பாலைவனச்சோலை பார்க்க அழைக்கும் கூகிள்

Screen Shot 2014-10-06 at 6.09.03 PMஅரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது.
ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூவாக வழங்கி வருகிறது. அந்தரங்க மீறல் புகார் காரணமாக இந்த சேவை சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும், இந்த இன்னொரு பகுதி கொண்டாடக்கூடியதாக இருக்கிறது.
உலகில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் கூகிள் ஸ்டிரீட்வியூ மூலம் படம் பிடித்து காட்டி வருகிறது. இந்த சேவை மூலம் நம்நாட்டி தாஜ்மகாலையும் பார்க்கலாம்.கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலையைம் பார்க்கலாம். துருவப்பகுதியில் உலாவும் பனிக்கரடிகளையும் பார்க்கலாம். கடலுக்கு அடியிலான காட்சிகளையும் பார்க்கலாம்.

3Q6A7167
இப்போது இந்த வரிசையில் அரேபிய தீபகர்ப பகுதியில் ஐக்கிய அரபு குடியரசில் அமைந்துள்ள லிவா பாலைவனப்பகுதியையும் பார்த்து ரசிக்கும் வசதியை கூகிள் ஸ்டிரீவியூ அளிக்கிறது.
லிவா பாலைவனம் அபுதாபி நகரம் அருகே அமைந்துள்ளது. லிவா பாலைவனம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் கண்டுபிடித்த பெருவின் மச்சு பிச்சு மலைப்பகுதிக்கு நிகரானது . மணல் குன்றுகள் நிறைந்த இந்த பகுதி ஐக்கிய அரபு குடியரசில் உள்ள பழமையான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய பகுதியின் மிகப்பெரிய பாலைவனச்சோலையாகவும் கருதப்படுவதோடு செழுமையான வரலாற்றையும் கொண்டது. இங்கு வாழ்ந்த இனக்குழுவை சேர்ந்தவர்களே பின்னாளில் தீபகர்பத்தின் மற்ற பகுதிகளில் பரவி குடியேறியதாக கருதப்படுகிறது.
’கண்ணுக்கு எட்டிய வரை மணல் , நடுவே அழகிய குன்றுகள், தூரத்தில் பார்த்தால் தெரியும் பசுமை. அவை காணல் நீராகவும் இருக்கலாம். சோலையாகவும் இருக்கலாம்’; லிவா பாலைவன காட்சியை கூகிள் ஸ்டிரீட்வியூ இப்படி வர்ணிக்கிறது.
பேரிச்சை மரங்களும் நிரம்பியிருப்பதை பார்க்கலாம். சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த பாலைவனச்சோலையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ஸ்டிரீட்வியூவில் கூகிள் படமெடுத்துள்ளது.
ஸ்டிரீட்வியூ காமிரா பொதுவாக காரில் வைத்து இயக்கப்படும். குறுகலான பகுதி என்றால் ரோபோ போன்ற ட்ரெக்கர் காமிரா மூலம் படமெடுக்கப்படும். லிவா பாலைவனத்தை பொருத்தவரை இந்த காமிரா தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலைவனத்திற்கு ஏற்ப ஒட்டகத்தின் மீது இந்த காமிரா வைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. பாலைபனத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், அங்குள்ள காட்சியை இயற்கையாக படமெடுக்கவும் ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் இந்தியர் ஒருவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இந்த காட்சிகளை 360 கோணத்திலும் பார்த்து ரசிக்கலாம். மணல் குன்றுகள், பேரிச்சை மரங்கள், சோலையின் பசுமை என காட்சிகள் விரிகின்றன.

பாலைவனச்சோலையை பார்க்க: https://www.google.com/maps/views/streetview/liwa-desert?gl=us.
கூகிளின் விளக்கம்: http://google-latlong.blogspot.in/

———–

நன்றி; விகடன்.காம்

கூகுல் ஸ்டீரிட்வியூ பற்றிய முந்திய பதிவுகள்;

1.கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !; https://cybersimman.wordpress.com/2013/12/03/google-73/

2கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!; https://cybersimman.wordpress.com/2014/06/10/google-75/

Advertisements

One response to “பாலைவனச்சோலை பார்க்க அழைக்கும் கூகிள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s