இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் !

2-fish1வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா?

வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டை தான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு.

அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவரும் தான் இந்த மீனை வீடியோ கேம் விளையாட வைத்துள்ளனர். கொலம்பிய பல்கலை மற்றும் சிக்காகோ பல்கலை மாணவர்களான இருவரும் இந்த மீன் வீடியோ கேம் விளையாடுவதை ,வீடியோ கேம் ஒளிபரப்பு இணையதளமான டிவிட்ச்(Twitch ) மூலம் ஒலிபரப்பி வருகின்றனர். லட்சக்கணக்கான இணையவாசிகள் இந்த மீன் வீடியோகேம் விளையாடும் அழகை டிவிட்ச் இணையதளம் மூலம் பார்த்து ரசித்து வருவதால் இந்த மீன் மிகவும் பிரபலமாகி விட்டது.

மீன் எப்படி வீடியோ கேம் ஆடும்? உண்மையில் மீன் வீடியோ கேம் விளையாடவில்லை. பாட்ரிக் மற்றும் அவரது தோழி கேத்தரீன் இணைந்து தங்கள் தொழில்நுட்ப மூளை மூலம் மீனை வீடியோ கேம் விளையாட வைத்துள்ளனர். இருவரும் மீன் தொட்டியில் ஒரு வெப் கேமிராவை பொருத்தி அதனுடன் அசைவுகளை உணரும் டிராக்கிங் சாப்ட்வேரை இணைத்து விட்டனர். இந்த சாப்ட்வேர் போக்மேன் விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக மீனின் அசைவுகளுக்கு ஏற்ப வீடியோ கேம் இயக்கப்படும். இதற்காக மீன் தொட்டியின் மூளைகளை வீடியோ கேம் இயக்கத்திற்கான புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. மீன் எந்த இடத்திற்கு செல்கிறதோ அதற்கேற்ப வீடியோ கேம் இயக்கப்படும்.

ஆக, மீன் தன்னை அறியாமல் வீடியோ கேம் ஆடுவதை தான் டிவிட்ச் இணையதளம் மூலம் ( http://www.twitch.tv/fishplayspokemon) இணையவாசிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பாடிரிக் மற்றும் கேத்தரீன் நியூயார்க் நகரில் நடந்த ஹேக்கிங் போட்டியில் 24 மணி நேரத்தில் இந்த விளையாடை உருவாக்கி உள்ளனர். அவர்களே எதிர்பாராத வகையில் இந்த மீன் விளையாட்டை லட்சகணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் ,மீன் வீடியோ கேம் ஆடுவதை கூடவா இத்தனை பேர் பார்ப்பார்கள் என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். கடந்த பிப்ரவரி மாதம் இதே போக்மன் விளையாட்டை ஒரு சமூக விளையாட்டு போல ஆக்கி இணையம் மூலம் யார் வேண்டுமானாலும் விளையாட முகம் தெரியாத ஆஸ்திரேலிய வாலிபர் ஒருவர் வழி செய்தார். இந்த கூட்டு விளையாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்று மாபெரும் ஹிட்டானது. அது மட்டும் அல்ல, இணையத்தின் முகப்பு பக்கமான ரெட்டிட் தளத்தில் இந்த விளையாட்டு தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் விவாதம் நடத்தி, இதற்காக என்று ரசிகர் குழுக்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன.

இப்போது வீடியோ கேம் விளையாட்டும் இதே போல பிரபலமாகி உள்ளது. இந்த விளையாட்டு தொடர்பாகவும் நூற்றுக்கணக்கானோர் ரெட்ட்டிட்டில் ஆர்வத்துடன் விவாதித்து வருகின்றனர். ஒரு சிலர் மீனின் உடல் நலம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் பாட்ரிக்கும் கேத்தரீனும் மீனுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளனர். இன்னும் சிலர் மீனின் தொட்டி சிறியதாக உள்ளது, பெரிதாக மாற்றவும் என சோசனை கூறினர். இதை ஏற்றுக்கொண்ட இருவரும் மீன் தொட்டிக்காக நன்கொடை கோரிக்கை வைக்க அதற்கும் நிதி குவிந்து வருகிறது.

இது போன்ற விநோதமான நிகழ்வுகளும் நெகிழ்வுகளும் சேர்ந்தது தான் இணையம்.

மீனின் வீடீயோ கேம் விளையாட்டு; http://www.twitch.tv/fishplayspokemon

மீனை விளையாட வைத்தவர்களின் பேட்டி: http://motherboard.vice.com/read/an-exclusive-interview-with-the-fish-playing-pokemon

———-

நன்றி;விகடன்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s