ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது

gஇது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்டும். அது மூடப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தான். மூடப்பட்டது என்பதை ஏன் குறிப்பிட வேண்டும்? ஏனெனில் இணைய உலகில் இணையதளங்கள் மூடப்படுவதும் காணாமல் போவதும் சர்வ சஜகமாக இருப்பதால் தான்.
இந்த பிரச்சனை இணையத்தில் உடைந்த இணைப்புகள் அதாவது புரோக்கன் லிங்க்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு இணையதளத்துக்கான இணைப்பு செயல்படாமல் போவதை தான் இப்படி குறிப்பிடுகின்றனர். அதாவது அந்த இணையதளம் அல்லது சேவை மூடப்பட்டிருக்கலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இணையதளத்தை தொடர்ந்து நடத்துவது லாபம் இல்லதாதாகவோ கடினமானதாகவோ ஆகியிருக்கலாம். பிரச்சனை அதுவல்ல; என்னைப்போன்ற இணையதளங்களை அறிமுகம் செய்பவர்களுக்கு இது ஏற்படுத்தும் சங்கடத்தை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

பயனுள்ளது என கருதி உற்சாகமாக விரிவாக அறிமுகம் செய்த இணையதளம் பின்னாளில் பயன்பாட்டில் இல்லாமல் போவதை அறியும் போது வருத்தம் மேலிடுகிறது. அதிலும் உண்மையிலேயே சிறந்த இணையதளங்கள் காணாமல் போகும் போது இணைய ரசிகன் என்ற முறையில் பெரும் வேதனையில் ஆழ்கிறேன். இது போன்ற தளங்களுக்கு பெரிய பட்டியலே போடலாம். மிகசிறந்த உதாரணங்களாக , வேர்ட்சென்ஸ் மற்றும் கிளாஸ்பைட்ஸ் இணையதளங்களை சொல்வேன்.

கிளாஸ்பைட்ஸ் ஆங்கிலம் கற்பதற்கான அருமையான தளமாக இருந்தது. இதை மிகவும் ரசித்து அறிமுகம் செய்திருந்தேன். ஆனால் இப்போது இல்லை. கிளாஸ்பைட்ஸ் பற்றி இங்கே பார்க்க;https://cybersimman.wordpress.com/2011/07/04/english/

இதே போல ஆன்லைன் அகராதிகள் பற்றிய பதிவில் வேர்ட்சென்ஸ் பற்றி ரசித்து எழுதியிருந்தேன். இதுவும் வெகு சமீபத்தில் காணாமல் போய்விட்டது. இந்த வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல அருமையான தளங்கள் காணாமல் போயுள்ளன.இணையதளங்கள் மட்டும் அல்ல தேடியந்திரங்களுக்கும் இத்தகைய கதி ஏற்பட்டுள்ளது. ஆனால் அறிமுகம் செய்த தளம் தொடர்ந்து செய்லபடுவதையும், மேலும் மேம்பட்டிருப்பதையும் பார்க்கும் போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. ஆனால் காணமால் போன தளங்களை காணும் போது வேதனை ஏற்படுவதோடு , யாரேனும் இதை சுட்டிக்காட்டினால் ஏதோ நானே தவறு செய்த உணர்வு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க இயலுமா? இணையதள அறிமுகத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இத்தகைய கணிப்பு சாத்தியம் தானா?

இது ஒரு புறம் இருக்க, காணாமல் போகும் தளங்களில் பல ரகம் இருக்கிறது. திடிரென் பார்த்தால் அந்த தளத்தில் கோடாடி டொமைன் விற்பனையாளர் விளம்பரம் இருக்கும். இல்லை என்றால் கொரிய எழுத்துக்கள் மின்னும். இப்படி நிறைய மாயங்கள் வெறுப்பேற்றும்.

