கற்றுக்கொள்ள கைகொடுக்கும் அருமையான வீடியோ தளங்கள்!.

eduஇணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உண்மையில் கோடிக்கணக்கிலான வீடியோக்கள். யூடியூப் மட்டும் அல்ல, விமியோ போன்ற வேறு பல வீடியோ சேவைகளும் இருக்கின்றன. யூடியூப் என்றதும் பொதுவாக பொழுதுபோக்கு வீடியோக்கள் தான் மனதில் தோன்றும். ஆனால் யூடியூப்பில் கற்றுக்கொள்வதற்கான வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
விஞ்ஞானம், வரலாறு, கலை என பல தலைப்புகளில் கல்வி வீடியோக்களை பார்க்கலாம். இவற்றில் பாடம் நடத்துவது போன்ற வீடியோக்களும் உண்டு. செய்முறை வீடியோக்களும் உண்டு.

ஆனால் யூடியூப்பில் ஒரே சிக்கல் என்ன என்றால் கற்றலுக்கு உதவும் நல்ல வீடியோக்களை தேடிக்கண்டுபிடிப்பது தான். யூடிப்பிலேயே அருமையான கல்வி சேனல்கள் இருக்கின்றன என்றாலும் கூட கல்வி வீடியோக்களை தேடுவது கொஞ்சம் சவாலானது தான் . அதோடு இந்த தேடலின் போது ஆபாசமான மற்றும் மோசமான வீடியோக்களும் கண்னில் பட்டு கவனத்தை சிதறடிக்கலாம்.

இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் அருமையான கல்வி வீடியோக்களை மட்டுமே தொகுத்து தருகிறது எஜுடியூப்.ஆர்ஜி (http://edutube.org/en) . யூடியூப்பில் உள்ள அருமையான கல்வி வீடியோக்களை எல்லாம் ஒரே இடத்தில் திரட்டிதரும் தளம் இது. எந்த தலைப்பாக இருந்தாலும் சரி, அதற்கான வீடியோவை இந்த தளத்தில் தேடிக்கொள்ளலாம். இப்படி இந்த தளம் தேடித்தரும் வீடியோ அந்த பிரிவில் முன்னணி வீடியோகவும் இருக்கும் என்பது தான் சிறப்பு. அதாவது , ஒவ்வொரு பிரிவிலும் பயனுள்ள, அதே நேரத்தில் தரமான வீடியோவை அடையாளம் காட்டுகிறது இந்த தளம். அந்த வீடியோ அதிகம் பேரால் பார்க்கப்பட்டதாகவும் இருப்பது தான் இன்னும் சிறப்பு.

எஜுடியூப் தளத்தை எப்படி பயன்படுத்துவது? இந்த தளத்தில் நுழைந்த்துமே அதன் முகப்பு பக்கத்தில் முன்னணி கல்வி வீடியோக்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள அல்லது தெரிந்து கொள்ள விரும்பும் வீடியோவை தேர்வு செய்து கொள்ளலாம். இவைத்தவிர உங்களுக்கு விருப்பமான எந்த தலைப்பு வகையையும் தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களை பார்க்கலாம். உதாரணத்திற்கு ரசாயணம்,உயிரியல், கணிதம், விண்வெளி, பொருளாதாரம் ,கம்ப்யூட்டர், சாப்ட்வேர் என எந்த தலைப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

