ஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்

ஆண்ட்ராய்டு சிலைகள்
google-android-lollipop-540x334
கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தை தரவல்லது என கூகிள் சொல்கிறது.

இதில் நோட்டிபிகேஷன் பெறுவதை கட்டுபடுத்தும் வசதி இருக்கிறது. போனை பயன்படுத்தும் போது கால் வந்தால் இடையூறாக தோன்றாது. நோட்டிபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றன என்பதை பொறுத்து புத்திசாலித்தனமாக ரேங்க் செய்யப்படும் . பேட்டரி சேமிப்பு வசதி கூடுதலாக 90 நிமிட நேரத்தை அளிக்க கூடியது. பாதுகாப்பிற்காக என்கிர்ப்ஷன் வசதி இருக்கிறது. மேலும் ஒரே போனை பலர் பயன்படுத்தலாம். இதில் உள்ள கெஸ்ட் யூசர் வசதியை கொண்டு மற்றவர்களுக்கு போனை பயன்படுத்த கொடுக்கலாம். அவர்கள் போனை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் உள்ள தகவல்களை அல்ல; குவிக் செட்டிங் வசதி இருக்கிறது. டெஸ்க்டாப்பிற்கு நிகரான செயல்பாட்டை தரக்கூடியது. தமிழ் உள்ளிட்ட 68 மொழிகளில் பயன்படுத்தலாம். இவை எல்லாம் ஆண்ட்ராய்டு லாலிப்பாபின் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.

எல்லாம் சரி, அதென்ன லாலிபாப் என்று பெயர்? இது ஆண்ட்ராய்டு பெயர் சூட்டலில் இருக்கும் சின்ன சுவாரஸ்யம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 1.5 முதல் துவங்கி எல்லா வர்ஷன்களுக்கும் கப்பேக், டோனெட்,சாண்ட்விச்,ஜெல்லிபீன் ,கிட்காட் என எல்லாம் டெஸ்ர்ட் வகை உணவுப்பொருட்களின் பெயர் தான். அந்த வரிசையில் இப்போது லாலிபாப். அது மட்டும் அல்ல,ஆண்ட்ராய்டின் ஒவ்வொரு வர்ஷனுக்கும் கூகிளின் தலைமை அலுவலகத்தின் முன் அந்த வர்ஷன் அடையாளத்துடன் ஆண்ட்ராய்டு சிலை நிறுவப்படுவதும் வழக்கம். லாலிபாப் சிலையும் இப்போது அலங்கரிக்கிறது.

——–
பாடகரின் ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிய வரவு வர்த்தக நிறுவனத்திடம் இருந்து இல்லாமல் பாப் பாடகரிடம் இருந்து வந்திருக்கிறது. பிலாக் ஐடு பீஸ் குழுவின் தலைமை பாடகரான
வில்.இ.யம் (Will.i.am ) பாடகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர். தொழில்நுட்ப ஆர்வம் மற்றும் தொழில்முனவை நாட்டமும் கொண்ட இவர் தனது ஐ.யம்+ (i.am+ ) நிறுவனம் மூலம் பிளஸ் எனும் பெயரில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்திருக்கிறார். கையணி சாதனம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. 3ஜி இணைப்பு வசதி, வை-பை, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போன் உதவி இல்லாமலே பேசலாம், செய்தி அனுப்பலாம். அதற்கேற்ப சிம்கார்டு வசதியுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலானது தான். பெடோமீட்டர் ,ஆக்ஸ்லோமீட்டர் எல்லாம் இருக்கிறது. ட்விட்டர், பேஸ்புக் அணுகும் வசதியும் இருக்கிறது. இதற்கென்ரே குரல் வழி உதவியாளர் வசதியும் இருக்கிறது. இதற்கான பேட்டரிபேக் உள்ளிட்ட துணை சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது விலை அறிவிக்கப்படவில்லை. பாடகரின் ஸ்மார்ட்வாட்ச் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

————

ஒல்லியான ஸ்மார்ட்போன்

சீன நிறுவனங்களும் கொரிய நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் காஸம் ( Kazam) நிறுவனம் டோர்னடோ 348 எனும் புதிய போனை அறிமுகம் செய்திருக்கிறது. கேள்விப்படாதே நிறுவனமாக இருப்பதாக தோன்றுகிறது. இது பிரிட்டனைச்சேர்ந்த புதிய நிறுவனம். தைவான் நிறுவனமான எச்.டி.சியின் முன்னாள் ஊழியர்கள் ஜேம்ஸ் அட்கின்ஸ் மற்றும் மைக்கேல் கூம்பஸ் இணைந்து துவக்கிய நிறுவனம். இதன் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் உற்பதி வசதி சீனாவில் இருக்கிறது. இதன் புதிய போனில் சிறப்பு என்ன என்றால் 5.15 மீ.மீ ஆழம் கொண்டதாக இருப்பது தான். ஆகையால் இது தான் உலகின் ஒல்லியான ஸ்மார்ட்போன் என்கிறது காஸம். ஏற்கனவே சீனாவின் ஜியோனி நிறுவனம் 5.5 மீ.மீ ஆழம் கொண்ட Elife போன் மூலம் இதற்கு உரிமை கொண்டாடி இருக்கிறது. ஸ்கிரீன் மாற்றல் உத்திரவாதம் , விலை குறைப்பு என அதிரடி உத்திகளை இந்நிறுவனம் கையாண்டு வருவதாக சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில், இந்திய சந்தை பக்கம் வந்தாலும் வரலாம்.