ஆனால் ஒரு சில இணையதளங்களில் அவை மூடப்பட்ட விவரமும் அதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை பார்க்கும் போது ஏற்படும் ஆசுவாசம் எல்லையில்லாதது. சமீபத்தில் இப்படி உணர்ந்த தளம் http://www.eatdifferent.com/welcome. ஊட்டச்சத்து சார்ந்த பழக்கத்தை மாற்றுவதற்கான இந்த தளம் இனி இல்லை என்று இதன் முகப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல தேடியந்திரமான கியூ அப் மூடப்பட்டுவிட்டது. தேடியந்திர தேடலில் ஈடுபட்டிருந்த போது இதை அறிய முடிந்தது.முன்னதாக கிரெம்லின் என இருந்த தேடியந்திரம் இது. ஆனால் இது இப்போது செயல்பாட்டில் இல்லை. இது மூடப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகி அதுவும் இப்போது காணவில்லை. அந்த அறிவிப்பை தேடிப்படித்து இங்கே கொடுக்கிறேன்; http://webcache.googleusercontent.com/search?q=cache:e5k6eYMnU7IJ:www.cueup.com/+&cd=1&hl=en&ct=clnk&gl=in&client=firefox-a

இந்த விளக்கம் எல்லாம் எதற்காக என்று கேட்கலாம். இணைய உலகின் போக்கை உணர்த்த மட்டும் அல்ல, இணையதள உருவாக்கம் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளதான். மூடப்பட்டு விட்டால் கூட் ஒரு இணையதளத்தின் கருத்தாகம் இன்னும் பயனுள்ளதாக இருப்பதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். இது பற்றி மேலும் விரிவாக எழுத வேண்டும். இத்தகைய தளங்களை வேறு யாரேனும் கூட மீண்டும் துவக்கலாம்.
1inaya
இந்த விளக்கத்திற்கான இன்னொரு காரணம், எனது தொகுப்பு நூலான சைபர்சிம்மன் கையேடு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இது போன்ற உடைந்த இணைப்புகளை எதிர்கொண்டு வருகிறேன். இது பற்றியே ஒரு கட்டுரை சேர்க்கலாம் என இருக்கிறேன்.

முதல் தொகுப்பான இணையத்தால் இணைவோம்-சைபர்சிம்மன் கையேட்டில் மிகசிறந்தது என நான் கருதும் 110 க்கும் மேற்பட்ட தளங்களின் விரிவான அறிமுகம் உள்ளது. இந்த தொக்ப்பு தயாரிப்பின் போது மிக கவனமாக தொடர்து இணையதளம் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதை பரிசோதித்து பார்த்து எழுதினேன். அந்த தளம் பயனுள்ளதாக இருக்குமா ? என்றும் பரிசிலித்தேன். எனவே இந்த தொகுப்பில் உள்ள தளங்கள் அனைத்தும் இயங்கும் தளமாகவே இருக்கும் என நம்புகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் புத்தக்ததை பார்த்து இதை உறுதி செய்து சொல்லலாம். ஏதேனும் அருமையான தளம் இல்லாமால் போயிருந்தால் இப்போது மன்னிப்பு கோருகிறேன். இரண்டாம் பதிப்புல் அப்டேட் செய்துவிடலாம்!

இணையத்தால் இணைவோம் ஆன்லைனில் வாங்க: 1.http://nammabooks.com/buy-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-Inaiyathal-Inaivom-Mathi-Nilayam

2. http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

3.http://www.dialforbooks.in/reviews/innaiyaththal-innaivom.html

4 .https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html

5.http://udumalai.com/?prd=inaiyathal%20inaivom!&page=products&id=14220

Advertisements

2 responses to “ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது

    • ஆம், CUIL அறிமுகமான காலத்தில் கூகிள் கில்லர் என்று கூறப்பட்டது . முன்னாள் கூகிலர்களால் துவக்கப்ப்ட இதன் கருப்பு பின்னணி இன்னமும் நினைவில் உள்ளது. இதே போல் காஸ்மிக்ஸ் தேடியந்திரமும் அற்புதமாக இருந்து காணாமல் போய்விட்டது. இன்னும் பல தேடியந்திரங்களை இப்படி குறிப்பிட முடியும்.
      தேடியந்திரம் தொடர்பாக ஒரு இபுக் எழுதும் முயற்சியில் உள்ளேன். உங்கள் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்,.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s