கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

chimp-google-branch_verge_super_wideகூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது ஸ்டீரிவியூ சேவையில் உலகின் அரிய ரக சிம்பன்சி குரங்குகளின் புகலிடமான கோம்பி சரணாலயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆகவே டெஸ்க்டாப்பில் இருந்தே இந்த வனப்பகுதியில் உலாவும் சிம்பன்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

சிம்பன்சி குரங்குகள் என்றவுடன் , ஜேன் குட்டாலும் அவரது முக்கிய ஆய்வும் தான் நினைவுக்கு வரும். சிம்பன்சி குரங்குகள்டனான ஆய்வு மூலம் புகழ்பெற்ற குட்டாலின் ஆய்வு அமைப்புடன் இணைந்து கூகிள் இப்போது சிம்பன்சி குரங்களை ஸ்டிரீட்வியூ வரைபட சேவையில் கொண்டு வந்துள்ளது.

ஜேன் குட்டால் 1961 ம் ஆண்டு சிம்பன்சி குரங்குகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தான்சானியாவின் கோம்பி ஸ்டீரிம் தேசிய பூங்காவிற்கு வருகை தந்தார். கையில் ஒரு வரைபடம் மற்றும் நோட்டுப்புத்தகத்துடன் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சிம்பன்சி குரங்குகள் பற்றிய புரிதலையே தலைகீழாக புரட்டிப்போட்டது. சிம்பன்சி குரங்குகள் மனதிர்களை போலவே கருவிகளை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் அவற்றை உருவாக்கும் திறன் பெற்றிருக்கின்றன என்றும் அவர் கண்டறிந்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்தது.

தொடர்ந்து சிம்பன்சி குரங்குகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்கான தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஜேன் குட்டால் , மனித இனத்தை ஒத்த குரங்கினமாகிய சிம்பன்சிகள் மீது ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

இது வரை அவரது ஆய்வுகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் தான் பார்க்க முடிந்துள்ளது. இப்போது கூகிள் ஸ்டீரிட் வியூ சேவை மூலம் தான்சானியாவின் கோம்பி காட்டுப்பகுதிக்கே சென்று சிம்பன்சிகளை அவை வாழுமிடத்திலேயே பார்க்கலாம்.

கூகிள் வரைபட சேவையின் ஒரு அங்கமான ஸ்டீரிட் வியூவுக்கு காட்சிகளை பதிவு செய்யம் டிரெக்கர் காமிரா மூலம் கோம்பி வனப்பகுதி படம் பிடிக்கப்பட்டு அவற்றின் 360 டிகிரியிலான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்த காமிராவுக்கு என்று வாகனம் உண்டு. ஆனால் வாகனம் செல்ல முடியாத இடத்தில் காமிராவை சுமந்து தான் செல்ல வேண்டும். சமீபத்தில் லிவா அரேபிய பாலைவனத்தை ஸ்டீரிட் வியூவுக்குள் கொண்டு வந்த போது கூகிள் ஒட்டகத்தை காமிராவுக்கான வாகனமாக பயன்படுத்தியது. ஆனால் கோம்பியில் குட்டால் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களே இந்த காமிராவை சுமந்து கொண்டு 9 நாட்கள் படமாக்கியுள்ளனர். விஷ நாகங்கள் மற்றும் எறும்பு படைகள் போன்றவை உலாவும் இடம் என்பதால் கொஞ்சம் ஆபத்தான பணி இது. ஆனால் சிம்பன்சி மீதான ஆர்வத்தால் செய்திருக்கின்றனர்.

சிம்பன்சி ஆய்வில் இல்லமான கோம்பி வனப்பகுதிக்கு வாருங்கள் எனும் அழைப்புடன் இந்த காட்சிகளை கூகிள் ஸ்டிரிட் வியூவில் காட்சிக்கு வைத்துள்ளது.
பூட்டானையும் பார்க்கலாம்

இதே போலவே கூகிள் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பூட்டான் தேசத்தையும் ஸ்டிரிட் வியூ சேவையில் கொண்டு வந்துள்ளது. கோம்பி தேசிய பூங்கா போலவே இதுவும் முக்கியமானது. பூட்டான் எழில் கொஞ்சும் தேசமாக இருந்தாலும் உலகிற்கு மூடப்பட்ட தேசமாகவே இருக்கிறது. அந்நாடு 1999 ல் தான் தொலைக்காட்சிக்கே அனுமதி அளித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான நாடுகள் சுற்றுலா பயணிகளை விழுந்து விழுந்து வரவேற்கும் போது, பூட்டான் மட்டும் சுற்றுலா பயணிகளிடம் நாள் ஒன்றுக்கு 200 டாலர் கட்டணம் வசூலிக்கிறது.

இந்த நிலையில் பூட்டானின் எழில் கொஞ்சம் பகுதிகளை இப்போது ஸ்டிரிட் வியூ மூலம் பார்க்கலாம். கூகிளின் ஸ்டிரிட் வியூ கார் அந்நாட்டில் 3,000 கிமீ பயணம் செய்து காட்சிகளை பதிவாக்கியுள்ளது. பூட்டானின் நிர்வாக தலைமயகம் அமைந்துள்ள புனாக்கா ஜோங் பகுதி மற்றும் தலைநகர் திம்பு ஆகிய இடங்களை காணலாம். தேசிய அருங்காட்சியகததையும் காணலாம். பூட்டானின் காட்சிகள் இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கிறது.

கூடுதல் தகவல் ஐரோப்பியாவின் சின்னஞ்சிறிய நாடான லக்ஸம்பர்க் நாட்டிற்கும் இத்தகையை வசதியை ஸ்டிரிட் வியூ அளிக்கிறது.

சிம்பன்சிகளை காண: https://www.google.com/maps/views/streetview/gombe-tanzania?gl=us

பூட்டானை காண; https://www.google.com/maps/@27.4241755,89.4224632,3a,75y,349.13h,94.96t/data=!3m4!1e1!3m2!1sNRCJxaa97iHVoAsICuNhhQ!2e0

Advertisements

2 responses to “கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s