பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்டீபன் ஹாகிங்!

stephen-hawking-pbsஇனி பேஸ்புக்கில் நீங்கள் நட்பு பரிமாறிக்கொள்வதோடு விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொள்ளலாம். பிரபஞ்ச ரகசியத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஏனெனில் பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். அறிவியலுக்காக தனது வாழ்நாளையே அர்பணித்துக்கொண்ட ஹாக்கிங் 72 வது வயதில் பேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தனது முதல் பகிர்விலேயே அறிவியல் மீது ஆர்வம் கொள்ளுங்கள் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

பேஸ்புக் வரலாற்றில் இது நிச்சயம் மைல்கல் நிகழ்வு தான். ஸ்டீபன் ஹாகிங் அவரது அறிவியலுக்காகவும் , தனது உடல்நல குறைவால் உண்டான வரம்பை வெற்றி கண்டுவரும் விடாமுயற்சிக்காகவும் வியக்க வைத்து வருபவர். எல்லா விதங்களிலும் ஊக்கம் தரும் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான ஹாகிங் , ஏற்கனவே தனது புத்தகங்களின் மூலம் அறிவியலின் மகத்துவத்தை பகிர்ந்து வருபவர். பிரபஞ்சம் தோன்றிய விதம் , கருந்துளைகள் ஆகிய மிரல வைக்கும் விஞ்ஞான விஷயங்களை கூட எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கி எழுதும் ஆற்றல் கொண்ட ஹாக்கிங் இளைஞர்களின் இருப்பிடமாக கருதப்படும் பேஸ்புக்கில் உறுப்பிராகி இருப்பது நிச்சயம் நல்ல செய்தி தான்.

பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங்கின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் எனும் அறிமுகத்துட்டன் அவருக்கான பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதமே இந்த பக்கம் அமைக்கப்பட்டாலும் ஹாகிங் இப்போது தான் முதல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. நம் ஒருவருக்கு ஒருவர் இடயிலான தொடர்பு எல்லையில்லாத முறையில் வளர்ந்திருக்கிறது. இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வமுடன் இருங்கள். நான் எப்போதும் இருப்பேன்” – என்று குறிப்பிட்டுள்ள ஹாகிங் தனது பேஸ்புக் பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஹாங்கிங் பேச்சு, மற்றும் செயல்பாடு பெருமளவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்யேக சாப்ட்வேர் மூலமே அந்த மாமேதை தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக் பக்கம் அவரது குழுவால் நிர்வகிக்கப்பட்டாலும் அவரது தனிப்பட்ட பகிர்வுகள் அவரது கையொப்பமுடன் வெளியாகின்றன.
ஹாகிங்கின் முதல் பகிர்வு 43,000 முறைக்கு மேல் லைக் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 10,63000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.
ஹாகிங் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டுள்ள தி தியரி ஆப் எவ்ர்திங் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு உலகம் முழுவதும் அபிமானிகள் உண்டு. அவர்கள் பேஸ்புக்கில் குவிந்து வருகின்ற்னர். பல்ரும் ஹாகிங் வருகையை போற்றி வரவேற்றுள்ளனர். பின்னூட்டத்தில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை கூறியிருந்தாலும் அவற்றுக்கும் ஹாக்கிங் அப்மானிகளே அழகாக பதில் அளித்துள்ளனர். இது அவரது முதல் பதிவு, வழக்கமான இணைய அபத்ததை தவிர்ப்போம் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் பலருக்கு லைக் கிடைத்திருந்தாலும் ஸ்டீபன் ஹாகிங் பேஸ்புக்கை லைக் செய்து வந்திருப்பது பெரிய விஷயம் தான்.

ஸ்டீபன் ஹாங்கிங் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/stephenhawking?fref=nf
———-

விகடன்.காமில் எழுதியது

One response to “பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்டீபன் ஹாகிங்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s