சமூக ஊடகத்தை கலக்கும் 15 வயது சிறுவனின் பெண்ணுரிமை பேசும் மடல்

Emma Watsonஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஐநா சபையில் பெண்ணுரிமை தொடர்பாக நிகழ்த்திய உரையின் பாதிப்பால் 15 வயது சிறுவன் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணானோர் இந்த கடித்த்தை டிவிட்டர் மூலம் பகிர்ந்து வருவதோடு, பிரபலங்கள் பலர் சிறுவனின் பார்வைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹாரிபாட்டர் பட வரிசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் இளம்புயல் அவர். கடந்த 20 ம் தேதி எம்மா வாட்சன் ஐக்கிய நாடுகள் சபையில் பாலின சமன் தொடர்பாக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்களை எழுச்சியுன் முன்வைத்தார்.

உலகில் எந்த ஒரு நாடும் பாலின சமன்பாடு அடைந்துவிட்டதாக கூற முடியாது என்று தெரிவித்தவர் பெண்ணுரிமைக்காக ஆண்களும் , பையன்களும் இணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“ ஆண்கள் இந்த பொறுப்பை ஏற்பதன் மூலம், அவர்களின் சகோதரிகளும், மகள்களும், அம்மாக்களும் பாகுபாட்டில் இருந்து விடுபடலாம்’ என்று அவர் அப்போது குறிப்பிட்டார். பெண்ணுரிமைக்கான ஹீபார்ஹெர் எனும் பிரச்சாரத்தின் துவக்கமாகவும் இது அமைந்தது.

எம்மாவின் இந்த எழுச்சி உரை பலரால் பாராட்டப்பட்டது. இளம் நடிகை எம்மா தனது உரை ஆண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே விரும்பியிருப்பார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக 15 வயது சிறுவன் எட் ஹால்டாம் (Ed Holtom ) இந்த உரையால் உந்துதல் பெற்று பெண்ணுரிமையை வலியுறுத்தி கடிதம் எழுதி அந்த கடிதம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
letter2
பிரிட்டனின் லண்டன் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவனான ஹால்டாம் ,எம்மாவின் ஐநா உரையை யூடீயூப்பில் கேட்டு ஊக்கம் பெற்ற நிலையில் , தனது மனதில் தோன்றிய கருத்துக்களை கடிதமாக எழுதி , புகழ்பெற்ற டெலிகிராப் நாளிதழுக்கு வாசகர் கடிதமாக அனுப்பி வைத்தான. பையன்கள் எம்மா வாட்சன் சொல்வதை கேட்க வேண்டும் என்னும் தலைப்பில் வெளியான அந்த கடிதத்தில் ,எம்மா கூறியது முழுவதையும் தான் ஒப்புக்கொள்வதாகவும் ,ஆனால் தனது வகுப்பில் உள்ள மாணவர்களில் பலர் இது குறித்து அறியாமை கொண்டிருப்பது ஏமாற்றம் தருவதாக தெரிவித்திருந்தார். பெண்களுக்கான மற்றும் பையன்களுக்கான எனும் பதங்களை பயன்படுத்துவது மூலம் ஆண் மற்றும் பெண் தொடர்பான ஒரே மாதிரியான கருத்துக்களை மனதில் பதிய வைப்பதாகவும் கூறியிருந்தவர், இது போன்ற வரையரைக்குள் மற்றவர்கள் அடைக்க முயலாமல் இருக்க வேண்டும் என்றும் பாலினம் நம்மை வரையறுக்க அனுமதிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பெண்ணுரிமை என்பது ஆண்களை வெறுப்பதோ அல்லது பெண்களின் ஆதிக்கமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெரியவர்கள் பலரிடம் கூட எதிர்பார்க்க முடியாத புரிதலையும், பக்குவத்தையும் வெளிப்படுத்தியிருந்த அந்த கடிதம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது. நிக்காலெஸ் பெக் (@NicholasPegg ) எனும் ஆங்கில நடிகர் இந்த கடித்த்தை அற்புதமானது என குறிப்பிட்டு டிவிட்டரில் இதற்கான இணைப்பை பகிர்ந்து கொண்டார். நடிகரும் இயக்குனருமான சாமுவேல் வெஸ்ட் (@exitthelemming) இன்றைய பையன்கள் மற்றும் நாளைய ஆண்களிடம் இருந்து நீங்கள் படிக்க விரும்பும் கடிதத்தை ஹால்டாம் எழுதியதாக பாராட்டியிருந்தார்.
ஷரான் ஸ்டேன்லி(@georgidog15 ) என்பவர், ஹால்டாம் வயது 15 தன என்றாலும் தன்னைவிட மூன்று மடங்கு வயதானவர்களுக்கு இருக்க வேண்டிய புரிதல் மற்றும் உள்ளொளியை கொண்டிருப்பதாக பாராட்டியிருந்தார். டிவிட்டரில் மேலும் பலரும் இந்த கடிதத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
ஹால்ஸ்டாம் தனது கடிதம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை கொஞ்சமும் எதிர்பார்க்காவிட்டாலும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஹால்டாம் டிவிட்டரிலும் தீவிரமாக இருக்கிறார். இந்த கடித்த்திற்கு கிடைத்து வரும் பாராட்டுகளை டிவிட்டரில் (@EdHoltom) அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார். எம்மா வாட்சனின் ஐநா சபை உரைக்கான யூடியூப் இணைப்பையும் அவர் ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளார்.
letter2

leter
மாணவரான ஹால்டாமின் இந்த கடிதம் மிகவும் விஷேசமானது. ஏனெனில் நடிகை எம்மா வாட்சனின் ஐநா உரை ,பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் எதிர்மறையான பாதிப்பையும் உண்டாக்கி இருந்தது. இந்த உரைக்கு பின் இணைய உலகில் எம்மா வாட்சன் குறிவைத்து தாக்கப்பட்டார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள் தாக்காளர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த கருத்துக்கு பதிலடியாக எம்மா வாட்சனின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாக இருப்பதாக செய்தி வெளியானது. இதற்காக என்று ஒரு இணையதளமும அமைக்கப்பட்டு அதில் புகைப்படம் வெளியாக்கும் கவுண்டவுன் கடிகாரம் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் இது ஒரு போலி தளம் என்றும், தாக்காளர் சிலரது முயற்சி இது என்றும் தெரியவந்தது.

எம்மா வாட்சனுக்கு பதிலடியாக அமையாவிட்டாலும் இந்த போலி இணையதளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணுரிமை தொடர்பான அவரது பார்வையை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல் ,அவருக்கு எதிராக நிர்வான புகைப்பட வெளியீடு எனும் மிரட்டல் உத்தியை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான முயற்சியாக இந்த இணையதளம் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் சிறுவன் ஹால்டாமின் புரிதலும் முதிர்ச்சியும் வரவேற்க தக்கது தானே!

எம்மா வாட்சனின் ஐநா உரை : https://www.youtube.com/watch?v=gkjW9PZBRfk

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s