ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

sw2சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ).

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!.
இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளியவும் வைத்தது.

இப்போது நுயேன் இரண்டாவது மொபைல் கேமான ஸ்விங் காப்டர்சை ( Swing Copters) ரிலிஸ் செய்து இணைய உலக முழுவதும் பேச வைத்திருக்கிறார். குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் , இணைய விவாத குழுக்களிலும் இந்த விளையாட்டு பற்றி படு சுறுசுறுப்பாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விவாதத்தின் முக்கிய சரடு இந்த விளையாட்டின் வெற்றிக்கொள்ள முடியாத தன்மை பற்றியதாகவே இருக்கிறது.
#SwingCopters எனும் ஹாஷ்டேகுடன் இந்த விளையாட்டு தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் பெரும்பாலும் 1 அல்லது 2 புள்ளிகளுக்கு மேல் எடுக்க முடியாதது பற்றிய புலம்பல்களாகவே இருக்கிறது. ஒருவழியாக 1 புள்ளி எடுத்து விட்டேன்,இனி நிம்மதியாக தூங்கப்போவேன் ‘என்கிறது டான் கவுன்சல் என்பவரின் குறும்பதிவு. இன்னொருவர் இந்த விளையாட்டுக்கு பிளாப்பிபேர்டே பரவாயில்லை எளிமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஸ்விங் காப்டர்ஸ் பிலாப்பி பேர்ட் போல அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட விளையாட்டாக மாறுமா, அப்படியே மாறினாலும் எவ்வளவு காலம் அந்த இடத்தில் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், இந்த விளையாட்டு அதன் தன்மை பற்றி சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூடவே பயனாளிகளை அடிமையாக்கும் ஆற்றல் கொண்ட வீடியோ கேமின் அடிப்படை தன்மை பற்றிய முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளது. வெற்றி பெற முடியாத ஒரு விளையாட்டை ஆடுவதில் ஏன் இத்தனை ஆர்வம் ஏற்படுகிறது என்பது தான் அந்த கேள்வி.
ஸ்விங் காப்டர்ஸ் அறிமுகமான உடனே அதன் வெல்ல முடியாத தன்மையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இத்தனைக்கும் இது மிக எளிமையான விளையாட்டு. இதில் சிக்கலான சங்கதி எதுவும் கிடையாது. ஹெல்மெட் போட்ட ஒரு பாத்திரத்தை பறந்த படி முன்னேற வைக்க வேண்டும். பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும் சுத்திகளில் சிக்கி அடிபடாமல் அந்த பாத்திரத்தை முன்னேற வைக்க வேண்டும். அவ்வளவு தான் விளையாட்டு.
எளிதான விளையாட்டாக தான் இருக்கிறது இல்லையா? ஆனால் விளையாடிப்பார்த்தால் தான் இது உண்மையில் எத்தனை கடினமாக இருக்கிறது எனத்தெரியும் என்கிறனர்.

ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஏதாவது தவறு செய்து ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது என்கின்றனர். விளைவு இன்னும் தீவிரத்தோடு அடுத்த முறை ஆட வேண்டியிருக்கிறது என்கின்றனர். ஆனால் என்ன தான் முழுகவனம் செலுத்தி ஆடினாலும் ஒரு புள்ளியை தொடவே படாதபாடு பட வேண்டிக்கிறது. விளைவு அடச்சீ என வெறுத்துப்போக தோன்றினாலும் இன்னும் தீவிரத்துடன் விளையாட தூண்டுகிறது.
எளிமையான தோற்றத்தை மீறி இந்த கேமில் இருக்கும் சவாலான தன்மையும் அவை ஏற்படுத்தும் கடினமான உணர்வுமே இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
sw3
உண்மையிலேயே கடினமாக தான் இருக்கிறது, வேண்டுமானால் நீங்களே முயன்று பாருங்கள் என பலரும் இந்த விளையாட்டு பற்றி பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதுவே இந்த விளையாட்டுக்கான கவனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பிளாப்பி பேர்ட் விளையாட்டும் இதே தன்மையை தான் கொண்டிருந்தது. அதில் ஒரு பிக்சல் பறவையை குழாய்களுக்கு மத்தியில் பறக்கச்செய்ய வேண்டும். எளிதான விளையாட்டு என்றாலும் சவாலானது, கடினமானது; அதனால் தான் பலரும் பிளாப்பி பேர்டே கதி என இருந்தனர். இப்படி பலரையும் அடிமையாக்குகிறது என்பதை காரணம் காட்டி தான் நுயேன் மிகவும் பிரபலமாக இருந்த நிலையில் பிளாப்பி பேர்ட் விளையாட்டை விலக்கி கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நுயேனின் இரண்டாவது விளையாட்டு இதைவிட எளிமையானதாக ,இதைவிட கடினமானதாக இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.