ஒவ்வொரு தலைப்பிலும் வரிசையாக வீடியோக்களை பார்க்கலாம். குறிப்பிட்ட வீடியோவை கிளிக் செய்ததுமே அதன் வீடியோவை பார்க்கத்துவங்கிவிடலாம். அந்த வீடியோ பற்றிய சிறிய அறிமுகமும் மேலும் தகவல்களுக்காக விக்கிபீடியா பக்கத்திற்கான இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ எந்த அளவு பிரபலமாக இருக்கிறது என்பதை, அதாவது இதுவரை எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதிகம் பேர்த்த வீடியோ என்றால் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். பயனுள்ளதாகவும் இருக்கும் இல்லையா? அதோடு உங்களுக்கு வழிகாட்டுவதற்காக அந்த வீடியோவுக்கான இந்த தளத்தின் மதிப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் பார்க்கும் வீடியோ பிடித்திருக்கிறதா?அதன் பக்கத்தில் தொடர்புடைய மற்ற வீடியோக்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவுடனும் அதன் வகை மற்றும் பொருத்தமான வகுப்பு போன்ற விவரமும் இடம் பெற்றுள்ளன. இவற்றை கிளிக் செய்தும் பொருத்தமான வீடியோக்களை பார்க்கலாம்.
எந்த தலைப்பில் தேவையோ அதில் வீடியோக்களை பார்க்கலாம். வீடியோக்களை நேரடியாக தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. அதாவது கூகுளில் தேடுவது போலவே குறிப்பிட்ட தலைப்பை டைப் செய்து தேடலாம்.

உங்களுக்கு வழிகாட்டுவதற்காக ,இந்த தளத்திலேயே மிகவும் பிரபலமான வீடியோக்கள், முன்ன்ணி வீடியோக்கள் மற்றும் டாப் 100 வீடியோக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நாடுகள், புகழ்பெற்ற மனிதர்கள், ரோபோ ஆகிய தலைப்புகளிலும் வீடியோக்கள் தனியே இடம் பெற்றுள்ளன.
தினமும் எதையாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுக்கிறது இந்த தளம். உண்மையில் தினமும் பல விஷயங்களை இதில் சுவாரஸ்யமாக கற்றுக்கொள்ளலாம். பொது அறிவு சார்ந்த வீடியோக்களும் இருப்பது இந்த தளத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.edu1

என்ன இந்த தளம் பிடித்திருக்கிறதா? அப்படி என்றால் இந்த தளத்தை புக்மார்க் செய்து கொண்டு ஆட்ச்லேர்ன்நோ (http://www.watchknowlearn.org/) இணையதளத்திற்கு வருங்கள். இதுவும் கல்வி வீடியோ இணையதளம் தான். முதலில் பார்த்த தளத்தை விட இது கொஞ்சம் வண்ணமயமானது. கொஞ்சம் விரிவானதும் கூட. 5,000 தலைப்புகளில் 50,000 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பட்டியலிட்டு வைத்துள்ளது இந்த தளம்.
கணிதம்,விஞ்ஞானம், வாழ்வியல்,விடுமுறை,கலைகள் என எண்ணற்ற தலைப்புகளில் இதில் வீடியோக்களை காணலாம். வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தரும் வீடியோக்களும் இருக்கின்றன. மாணவர்கள் தங்கள் வகுப்பிற்கு ஏற்ற வீடியோக்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். ( ஆனால் வகுப்புகள் அமெரிக்க பாணியில் கொடுக்க்ப்பட்டிருக்கும் ). ஒவ்வொரு வீடியோவுக்கும் ரேட்டிங்கும் உண்டு. பின்னூட்டங்கள் வாயிலாக கருத்துக்களுக் தெரிவிக்கலாம். விருப்பமான வீடியோவை தேடிப்பார்க்கும் வசதியும் உண்டு. உறுப்பினராக சேர்ந்தால் வீடியோக்களும் இந்த தளத்தில் சமர்பிக்கவும் செய்யலாம் .
எஜுடோபியா (http://www.edutopia.org/ ) தளமும் கல்வி வீடியோக்களுக்கானது தான். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ் ( ஸ்டார் வார்ஸ் புகழ்) கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் தளம் இது . இந்த தளத்தில் உள்ள வீடியோக்கள் அவற்றில் உள்ள்டக்கத்திலும் சரி தரத்திலும் சரி மிகவும் மேம்பட்டவை. கொஞ்சம் ஹைடெக்கான விஷயங்கள் என்றாலும் இந்த தளம் துடிப்பாக இருப்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம். பல தலைப்புகளில் கட்டுரைகளும் இருக்கின்றன. கட்டுரைகளுடன் வீடியோவும் உண்டு.

இவைத்தவிர யூடியூப் தளத்திலேயே கல்வி பகுதியும் இருக்கிறது- https://www.youtube.com/t/education.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s