ஸ்மார்ட்போன் உலகில் …. !

பேட்டரியை காக்க ஆறு வழிகள்!

செல்போனோ ,ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜில் இருப்பது முக்கியமானது .ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம் ( அவஸ்த்தை) எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படதான் செய்கிறது. அதிலும் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அனுபவமும் அவஸ்த்தையும் அடிக்கடி ஏற்படலாம். பேட்டரியின் ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பேட்டரியின் ஆயுலையும் , அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம். இதற்கான ஆறு எளிய வழிகளை கிஸ்மோடோ தொழில்நுட்ப தளம் அடையாளம் காட்டியுள்ளது. அவை;
1. வெப்பநிலை உங்கள் பேட்டரியை பாதிக்கலாம். கூடுமானவரை போனை அல்லது எந்த சாதனத்தையும் சூரிய ஒளியில் நேரடியாக படும் படி வைப்பதை தவிர்க்கவும். அதிக குளிருக்கும் இது பொருந்தும்.
2. பேட்டரியை எந்த அளவி சார்ஜ் செய்யலாம். பொதுவாக முழுவதும் சார்ஜ் செய்வது நல்லது எனும் கருத்து இருக்கிறது. ஆனால் உண்மையில் முழு சார்ஜ் செய்யலாமல் பகுதி அளவு சார்ஜ் செய்வது ஏற்றது என வல்லுனர்கள் சொல்கின்றனர். பகுதி அளவு என்றால்? அதற்கு ஒரு பார்முலா சொல்கின்றனர். 40-80 சதவீதம் வரை சார்ஜில் இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது, சார்ஜ் 40 சதவீதம் வந்ததும், மீண்டும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். ஆனால் வேலை அதிகம் அல்லது வெளியூர் செல்வதாக இருந்தால் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்வதே சரியாக இருக்கும்.
3. சார்ஜிங்கில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷ்யம், முழுவதும் சார்ஜான பிறகு பிளக் செய்யப்பட்ட நிலையிலேயே விடப்படுவதி தவிர்க்கவும். அதிகமாக சார்ஜ் ஆவதும் பேட்டரியை பாதிக்கும்.
4. அதே போல அதிவிரைவு சார்ஜர் மற்றும் போலி சார்ஜர்களை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
5. போனை பயன்படுத்தும் போது மட்டும் அல்ல ஸ்விட்ச் ஆப் செய்யும் போது சார்ஜை கவனிக்க வேண்டும். ஸ்விட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டால் 50 சதவீதம் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லாம் சுலபமான வழிகளாக தான் இருக்கிறது அல்லவா? குறித்து வைத்துக்கொள்ளுங்கள் .

ஆண்ட்ராய்டில் நோக்கியா ஹியர்

நோக்கியாவின் செல்போன் பிரிவை கையகப்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா ஸ்மார்ட்போன்களை நோக்கியா பெயர் இல்லாமல் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது. நோக்கியா லூமியாவில் இருந்து மைக்ரோசாப்ட் லூமியாவுக்கான மாற்றம் துவங்கியிருக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சாதாரண செல்போன்களில் நோக்கியா பெயரை தொடர்ந்து பயன்படுத்த உள்ளது. சமீபத்தில் நோக்கியா 130 புதிய போன் அறிமுகமானது . இரட்டை சிம் கார்டு வசதி கொண்ட இந்த போனின் விலை, ரூ. 1,649. வண்ன டிஸ்பிலே கொண்ட இந்த போன் தன் 32 ஜிபி மெமரி கார்டில் 6,000 பாடல்களை சேமித்து வைக்கும் வசதி கொண்டதாம். 13 மணிநேர டாக்டைம் அல்லது 46 மணிநேர பாடல் வசதி கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் போனை வாங்க விரும்புகிறவர்கள் அல்லது மாற்று போன் தேவை என நினைப்பவர்கள் இதன் இலக்காக கொள்ளப்படுகிறது.
இதனிடையே நோக்கியா அதன் வரைட சேவை வசதியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு விரிவு படுத்தியுள்ளது. நோக்கியா நிறுவனம் செல்போன் பிரிவில் இருந்து வெளியேற்றிவிட்டாலும் நோக்கியா ஹியர் எனும் வரைபட சேவையை உருவாக்கி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரைபட வசதி சாம்சங்கின் கேலகஸி சாதங்கள் மற்றும் சான்சங் கியர் ஸ்மார்ட்வாட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் சாதங்களிலும் ( ஜெல்லிபீன் மற்றும் அதற்கும் மேலான வர்ஷென்கள்) இவற்றை பயன்படுத்தலாம் என நோக்கிய அறிவித்துள்ளது. ஆனால் கூகிள்பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்ய முடியாது, நோக்கிய இணையதளத்தில் இருந்து பெறலாம். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால் இன்னும் பீட்டா வடிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————

