ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ்

இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்கிற்கு ஸ்மார்ட்கிளாசை களமிறக்கியிருக்கிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் ஐகிளாஸ் , இப்போது டவலப்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயல்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்0 உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் சோனி இறங்கியுள்ளது.
வடிவமப்பு நேர்த்தி இல்லாவிட்டாலும் சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் ஹோலோகிராபிக் டிஸ்பிளேவை கொண்டிருப்பதை முக்கியமாக சொல்கின்றனர். இதன் பொருள் இதில் உள்ள லென்ஸ் 85 சதவீதம் ஊடுருவி பார்க்க கூடியதாக இருக்கும். ஹோலோகிராம் நுட்பம் கொண்ட இந்த லென்ஸ்கள் காண்பவர் நோக்கும் பொருள் தொடர்பான தகவல்களை பார்க்கும் காட்சி மீதே ஓட வைக்கும். இவை இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருக்கும் என்றும் சோனி சொல்கிறது. ஸ்மார்ட்போனுடன் இணைந்து இது செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும் .
இமேஜ் சென்சார், 3-மெகாபிக்சல் காமிரா, கைரோஸ்கோப், மின்னணு காம்பஸ் மற்றும் மைக் உள்ளிட்ட அம்சங்களை இந்த கிளாஸ் கொண்டிருக்கிறது. சோனி இப்போதே இந்த கிளாசை மெய்நிகர் வடிவில் டவலப்பர்களுக்கு வெள்ளோட்டம் காட்டி வருகிறது. ஆண்டு இறுதியில் டவலப்பர் வர்ஷன் மற்றும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நுகர்வோருக்கான மாதிரி சந்தைக்கு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

———’’’

ஐபோனுக்குள் என்ன இருக்கு!
1-ihone teradown
ஐபோன் 6 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகச்சிறந்த ஐபோனா? மற்ற ஸ்மார்ட்போன்களுடன் எப்படி ஒப்பிட்டு நிற்கிறது என்றெல்லாம் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்க, முதல் 3 நாட்களில் பத்து மில்லியன் புதிய போன்கள் விற்று தீர்ந்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு மூலம் 4 மில்லியன் ஆர்டர் கிடைத்ததாக ஆப்பிள் தெரிவித்த நிலையில் இந்த தகவல். ஐபோன் மற்றும் ஐபோன் பிளஸ் இரண்டு, சேர்ந்து அமெரிக்க உள்ளிட்ட 10 நாடுகளில் பத்து நாடுகளில் இந்த விற்பனை எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. சீனாவும் சேர்ந்திருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிமாகி இருக்கும் என்று ஆப்பிள் நோக்கர்கள் சொல்கின்றனர். கட்டுப்பாடு காரணங்களுக்காக சீனாவில் இன்னும் ஐபோன் 6 அறிமுகமாகவில்ல.
எல்லம் சரி ஐபோன் 6 இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி கொணிடிருக்கின்றன. தீபாவளிக்கு முன் என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் அதன் பிறகு ஆப்பிள் தளத்திலேயே அந்த தகவல் காணவில்லை. இப்போது நவம்பரில் வரலாம் என ஒரு தகவல். நிற்க மின் வணிக தளம் ஒன்றில் ரூ.99,999 ஐபோன் 6 வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல். கள்ளச்சந்தையில் ஒரு 1,20,000-1,40,000 விலைக்கு கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஐபோனில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அறிய ஆர்வமா? ஐபிக்ஸிட் இணையதளம் புதிய ஐபோனை அக்குவேறு அணி வேராக பிரித்து காட்டியிருக்கிறது. தொழில்நுட்ப சாதனங்களை இப்படி பார்ட் பார்ட்டாக பிரித்து காட்டி அதன் பயன்பாட்டுத்தன்மை பற்றி தீர்ப்பு அளிக்க புகழ் பெற்ற இணையதளம் இது. ஐபோன் 6-ல் மிகப்பெரிய பேட்டரி இருக்கிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களை இந்த தளத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஐபோனுக்குள் பார்க்க ஆர்வமா? https://www.ifixit.com/Teardown/iPhone+6+Plus+Teardown/29206

