இணைய வரைபட விளையாட்டுகள் !

கூகிள் தேடல் சேவையை மட்டும் வழங்கவில்லை. கூகிள் மேப்ஸ், கூகிள் எர்த் போன்ற வரைபட சேவைகளையும் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் மேப்சை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கூகிள் வரைபடத்தை வைத்துக்கொண்டு விளையாடலாம் என்பது உங்களுக்குத்தெரியுமா?

சுவாரஸ்யமான சுவையான விளையாட்டு என்பது மட்டும் அல்ல. அப்படியே உங்கள் பொது அறிவையும் பரிசோத்தித்துக்கொள்ளும் விளையாட்டு. இந்த விளையாட்டில் ஈடுபடும் போதே நிறைய பொது அறிவு விஷயங்க்ளையும் புதிதாக தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன விளையாட்டு என்று கேட்கிறீர்களா? அதை தெரிந்து கொள்ள முதலில் கூகிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்டிபின்ஸ் (http://smartypins.withgoogle.com/ ) இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த இணையதளத்தில் தான் வரைபட விளையாட்டு இருக்கிறது. கூகிள் வரைபடம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் உள்ளே நுழைந்ததுமே , புதிய விளையாட்டை துவக்கவும் எனும் வாசகம் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஆட்டத்திற்கு நீங்க ரெடி! ஆனால் அதற்கு முன்னர் ஆட்டத்திற்கான வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கலைகள்-கலாச்சாரம், விஞ்ஞானம் -பூகோளம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.( கால்பந்து உலக கோப்பை டாபிக்கும் இருக்கிறது ) . எந்த தலைப்பில் நீங்கள் சூரப்புலி என்று நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிங்கள் ஆடப்போகும் விளையாட்டில் வரிசையாக கேள்விகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த வீட்டீர்களா? இனி மேல் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.
இப்போது கூகிளின் வரைபடம் திரையில் தோன்றும். அதில் பலூன் போல் ஒரு பின் சொருகப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் பார்த்தால் ஒரு கட்டத்தில் கேள்வி ஒன்று தோன்றும். அந்த கேள்விக்கான பதில் தான் வரைபடத்தின் மீதுள்ள பலூன். ஆனால் அந்த பலூன் தவறான இடத்தில் இருக்கிறது. உங்களுக்கான சவால் அந்த பலூனை சரியான இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். பலூனை வரைபடத்தில் நகர்த்திய பின், பதிலை சமர்பிக்க வேண்டும். உடனே உங்கள் பதில் சரியா , தவறா என காட்டப்படும். இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா? பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா? அதே போல இங்கும் சிறிய கட்டத்தில் எண்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உங்கள் பதில் சரியான பதிலில் இருந்து எத்தனை கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது என்பதை குறிப்பது. சரியான பதிலாக இருந்தால் ‘0’ கி.மீட்டரை காட்டும். அதன் பிறகு அடுத்த கேள்விக்கு முன்னேறலாம். தவறான பதில் அத்ற்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம்.
பதில் தெரியவில்லையா, உதவிக்கான குறிப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு பதிலாக சொல்ல, உங்களுக்கான கிலோ மீட்டர்கள் குறைந்து கொண்டே வரும் என்பது தான் இன்னும் சுவாரஸ்யம். அதிக தவறான பதில் என்றால் அதிக கிலோ மீட்டர்களை இழப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிலோ மீட்டருக்குள் எவ்வளவு சரியான பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். இல்லை என்றாலும் கவலையில்லை, புதிதாக ஆடத்துவங்கலாம்.

வரைபடத்தின் மீது பின்களை சரியான இடத்தில் கொண்டு வைப்பதும் அது சரியான என அறிய காத்திருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதுடன் கொஞ்சம் உலக விஷயங்களையும் தெரிந்து கொள்ளாலாம்.

உங்கள் விளையாட்டு திறமையை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் இந்த விளையாட்டை ஆப்பாகவும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

சூப்பர் விளையாட்டு தான் இல்லையா?

இதே போன்ற வரைபடம் சார்ந்த இதே போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான விளையாட்டுகள் இருக்கின்றன. எங்கே இருக்கிறது என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த விளையாட்டு தளம்: http://backpacker-adventure-club.de/geo/. இதில் உலக வரைபடத்தின் மீது , குறிப்பிட்ட நகரம் எங்கே இருக்கிறது என கேட்கப்படும் . பதிலுக்குறிய இடத்தை கிளிக் செய்தால் , உங்கள் விடை சரியா? உங்கள் விடைக்கும் சரியான விடைக்குமான இடைவெளியையும் சுட்டிக்காட்டும். இதுவும் ஸ்மார்ட்டி பின்ஸ் போல தான் ,ஆனால் இன்னும் எளிமையானது.

இந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம்.

ஜியோகெஸ்சர் ( https://geoguessr.com/) தளமும் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் ஏதேனும் ஒரு இடத்தின் புகைப்படம் காட்டபடும் . அந்த படத்தை பார்த்து எந்த இடம் எது என கண்டுபிடித்து, அதை கூகிள் வரைபடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விளையாட்டிலும் சரியான பதிலின் அளவு கி.மியில் சுட்டிக்காட்டப்படும்.

இதே போன்ற விளையாட்டுகளை நீங்களே உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறது ஜியோசெட்டர் தளம் (http://geosettr.com/ ) . இதில் இடங்களை நீங்களே தேர்வு செய்து விளையாட்டை உருவாக்கி கொள்ளலாம்.

பிலேஸ் ஸ்பாட்டிங் ( http://www.placespotting.com/) இணையதளத்திலும் வரைபட விளையாட்டு மூலம் உங்கள் உலக அறிவை சோதித்துக்கொள்ளலாம். இதிலும் ஏதேனும் ஒரு இடத்தில் பறவை பார்வை காட்சி இடம் பெற்றிருக்கும் . அந்த இடத்தை வரைபடத்தில் அடையாளம் காட்ட வேண்டும். இந்த தளத்திலும் சொந்த விளையாட்டை உருவாக்கி கொள்ள முடியும்.
———-

சுட்டி விகடனுக்கக எழுயது; நன்றி;சுட்டி விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s