ப்ளுடூத் ஸ்விட்ச்

ஸ்மார்ட்போன் மட்டுமா? ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஹோம் என்றேல்லாம் பேசப்படுகிறது. எல்லாமே ஸ்மார்ட்டாகி வரும் நிலையில் வீட்டில் பயன்படுத்தும் மின்விளக்குகளை இயக்கும் ஸ்விட்ச்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா? அது தான் ஆவி-ஆன் (Avi-on ) எனும் நிறுவனம் புளுடூத்தால் வயல்லெஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்விட்சை உருவாக்கி உள்ளது.
இந்த ஸ்மார்ட் ஸ்விட்சில் என்ன விஷேசம் தெரியுமா? பிளக் பாயிண்ட் பற்றி கவலைபடாமல் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதை பொருத்திக்கொள்ளலாம். முக்கியமாக அணி அடிக்கும் அவசியம் இல்லை. அப்படியே ஒட்டி விடலாம். அதன் பிறகு இதை வயர்லெஸ் மூலம் அடாப்டர் வழியே விளக்குடன் இணைக்கலாம். அல்லது ப்ளுடூத் பல்ப வாங்கினால் அதனுடன் இணைத்துவிடலாம். இதன் இயக்கத்தை ஸ்மார்ட்போன் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஒட்டுமொத்த வீட்டையும் குறைந்த செலவில் ஸ்மார்ட் லைட்டிங் வசதி கொள்ளச்செய்யலாம் என்று ஏவி ஆன் தெரிவிக்கிறது.
ஆனால் இன்னமும் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. கிரவுட்சோர்சிங் முறையில் வாங்க ஒப்புக்கொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக இருந்தால் சென்று பார்க்கவும்: http://www.avi-on.com/avi-on

—————

ரெயில் சேவைக்கான செயலி

இந்திய ரெயில்வே செயலி மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ரெயில்களின் பயண நேரம் ,வருகை ,புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான செயலியை ( ஆப்) அறிமுகம் செய்துள்ளது. என்.டி.இ.எஸ் – நேஷனல் டிரைன் என்குவைரி சிஸ்டம் (NTES ) எனும் இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படக்கூடியது. ரெயில்வேயின் ஐடி பிரிவான சி.ஆர்.ஐ.எஸ் (CRIS) மூலம் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் ரெயில்கள் பற்றிய தகவல்களை அறிவதுடன் , ஸ்பாட் யுவர் டிரைன் எனும் அம்சம் மூலம் குறிப்பிட்ட ரெயிலின் தற்போதைய நிலையை எளிதாக அறியலாம். ரெயில்களின் அட்டவணை, நிலையங்களுக்கு இடையிலான ரெயில்கள், ரத்தான மற்றும் மாற்றிவிடப்பட்ட ரெயில்கள் பற்றிய விவரங்களை அறியலாம். ஏற்கனவே வின்டோசுகு அறிமுகமான நிலையில் இப்போது ஆண்ட்ராய்டில் வந்துள்ளது. ரெயில்கள் இயக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியக்கூடிய வசதியாக இது இருக்கிறது. http://www.trainenquiry.com), இணையதளம் மூலமும் அறியலாம். ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes&hl=en.

