காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

rubஇணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிகழ்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் நிகழ்வாக கிளைவிட்டுள்ளது.
ஏ.எல்.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக இணையவாசிகளும்,சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரபலங்களும் பக்கெட் ஐஸ் நீரை தலையில் ஊற்றிக்கொண்டு அதை படம் பிடித்து சமூக ஊடங்களில் பகிர்ந்து கொண்டு மற்றவர்களை இதே போல செய்ய சவாலுக்கு அழைத்து வருகின்றனர். இது இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ்சாக வடிவமெடுத்துள்ளது.
இப்போது , பாலஸ்தீன பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரப்பில் பக்கெட் சாலஞ்சாக உருவெடுத்துள்ளது. ரப்பில் என்றால் இந்த இடத்தில் இடிபாடுகள் என்று பொருள். இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஐஸ் தண்ணீருக்கு பதிலாக ஒரு பக்கெட்டில் , புழுதியையும் , மணல்,கற்கள் போன்றவற்றையும் தங்கள் தலையில் கொட்டிக்கொண்டு அதை படம் பிடித்து வெளியிட்டு வருகின்றனர்.rub1
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ராக்கெட் தாக்குதலில் வீடுகளும் கட்டிடங்களும் தரைமட்டமாக காட்சி அளிக்கின்றன. போரால் மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ,தலையில் கொட்டிக்கொள்ள ஐஸ் தண்ணீர் கிடையாது, இருப்பதெல்லாம் இடுபாடுகளின் கற்களும் மண்ணும் தான் என்பதை உணர்த்தும் வகையில் பலரும் ரபில் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக்கொள்கின்றனர்.
காசா பகுதியில் உள்ள மக்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.
உலகின் பல் வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இதை ஏற்றுக்கொண்டு ரபில் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு ,பாலஸ்தீன பிரச்சனை பற்றி தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
காசா பலகலைக்கழகத்தைசேர்ந்த மேசம் யூசப் (Maysam Yusef ) எனும் கல்லூரி மாணவர் இந்த முயற்சியை துவக்கி இதற்கான பேஸ்புக் பக்கத்தையும் அமைத்துள்ளார். இதற்காக #RubbleBucketChallenge., #Gaza ஆகிய ஹாஷ்டேகுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. காசாவை சேர்த பத்திரிகையாளர் ஐமான் அல்மோல் ( Ayman Aloul,) காசா இடிபாடுகளின் நடுவே நின்று கொண்டு ரபில் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக்கொண்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த நிகழ்வு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு பக்கெட் தண்ணீரை தேடினோம். ஆனால் தண்ணீரை தலையில் கொட்டிக்கொள்வதைவிட முக்கிய பயன்பாடு இருக்கிறது. அதோடு இங்கு தண்ணீரை குளிர்விக்க வசதி கிடையாது என அவர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ் பக்கெட் சாலஞ்ச் இணைய நிகழ்வே நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அதன் கிளை வடிவமான ரப்பில் பக்கெட் சாலஞ்ச் போரின் தீவிரத்தை உணர்த்தி நெஞ்சத்தை உலுக்குகிறது.
rub2
ரபில் பக்கெட் சாலஞ்ச் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/pages/Rubble-Bucket-Challenge/754732341257955

———————
நன்றி;விகடன்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s