மழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்

sri_chnசென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? இன்னும் எத்தனை நாள் மழை தொடரும்? இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது? இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா? இப்படி வானிலை தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் சென்னையின் வானிலை வலைப்பதிவர்களின் இணையதளங்களுக்கு விஜயம் செய்யுங்கள். வானிலை விவரங்கள் பற்றியும் மழை பற்றியும் லேட்டஸ் அப்டேட்களை தெரிந்து கொள்வதோடு நீங்கள் மழையின் ரசிகர் என்றால் அந்த ஆர்வத்தையும் ப்கிர்ந்து கொள்ளலாம்.

வானிலை விவரங்கள் என்றவுடன், வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம் தான் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வானிலை ஆய்வு மைய இணையதளம் அதிகாரபூர்வ தகவலுக்கான தளமாக இருந்தாலும் வானிலையை அறிவதற்கான ஒரே இணையதளம் இல்லை.

வானிலை விவரங்களை அறிந்து கொள்வதற்காக வேறு சில இணையதளங்களும் , வலைப்பதிவுகளும் இருக்கின்றன.

இவை வானிலையில் ஆர்வம் கொண்ட அமெசூர் வானிலை நிபணர்களால் நடத்தப்படுபவை. அமெச்சூர் நிபுணர்களே தவிர விவரங்களை பகிர்வதில் இவர்கள் காட்டும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கும். சரியாகவும் இருக்கும்.

வானிலை தொடர்பான நுட்பத்தகவல்கள் மற்றும் செயற்கைகோள் விவரங்கள் இந்திய வானிலை மையம் உள்ளிட்ட அமைப்புகளின் இணையதளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றை கொண்டு ஆர்வம் உள்ள எவரும் வானிலையை கணிக்கலாம். காற்றின் திசை, ஈரப்பதத்தின் அளவு, செயற்கைகோள் படம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வானிலையின் போக்கை கணிக்கும் அடிப்படை தெரிந்திருந்தால் போதும்.
இந்த வானிலை வலைப்பதிவர்கள் இதை தான் செய்கின்றனர். இப்படி வானிலை மாற்றத்தை ஆர்வத்துடன் கவனித்து பகிர்ந்து கொள்ளும் அமெச்சூர் வல்லுனர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். புயல் மழை, சூறாவளி போன்ற காலங்களில் இவர்கள் வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்புடன் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். அவை பயனுள்ளதாகவும் இருக்கும்.

நம்மூரிலும் இத்தகையை வானிலை வலைப்பதிவர்கள் பலர் இருக்கின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அதிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப ஓவரிலேயே அசர வைக்கும் துவக்க வீரர்கள் போல பருவமழை துவக்கத்திலேயே பீய்த்து உதறும் நிலையில் இந்த வலைப்பதிவுகளை தெரிந்து கொள்வது பயனுள்ளதாகவே இருக்கும்.

அந்த வகையில் முதலில் கியாவெதர்பிலாக் (http://blog.keaweather.in/ ) தளத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கியா வானிலை ( http://www.kea.metsite.com/) தளத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த தளத்தை வானிலை வலைப்பதிவர்களின் கூடாரம் என சொல்லலாம். வானிலையை பின் தொடர்வதில் ஆர்வம் உள்ள வலைப்பதிவர்கள் இணையத்தில் ஒன்று கூடி தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இடமாக இந்த தளம் இருக்கிறது.
இந்த வலைப்பதிவில் சிறிது நேரத்தை செலவிட்டால் இரண்டு ஆச்சர்யங்கள் ஏற்படும். ஒன்று வானிலையில் ஆர்வம் கொண்டவர்கள் இத்தனை பேர் இருக்கின்றனரா? என்பது. இன்னொன்று மழையும் மழை சார்ந்த விவரங்களும் இத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா? என்பது.

இரண்டுக்கும் முன்பாக வடகிழக்கு பருவமழை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை கலக்குகிறது எனும் தலைப்பிலான பதிவில் கடலோர தமிழக்த்தில் மழை தொடகிறது, சென்னையிலும் அவ்வப்போது மழை/கனமழை பெய்யும். தீபாவளி தினமான 22, 23 க்கு அடை மழை நிச்சயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே செயற்கைகோள் படமும் இருக்கிறது. இந்த பதிவுக்கு மட்டும் 600 க்கும் அதிகமான பின்னூட்டங்களில் வானிலை ஆர்வலர்கள் கருத்து பரிமாற்றம் செய்திருப்பதை பார்க்கலாம். மழை தொடர்பான சந்தேகங்கள், தெளிவுபடுத்தல்கள், புதிய விவரங்கள் என இவை சுவாரஸ்யமாக இருக்கின்றன.
சென்னையில் எந்த பகுதிகளில் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது , எவ்வளவு மழை பெய்துள்ளது போன்ற தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றனர்.

மற்றொரு பதிவுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் ஒரெ நாளி அதிகமாக மழை பெய்த நாள் என்பது உட்ப்ட பலவேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வேலைக்கு செல்லாமல் மழையை பார்த்து கொண்டிருக்கிறேன் என ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர் வேலைக்கு போகும் வழியில் அப்டேட் செய்வதாக கூறியுள்ளார். கொட்டும் மழையை பார்த்ததும் மனம் துள்ளுகிறது என்றும் பலர் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே இப்படி அசத்தியதில்லை என்று ஒருவர் கூறியுள்ளார். மழை பற்றிய அப்டேட்களை சுவார்ஸ்யமாக தெரிந்து கொள்ள இந்த தளம் ஏற்றது. கியா வானிலை தளம் ஆன்லைன் வானிலை மையமாக செயல்பட்டு உடனுக்குடன் விவரங்களை அளித்து வருகிறது.

இதே போல சுவாரஸ்யமாக இருக்கும் இன்னொரு வலைப்பதிவு , இந்தியன்வெதர்மேன் (http://indianweatherman.blogspot.in/ ) . இஸ்ண்டாகிராம் புகைப்படங்களுடன் இதில் மழை தகவல்கள் பகிரப்படுகிறது.
வேகரீஸ்.இன் (http://www.vagaries.in/ ) அகில இந்திய அளவிலானது . சென்னைக்கும் தனிப்பகுதி இருக்கிறது. புகைப்படங்களுடன் மழை விவரங்களை பார்க்கலாம். பாகிஸ்தான் வானிலை வலைப்பதிவர்களும் இதில் இணைந்துள்ளனர் என்று உற்சாகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மழை தொடர்பான இந்த பேஸ்புக் பக்கத்தையும் சேர்த்துக்கொள்ளவும்; facebook.com/chennairains

——-
நன்றி; விகடன்.காம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s