மகளை இழந்த அப்பாவை நெகிழ வைத்த இணையம்.

baby1இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் உண்டு. இருப்பினும் இணையம் அழகான இடம் தான். இதற்கு நெகிழ வைக்கும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் செல்ல மகளை இழந்து தவித்த அப்பாவின் சோகத்திற்கு மருந்திட இணையவாசிகள் ஓடோடி வந்து உதவிய உருக வைக்கும் சம்பவம்.

அமெரிக்காவின் ஓஹியோவைச்சேர்ந்த நாதன் ஸ்டிபெல் தான் இப்படி இணைய அன்பால் நெகிழந்து போயிருக்கும் அப்பா. ஸ்டிபலுக்கும் ஏற்பட்ட நிலை உலகில் எந்த அப்பாவுக்கும் ஏற்படக்கூடாதது. அவரது செல்ல மகள் ஆறே வாரங்கள் தான் உயிருடன் இருந்தார். அதிலும் அந்த ஆறு வாரங்களும் அந்த குழந்தை மருத்துவமனையிலேயே கழித்திருக்கிறது. கல்லிரல் பாதிப்பால் பிறந்ததில் இருந்து அந்த குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியிருக்கிறது. எந்த பெற்றோரையும் உலுக்கி விடும் நிலை தான்.

மகளை பறிகொடுத்த ஸ்டிபெல் அந்த குழந்தையின் புகைப்படமேனும் தன்னிடம் இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் குழந்தை சிகிச்சைக்காக குழாய்கள் பொருந்திய நிலையிலேயே இருந்தது. இதனால் அந்த அப்பாவால் குழந்தையின் முழு முகத்தை பார்க்க முடியவில்லை.
baby-581x620இந்த நிலையில் தான் இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணையதளத்தில் அவர் அந்த உருக்கமான கோரிக்கையை வைத்தார்.
என மகள் தான் வாழ்ந்த ஆறு வார காலத்தை மருத்துவமனையிலேயே கழித்ததால் அவளுடைய ஒரு நல்ல புகைப்படம் கூட என்னிடம் இல்லை. யாரேனும் இந்த குழாய்களை நீக்கிவிட்டு குழந்தையின் முகம் முழுவதும் தெரிவது போல மாற்றித்தர முடியுமா?என அவர் கேட்டிருந்தார்.

புகைப்படங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போட்டோஷாப் பயன்பாடு தெரிந்த யாரேனும் இதற்கு உதவலாம் என அவர் எதிர்பார்த்திருந்தார்.

அவர் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. குழாய்கள் நீக்கப்பட்டு குழந்தையின் அழகான புகைப்படம் சமர்பிக்கப்பட்டது. இப்படி பலரும் புகைப்படங்களை உருவாக்கி சமர்பித்திருந்தனர். இந்த முகம் தெரியாத மனிதர்களின் ஆதரவால் அவர் திக்குமுக்காடிப்போய்விட்டார். ” நான் ஒரே ஒரு நல்ல படம் தான் கேட்டேன். ஆனால் இத்தனை பேர் அதற்கான முயர்சியில் ஈடுபட்ட்து அற்புதமாக இருக்கிறது. இப்போது நிறைய படங்கள் இருக்கின்றன” என்று அவர் நெகிச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

குழாய்கள் நீக்கப்பட்ட அந்த படங்களில் குழந்தையின் தோற்றம் அத்தனை அழகாக இருந்தது. அந்த காட்சியை பார்த்து தந்தையுள்ளம் எத்தனை மகிழ்ந்திருக்கும்!
குழந்தையின் புகைப்பட்த்தை உருவாக்கி தந்துடன் நில்லமால் பலரும் அந்த தந்தையின் சோகத்தை புரிந்து கொண்டு ஆறுதல் கூறியிருந்தனர். ஒரு சிலர் தாங்களும் அவரைப்போலவே மகளை இழந்த சோகத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தனர். மருத்துவமனையில் குழந்தையை சேர்க்க நேர்ந்த அனுப்வத்தையும் பகிர்ந்து கொண்டு அவரது வலியை உணர முடிவதாக சிலர் கூறியிருந்தனர். ஒரு பயனாளி உங்கள் இடத்தில் என்னை வைத்துப்பார்த்தால் இதயம் வலிக்கிறது என்று கூறியிருந்தார். இன்னொருவரோ எனது பையன்களுக்கு 11மற்றும் 12 வயதாகிறது.அவர்கள் நண்பர்களுடன் அதிகம் இருக்கின்றனர். நான் இனி அவர்கள் அருகில் இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார். பலர் ஆறுதல் வார்த்தைகளோடு புகைப்படங்களையும் உருவாக்கி சமர்பித்திருந்தனர். சிலர் ஆயில்பெயிண்டிங்கில் வரைந்து அனுப்புவதாகவும் கூறியிருந்தார்.

இந்த உரையாடல்கள் அன்பின் மொழியாகவும், மனிதநேயத்தின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தன. தந்தைகளின் உலகையும் உணர்வையும் வெளிப்படுத்துவதாகவும் இருந்தன.

ரெட்டிட் கோரிக்கை பக்கம்: http://www.reddit.com/r/pics/comments/2ajul6/photoshop_request_my_daughter_recently_passed/

குழந்தையின் புகைப்படங்கள்; http://imgur.com/nZFisJl

———–

விகடன்.காமில் எழுதியது; நன்றி.விகடன்.காம்

2 responses to “மகளை இழந்த அப்பாவை நெகிழ வைத்த இணையம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s