பிரபலமான சினெட்.காம் ( http://www.cnet.com/news/flappy-bird-follow-up-swing-copters-will-drive-you-to-insanity/) இணையதளத்தை சேர்ந்த நிக் ஸ்டாட் இந்த விளையாட்டை இதுவரை வந்த ஸ்மார்ட்போன் விளையாட்டுகளிலேயே கடினமானது என வர்ணித்துள்ளார். ஸ்டாட் இந்த விளையாட்டை ஒரு கை பார்க்க முயன்றுவிட்டு , 2 புள்ளிகள் எடுக்க 20 நிமிடம் வேறு எதுபற்றியும் சிந்திக்காமல் ஜென் யோகி போல இதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எளிமையான விளையாட்டு,ஆனால் எளிதான வெற்றி பெற முடியாத விளையாட்டாக இருப்பதே பிலாப்பி பேர்ட் மற்றும் ஸ்விங் காப்டர்ஸ் போன்ற விளையாட்டுகளின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றால் அந்த வெற்றி தரும் திருப்தியும் பெருமிதமும் அதன் மீது ஆர்வம் கொள்ள வைக்கும். இருப்பினும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போக வைக்கும் பிளாப்பி பேர்டும் , அதன் ஊக்கமாக கருதப்படும் சூப்பர் மரியோ பிரஸ் போன்ற வீடியோ கேம்கள் எப்படி பிரபலமாகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி.

வீடியோ கேம் தாக்கம் பற்றி ஆய்வு செய்து தி ஆர்ட் ஆப் பைலியர் எனும் புத்தகம் எழுதியுள்ள ஜெஸ்பர் ஜூல் (Jesper Juul ) இந்த முரணான அம்சத்தில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். மனிதர்களுக்கு வெற்றி பெரும் உணர்வும் அது தரக்கூடிய திறமைசாலி என எண்ணமும் தான் முக்கியமானது என்றாலும் , வீடியோ கேம் பிரியர்கள் தங்களை தோல்வி பெற வைத்து,திறனற்றவர்களாக உணர வைக்கும் விளையாட்டுகளிலேயே ஈடுபட விரும்புவதாக ஜூல் குறிப்பிடுவதாக சினெட் கட்டுரை மேற்கோள் காட்டுகிறது. அதாவது தாங்கள் தோற்கப்போகும் விளையாட்டுகளையே வீடியோ கேம் ஆர்வலர்கள் விரும்புகின்றனர், இது தான் வீடியோ கேமின் முரண் என்கிறார் ஜூல்.

மைதானத்துக்கு சென்று கிரிக்கெட்டோ ,கபடியோ விளையாடும் தன்மை இல்லாமல் , கம்ப்யூட்டரிலும் ,ஸ்மார்ட்போனிலும் ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் மூழ்கியுள்ள தலைமுறையை சரியாக புர்ந்து கொள்ள , ஸ்விங்க் காப்டர்ஸ் போன்ற விளையாட்டுகளும் ஜூல் போன்றோரின் ஆய்வும் உதவும்.
இதனிடையே இந்த விளையாட்டில் எந்த புதுமையும் இல்லை, இது பிளாப்பி பேர்டின் இன்னொரு வடிவம் தான் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடினமானது என்பதை விமசிப்பவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த விளையாட்டை இன்னும் நான் ஆடிப்பார்க்கவில்லை. நீங்கள் முயன்று பார்த்துச்சொல்லுங்களேன் , இது எந்த எளவு எளிமையாதனது? எந்த அளவு கடினமானது என்று? https://play.google.com/store/apps/details?id=com.dotgears.swing. ஐஓஎஸ்-லும் டவுண்லோடு செய்யலாம்.
வீடியோ கேம் ஆய்வாளர் ஜெஸ்பர் ஜூல் இணையதளம்: http://www.jesperjuul.net/
——–

பிளாப்பி பேர்ட் பிரபலமான போதே , அதன் பிரம்மா நுயேன் பற்றி எழுத விரும்பினேன். இப்போது அவரது இரண்டாவது கேமை முன்னிடு விகடன்.காமிற்கு எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்.

நுயேன் கவனிக்க வேண்ட்டிய ஆளுமை. வீடியோகேமின் படைப்பாற்றல் குறித்து யோசிக்க வைப்பவர். முக்கியமாக எங்கோ வியட்னாமில் ஒரு மூளையில் இருந்து கொண்டு ஒற்றை கேமால் உலகையே தன்னைப்பற்றி பேச வைத்தவர். இவரைப்போன்றவர்களை தான் நான் நெட்சத்திரங்களாக கருதுகிறேன். அடுத்த தொகுப்பில் நுயேனை சேர்க்கலாமா? சொல்லுங்களேன்!

-அன்புடன் சிம்மன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s