேன்.சுயபடமும் எடுத்துக்கொண்டேன்…’ எப்படி இருக்கிறது?
ரிஹானவின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/rihanna

—–

நன்றி.விகடன்.காம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s