நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை, நோப்ல பரிசுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நோபல்பிரைஸ்.ஆர்ஜி (http://www.nobelprize.org/ ) எனும் அந்த இணையதளத்தில் இந்த ஆண்டு விருது பெற்ற மேதைகள் மற்றும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதற்கான காரணம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல கடந்த காலங்களில் விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.
நோபல் பரிசை வழங்கும் அமைப்பு நடத்தும் இணையதளம் இது .வடிவமைப்புலும் சரி உள்ளடக்கத்திலும் சரி மிகச்சிறந்த்தாக இந்த இணையதளம் விளங்குகிறது. அமைப்புகளுக்கான இணையதளம் போல சம்பிரதாயமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் துடிப்பாக இந்த இணையதளம் இருப்பதை இதில் விஜயம் செய்தவுடன் தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இந்த தளம் இருப்பது தான் விஷேசம். அலுப்பே இல்லாமல் நோபல் பரிசு விவரங்கள் மற்றும் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஒவ்வொரு துறையிலும் நோபல் பரிசு பெறுவபர்கள் பற்றி வரிசையாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்வுகள் பற்றிய தகவலும் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தளத்தில் இன்னொரு சிறப்பு , சிறுவர்களுக்கும் நோபல் பரிசு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் கல்வி பகுதி.
நோபல் பரிசு தகவல்களை சிறுவர் சிறுமிகளும், சுவாரஸ்யமா படிச்சு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தனிப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது; நோபல் பிரைஸ்/ எஜுகேஷனல் (http://www.nobelprize.org/educational/ ) இது தான் அந்த பகுதி.

இந்த பகுதியின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? கொஞ்சம் கூட போரடிக்காமா ,சுவாரஸ்யமான முறையில் தகவல்களை தெரிஞ்சுக்கலாம் என்பது தான் அது. ஆம், நோபல் மேதைகளின் கண்டுபிடிப்புகளை எல்லாம் சிறுவர்களுக்கு ரொம்ப பிடிச்ச கேம்ஸ் மூலமா கற்று கொள்ள வழி செய்துள்ளனர்.

நோபல் பரிசு பற்றி அறிந்து கொள்ள நீங்க பெரிய ஜீனியசாக இருக்கனும் அவசியம் இல்லை, இந்த கேம்கள் சுவாரஸ்யமா உங்களுக்கு அவற்றை கற்று கொடுக்கும்னு உற்சாகமாக வரவேற்கும் இந்த பகுதியில் பெளதீகம் ,ரசாயனம், மருத்துவம், பொருளாதாரம் என நோபல் பரிசு தரப்படும் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் கேம்கள் இருக்கின்றன. இந்த கேம்கள் விளையாடி பார்க்க ஜாலியா இருப்பதோடு , நோபல் பரிசு பற்றி தெரிஞ்சுக்கவும் உதவியா இருக்கு. உதாரணமா, பாவ்லோ நாய் என்கிற கேமை எடுத்துக்குவோம். பாவ்லோ பரிசோதனை நமக்கு தெரிஞ்சது தான். ரஷ்யாவை சேர்ந்த பாவ்லோ தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு மணி அடிச்சு நாய்க்கு சாப்பாடு போட்டா அந்த நேரம் வந்த பிறகு அதுக்கு பசிக்க ஆரம்பிச்சிடும்னு இந்த பரிசோதனை மூலமா நிருபித்தார். இப்ப நாமும் கூட இந்த பரிசோதனையை செய்து பார்கலாம். இந்த பரிசோதனையோட நோக்கம் என்ன , இதை எப்படி விளையாடுவது ஆகிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கேமை ஆடிவிட்டு பாவலோ பற்றியும் படிச்சு தெரிஞ்சுக்கலாம். பாவ்லோ என்றதுமே இந்த பரிசோதனை தான் நினைவுக்கு வர்யும் என்றாலும் அவருக்கு பரிசு கிடைச்சது இதுக்காக இல்லை. நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் எப்படி ஜீரணமாகிறது என்று அவர் கண்டுபிடிச்சு சொன்னதுக்காக 1904 ம் ஆண்டு மருத்துவ துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பாவ்லோ இது பற்றி ஆய்வு செய்வதற்கு முன்பாக உணவு எப்படி ஜீரணம் ஆகிறது என்பது பற்றி சரியான விவரம் தெரியாம தான் இருந்ததாம்.

இதே போல மரபணு தொடர் என்று சொல்லப்படும் டி.என்.ஏ வுக்கான ஒரு விளையாட்டும் இருக்கு. இந்த விளையாட்டில் டி.என்.ஏ மாதிரிய நாம உருவாக்கி காட்டனும். அதுக்கு உதவிய முதலிலேயே மரபணுனா என்ன ,அது எப்படி இருக்கும் போன்ற விவரங்களை படிச்சு தெரிஞ்சுக்கலாம். டி.என்.ஏ கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு 1962 ல் பிரான்சிஸ் கிரிக்,ஜேம்ஸ் வாட்சன் மற்றும் மவுரிஸ் வில்கின்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கபட்டது.

இதே மாதிரி இரத்த வகை, டிரான்சிஸ்டர் , நோய் எதிர்ப்பு முறை உள்ளிட்ட தலைப்புகளிலும் விளையாட்டுக்கள் இருக்கு. ஒவ்வொரு விளையாட்டா முன்னேறிச்சென்றால் நோபல் கண்டுபிடிப்பு தொடர்பா பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது.

பொருளாதாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான சுவாரஸ்யமான விளையாட்டுக்களும் இருக்கின்றன. உண்மையிலேயே இண்டிரஸ்டிங்கா இருக்கு. இந்த தளத்தில் பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது. நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் கோடீஸ்வரர் ஏற்படுத்தியதுனு படிச்சுருக்கோம். ஆல்பிரட் நோபல் பற்றி மேலும் பல தகவல்கள் இதில் இருக்கு. 17 வயசுலேயே அவருக்கு 5 மொழிகள் தெரியுமாம். டைனமைட்டை கண்டுபிடிச்ச அவர் 87 நாடுகளின் நிறுவங்களை வைத்திருந்தார். அதோட 355 காப்புரிமைகளுக்கும் சொந்தக்காராக இருந்தார்.

நோபல் பரிசு பொதுவா அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் பத்தாம் தேதி வழங்கப்படும் .அன்று தான் ஆல்பிர்டப் நோபலின் நினைவு தினம்.

நோபல் பரிசு பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தான் நோப்ல மேதைகளிலேயே மிகவும் இளையவர் எனும் சிறப்பை ஆஸ்திரேலியாவை சேர்ந்த லாரன்ஸ் பிராக் என்பவர் பெற்றிருந்தார். இவர் பெளதீக துறைக்கான நோபல் பரிசை 1915 ல் பெற்ற போது அவருடைய வயது 25 தான் . ஆனால் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறும் மலாலாவுக்கு 17 வயது.
இது வரை நோபல் பரிசு பற்றி அதிகம் அறிந்திருக்காவிட்டாலும் இந்த இணையதளத்திற்கு சென்று பாருங்கள் நோபல் பரிசு மீது மதிப்பும் ஆர்வமும் தானாக ஏற்படும்.

Advertisements

One response to “நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s