————
ஆப்பிளின் சிம்கார்டு

ஐபோன் 6 அறிமுக பரபரப்பே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் ஆப்பில் புதிய ஐபேட்ஏர் 2 மற்றும் ஐமேக் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட்டின் மெலிதான தோற்றம் , ஐமேக்கின் ரெட்டினா டிஸ்பிலே ஆகியவை பற்றி பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் கவனிக்கப்படாத அம்சமாக இவற்றின் சிம்கார்டு வசதி இருப்பதாக தொழில்நுட்ப தளமான டெக்கிரஞ்ச் தெரிவித்துள்ளது. இந்த சிம்கார்டில் செல்போன் சேவை நிறுவனத்தை சாதனத்தில் இருந்தே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிம் மாற்றமாலே சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளலாம். ஐபேட் ஏர் 2 இந்திய அறிமுகம் பற்றியும் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த சிம்கார்டு மாற்ற வசதியை பயன்படுத்த முடியாது. நம் நாட்டில் அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டை பயன்படுத்த முடியாது. இதனிடையே ஐபோன் 6 இந்திய அறிமுகத்தில் மும்பை போன்ற நகரங்களில் நள்ளிரவில் வரிசையில் நின்று புதிய போனை வாங்கியிருக்கின்றனர். அது தான் ஐபோன் கலாச்சாரம்.

———–

புகைப்பட பாதுகாப்பு

அனுப்பும் புகைப்படங்கள் யாரிடமும் தங்கமால் தானாக மறைந்துவிட வேண்டுமா? புதிய செயலியான யோவோ ( Yovo) இந்த வசதியுடன் அறிமுகமாகி இருக்கிறது. ஏற்கனவே ஸ்னேப்சேட்டிலும் ஸ்லிங்ஷாட் செயலியும் இதை தானே செய்கின்றன என்று கேட்கலாம். யோவோ இவற்றை விட ஒரு படி மேலே போய் அனுப்பும் புகைப்படங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட முடியாத படி பாதுகாப்பு அளிக்கிறது.

ஆப்டிகல் இல்லியூஷன் முறையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது. இதில் புகைப்படம், எடுக்கும் போது அதன் மீது கலங்கலான தன்மை தோன்றும். வேக்மாக வாகனத்தில் செல்லும் போது கம்பி வேலி தோன்றுவது போல இது இருக்கும். ஆனால் புகைப்படத்தை பெறுபவர் அதை திறந்ததும் படம் தெளிகாக தெரியும் . ஸ்கிரீன் ஷாட் எடுக்க முற்பட்டால் மறுபடியும் கலங்கலாகி விடுமாம். ஸ்னேப்சாட்டில் எடுக்கப்பட்டு பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான படங்கள் தாக்காளர்கள் கையில் சிக்கியதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் இத்தகைய செயலி தேவை என்று அந்தரங்க பாதுகாப்பை முக்கியமாக கருதுபவர்கள் நினைக்கலாம்.ஐபோனுக்கு அறிமுகமாகி உள்ளது. ஆண்ட்ராய்டு வடிவம் வர உள்ளது.

———–
ஸ்மார்ட்போன் பாதிப்பு

ஸ்மார்ட்போனை தினமும் எத்தனை முறை எடுத்து பார்க்கும் வழக்கம் உங்களிடம் இருக்கிறது என்று தெரியுமா? அநேகமாக வாரத்திற்கு 1500 முறை நீங்கள் போனை வெளியே எடுத்து பார்க்கலாம். ஏனெனில் புதிய ஆய்வு ஒன்று இப்படி தான் சொல்கிறது. டெக்மார்க் மார்கெட்டிங் நிறுவனம் சார்பில் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அவர்கள் சராசரியான வாரத்துக்கு 1,500 முறை ஸ்மார்ட்போனை எடுத்து பார்ப்பதாகவும், தினமும் 3 மணி நேரம் அதன் திரையை தான் பார்த்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. இது கூட பரவாயில்லை, பலரும் ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் தன்னிச்சையாக அவ்வாறு செய்வதாக கூறியுள்ளனர். அது போலவே தங்களை அறியாமலே பேஸ்புக் மற்றும் இமெயிலை திறந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

சராசரியான் 221 செயல்களுக்காக ஸ்மார்ட்போனை நாடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்போனுக்கே இப்படி என்றால் இன்னமும் ஸ்மார்ட்வாட்சையும் கட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?

———-

நன்றி; தமிழ் இந்து நாளிதழ்காக எழுதியது.

Advertisements

6 responses to “ஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்

  • பொதுவாக நான் இணைய செய்திகளை பகிர்வதில்லை. இவை விதிவிலக்கு. இணைய செய்திகளை விரும்புகீறிர்களா?
   எனது கவனம் எல்லாம் இணையதளங்கள், இணைய போக்குகள் மற்றும் இணைய ஆளுமைகள் மீது தான்.

   அன்புடன் சிம்மன்

  • வாழ்த்துக்கள் .இடைவெளி இல்லாமல் தொடருங்கள். குறிப்பிட்ட தலைப்பில் கவனம் செலுத்தவும். மேலதிக தகவல்கள் அளிக்க பாருங்கள்.
   தங்கள் பதிவில் பலவித டொமைன் பெயர்கள் பற்றி பார்த்தேன் . தமிழில் அதிகம் எழுதப்படாத தலைப்பு அது. நிறைய தகவல்கள் உள்ளன். .லண்டன் போன்ற நகரங்கள் சார்ந்த பெயர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
   தொடருங்கள். வாழ்த்துக்கள்.
   அன்புடன் சிம்மன்

   • நிச்சய்மாக கேட்கலாம். வலைப்பதிவி பயிற்சியை இறுதி செய்து கொண்டிருக்கிறேன். இடையே புத்தக்ம் எழுதும் பணியில் மூழ்கியதால் சற்று தாமதம். கேட்டதற்கு நன்றி. விரைவில் அப்டேட்களி எதிர்ப்பார்க்கலாம்.
    அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s