இணையப்புகழ் பெற்ற நாயகர்கள்

இணையப்புகழ் பெற்ற நாயகர்களின் வெற்றிக்கதைகளை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? ஆம், எனில் அச்சில் ஏற காத்திருக்கும் என அடுத்த புத்தகம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். ’நெட்’சத்திரங்கள் எனும் தலைப்பிலான அந்த புத்தகம் இணையம் மூலம் புகழ்பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை உள்ளடக்கியதாக உருவாகி இருக்கிறது.

இணையம் தொடர்பான அம்சங்களில் அதன் ஜனநாயக பண்பே என்னை அதிகம் கவர்கிறது. இதன் அடையாளமாகவே இணைய நடசத்திரங்களை பார்க்கிறேன். இணையம் மூலம் மட்டுமே இப்படி புகழ்பெற்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர்கள் நூற்றுக்கும் அதிகமாக இருப்பார்கள். இவர்களில் புகழ் வெளிச்சம் மின்னல் போல மின்னி மறைந்தவர்களும் உண்டு. சர்ச்சை நாயகர்களாகவும் விளங்கியவர்கள் உண்டு. ஆனால் பலர் இணையம் மூலம் புதிய பாதையை கண்டு தங்களுக்கான வெற்றிக்கதையை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். இத்தகைய இணைய நாயகர்களில் 30 பேர் தேர்வு செய்து அவர்கள் புகழ்பெற்ற கதையை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த நாயர்களின் பதிவும் அவர்களின் சாதனை பற்றியதாக மட்டும் அல்லாமல், அந்த காலத்து இணைய போக்குகளை படம் பிடித்தி காட்டுவதாகவும் இருப்பதாக நம்புகிறேன். இந்த தேர்வு சவாலான அனுபவமாக இருந்தது. இணையத்தின் முதல் நட்சத்திரம் முதல் கொண்டு , யூடிப்பு மூலம் புகழ் பெற்றவர்கள், இணைய யுகத்தில் நுகர்வோர் ஆற்றலை உணர்த்தியவர், பெரிய நட்சத்திரங்களுக்கு நிகராக புகழ்பெற்றவர்கள் என தனித்தன்மை வாய்ந்த இணைய நாயகர்க்ளை தேர்வு செய்திருக்கிறேன். குறிப்பிட்ட காலத்தில் இணையத்தில் பேசப்பட்டவர்களை தேடிப்பிடித்ததுடன், இப்போதும் முன்னோடிகளாக இருப்பவர்களையும் இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறேன். இந்த நட்சத்திரங்களின் இப்போதைய நிலை மற்றும் முன்னேற்றத்தையும் கட்டுரையில் சேர்த்திருக்கிறேன்.

இணையம் எப்படி சாமான்யர்களுக்கு புகழ் பெறுவதற்கும் புதிய பாதை காண்பதற்குமான வழியாக இருக்கிறது என்பதை இந்த தொகுப்பு உணர்த்தும் என நம்புகிறேன். பல இணைய நாயகர்கள் எங்களை சேர்க்கவில்லையா என என்னை தூங்க விடாமல் செய்தனர். ஆனால் தொகுப்பின் பட்டியல் இணைய நட்சத்திரங்களின் பரந்துபட்ட தன்மையை பிரிதிபலிக்க வேண்டும் எனும் நோக்ககத்துடன் தேர்வு செய்துள்ளேன்.

என்னளவில் இந்த தொகுப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வாசிப்பிலும் இந்த அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறேன். எனது முதல் தொகுப்பை வெளியிட்ட மதி நிலையைம் பதிப்பகம் இந்த புத்தகத்தையும் வெளியிடுகிறது. புத்தகம் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது.

இதில் உள்ள இணைய நாயகர்களில் என்க்கு தனிப்பட்ட முறையில் பிடித்தவர்கள் பேராசிரியர் வால்டர் லெவின் மற்றும் சல்மான் கான் . அலெக்ஸ் டியூ மற்றும் டூசியும் எனக்கு பிடித்தமானவர்கள் .யார் இவர்கள்? என்பதை அறிய நெட்சத்திரங்கள் வெளியாக காத்திருங்கள்.அதோடு ரெபேக்கா பிளாக்கும் , மிச்சிலி பேனும் உற்சாகம் அளிப்பார்கள். ரஸா பரிதாபத்தை ஏற்படுத்துவார். கார்டன் டிரம்ப் கைத்தட்ட வைப்பார்.

இந்த நாயகர்களில் ஒரு சிலர் பற்றி இந்த வலைப்பதிவிலேயே அறிமுகம் செய்துள்ளேன். மற்ற நாயகர்கள் புதியவ்ர்கள். ஆனால் எல்லா நாயர்கர்கள் பற்றியும் முழுவதுமாக புதிதாக எழுதியுள்ளேன்.

இந்த நாயகர்களில் இந்தியா தொடர்பான் ஐந்து பேர் இருக்கின்றனர். யார் ? யார் ? என்று யூகிக்க முடிகிறாதா ? சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு க்ளு அதில் 3 பேர் சினிமா தொடர்பானவர்கள்.

எனது முதல் தொகுப்பான இணையத்தால் இணைவோம்; சைபர்சிம்மன் கையேடு – புத்தகத்தில் இருந்து இது மிகவும் மாறுபட்டது. முதல் தொகுப்பில் இணைய வரலாற்றின் மிகச்சிறந்த மற்றும் முக்கியமான மற்றும் கவனிக்க வேண்டிய 110 க்கும் மேற்பட்ட இணையதளங்களை விரிவாக் அறிமுகம் செய்திருந்தேன். இரண்டாவது புத்தகம் இணைய ஆளுமைகள் சார்ந்தது. இது இணையத்தின் ஆற்றல் மற்றும் சாமான்யர்களின் ஆற்றல் இரண்டையுமே அடையாளம் காட்டுகிறது.

முதல் புத்தகம் போலவே இரண்டாவது புத்தகத்தையும் வாங்கிப்படித்து ஆதரவு தாருங்கள்.- இதனிடையே புத்தகத்திற்கான அட்டை தயாராகி கொண்டிருக்கிறது. அட்டை படம் எப்படி இருக்கலாம் எனும் யோசனையையும் தெரிவுக்கவும்.

அன்புடன் சிம்மன்.

—–
இணையத்தால் இணைவோம் , ஆன்லைனில் வாங்க :

1.http://nammabooks.com/buy-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-Inaiyathal-Inaivom-Mathi-Nilayam

2. http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

3.http://www.dialforbooks.in/reviews/innaiyaththal-innaivom.html

4 .https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html

5.http://udumalai.com/?prd=inaiyathal%20inaivom!&page=products&id=14220

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s