———–

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை
ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களின் முதல் வரிசை அறிமுகமான பரபரப்பு கூட அடங்கவில்லை,அதற்குள் அடுத்த வரிசை ஆண்ட்ராய்டு ஒன் போன்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
கூகிள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது. அதற்கேற்ப இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை குறி வைத்து பெரிய அளவில் திட்டமும் வகுத்துள்ளது.
முதல் அறிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கார்பன் நிறுவனம் டிசம்பர் மாதவாக்கில் இரண்டாவது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆஸ்ட்ராய்டு ஓஎஸ் தளம் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஸ்பைஸ் நிறுவனமும் ஆண்ட்ராய்டு ஒன் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதே போல குறைந்த விலை போனுக்கு பெயர் பெற்ற இண்டெக்ஸ் நிறுவனமும் தன் பங்கு அறிமுகத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறது.இவை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிகழலாம். முதல் அறிமுகங்கள் மீடியாடெக் சிப்களை கொண்டுள்ளன. இனி குவால்காம் சிப்களும் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு தகவல் ஆண்ட்ராய்டு ஒன் போன்களுக்கான தேவை 2 மில்லியன் வரை இருக்கலாம் என தெரிவிக்கிறது. ஆண்ட்ராய்டு ஒன் போன்களில் மைக்ரோமேக்ஸ் அறிமுகம் முதல் சில மணிநேரத்திலேயே விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

————-

ஆண்களே உஷார்!

ஸ்மார்ட்போன்களை மறந்து தொலைத்த அனுபவம் பலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் பெண்களைவிட ஆண்களே ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை தவறவிடும் வாய்ப்பு இருக்கிறது. – அப்படி தான் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஹாரிஸ் போல் எனும் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த கணிப்பில் பங்கேற்ற ஆண்களில் 46 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் ,லேப்டாப் உள்ளிட்டவற்றை தொலைத்து விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் இது 27 சதவீதம் தான். அது மட்டும் அல்ல இளம் வயதுள்ள ஆண்களில் இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்கிறது. பலரும் ஸ்மார்ட்போனில் நிறுவன தகவல்களை பயன்படுத்துவதால் போன் இழப்பு என்பது தனிப்பட்ட இழப்பு மட்டும் அல்ல, அது அவர்கள் பணியாற்றும் நிறுவங்களையும் பாதிக்கலாம் .
இதற்கு முன்னர் நடத்தப்ப்ட்ட ஆய்வு ஒன்று லேப்டாப் போன்றவை தொலைவதால் நிறுவனங்களுக்கு சராசரியாக 50,000 டாலர் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தது.
ஆக, காசு கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கினால் மட்டும் போதாது அதை பாதுக்காப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!.

———–

வருகிறது டைசன் ஸ்மார்ட்போன்

1-tizenசாம்சங் நிறுவனம் டைச்ன் ( Tizen ) ஓஎஸ்-ஐ மறந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போது சமீபத்திய செய்தி டைசன் ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கிறது. சாம்சங்கின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும் , டைசன் இயங்கு தளம் மீதும் அதற்கு ஆர்வம் இருக்கிறது. ஏற்கனவே ஸ்மார்ட்வாட்சில் டைசன் இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் , சாம்சங் இசட் எனும் டைசன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி விற்பனைக்கு வராமலே விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் டைசன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய சாம்சங் முழுவீச்சில் தயாராகி கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த டைசன் போன் நவம்பர் மாதவாக்கில் அறிமுகம் ஆகலாம் என்றும் இந்திய சந்தையில் தான் இந்த அறிமுகம் நிகழ இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே ஜிவி மொபைல்ஸ் (Jivi ) நிறுவனம் ரூ.1,999 விலைக்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் உள்ள விலை மலிவான ஆண்ட்ராய்டு போன் இது என்கிறது ஜிவி நிறுவனம். ஜிவி ஜேஎஸ்பி 20 எனும் இந்த போன் 3.5 இன்ச் டிஸ்பிளே கொண்டது. 1 GHz பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்பேர்ட் கொண்டது. இரட்டை சிம், வைபீ மற்றும் புளுடூத் தொண்டது.
இன்னொரு பக்கம் டேட்டாவிண்ட நிறுவனமும் தீபாவளி வாக்கில் 2,000 ரூபாய் விலையில் ஸ்மார்ட்போன்களை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம் தான்!

—-
1-checky
உங்களுக்காக ஒரு செயலி

ஸ்மார்ட்போன் என்று இருந்தால் அடிக்கடி கையில் எடுத்து பார்க்க தோன்றதான் செய்யும். மையில் பார்க்க, குறுஞ்சிய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கமாகி விட்டது. இதன் விளைவாக சிலருக்கு கால் வராது போது கூட போனை எடுத்துபார்க்க தோன்றலாம்.
சரி, நீங்கள் எத்தனை முறை ஸ்மார்ட்போனை எடுத்து பார்க்கிறீர்கள் என்று அறிய விருப்பமா? அதற்காக என்றே ஒரு செயலி அறிமுகமாகி இருக்கிறது. செக்கி ( http://www.checkyapp.com/) எனும் அந்த செயலி ( ஆப்) நீங்கள் எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று கண்டறிந்து சொல்கிறது.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் செயல்படுகிறது.
எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று மட்டும் அல்ல எதற்காக எல்லாம் போனை பயன்படுத்துகிறீர்கள் என்று அறியலமாம்!.

———-

நன்றி; தமிழ் இந்து

3 responses to “ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s