————–

நோபோன் வேணுமா?

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் அறிமுகமான நோபோன் பரவலாக கவனத்தை ஈர்ததது. பேசமுடியாது, செய்தி அனுப்ப முடியாது ,டிஸ்பிலேவும் கிடையாது, பேட்டரியும் இல்லை என வர்ணிக்கப்பட்ட இந்த நோபோன் உண்மையில் போன் இல்லை. நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன் மீதான சார்பு மற்றும் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கம். எப்போதும் போனின் திரைய பார்த்துக்கொண்டிருக்காமல் நண்பர்களை கொஞ்சம் கவனியுங்கள் என்னும் கருத்தை அழகாக முன்வைத்த இந்த நோபோனுக்கான இணையதளத்தை நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நண்பர்கள் உருவாக்கினர். நையாண்டியாக உதயமான ஐடியா என்றாலும் பலரும் சீரியசாகவே நோபோன் எப்போது வரும் என கேட்கத்துவங்கியதால் , இப்போது இதை உண்மையான தயாரிப்பாக அறிமுகம் செய்யும் உத்தேசத்துடன் கிக்ஸ்டார்ட்டர் இணையதளத்தில் அதற்கான இணைய பக்கத்தை அமைத்துள்ளனர்.
இத்தகைய பேச முடியாத போன் மிகவும் அவசியம் தான் என்று சமீக ஊடகங்களில் சிலர் உற்சாகமாகவும் கூறியுள்ளனர்.
இந்த நோபோனில் இப்போதைய கிரேசான செல்பி அதாவது சுயபடம் எடுக்கும் வசதியும் இருக்ககிறது. இதற்காக கருப்பு வண்ண போனை திருப்பினால் பின்பக்கதில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கிறது. அது தான் காமிரா?
எப்படி இருக்கிறது!

கிக்ஸ்டார்ட்டரில் பார்க்க: https://www.kickstarter.com/projects/nophone-usa/the-new-and-unimproved-nophone
———
ஸ்மார்ட்போன் இல்லாமல் நானில்லை

இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும் போது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் இந்தியர்களில் 95 சதவீதம் பேர் அதை மிகவும் முக்கியமாக கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பயண இணையதளமான எக்ஸ்பீடியா சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியர்கள் ஸ்மார்ட்போனை தங்கள் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுவதாக தெரிவிக்கிறது. 25 நாடுகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 8,856 ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலக அளவில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளிகள் அதிகம் இருப்பதகாவும் உலகிலேயே இந்தியர்கள் தான் விடுமுறை காலத்திலும் ஸ்மார்ட்போனை எடுத்துசெல்பவர்களில் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
ஆச்சயப்படும் வகையில் கூகிள் கிளாஸ் பயனாளிகளும் இந்தியாவில் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண் நிறுவனம் நடத்திய ஆய்வு என்பதால் , இந்தியர்கள் ஸ்மார்ட்போன் மூலம் பயணங்களை திட்டமிடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

————–

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

————–

3 responses to “ஸ்மார்ட்போன் உலகில் …. !

  1. வணக்கம் ஐயா…

    தங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் சிரம் தாழ்ந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்…

    தங்களை போன்ற நடுநிலை தவறாத சான்றோர் கூறும் அறம் சார்ந்த நன்னெறி தகவல்களை முடிந்த மட்டும் என்னால் இயன்ற வரை இளைஞர்கள் வழி கொண்டு செல்கிறேன் அதுமட்டுமில்லாது சமுதாய கழிவுகளை சுத்தம் செய்ய இன்றளவும் என்னோடு பேசும் கல்லூரி மாணவசெல்வங்களுக்கு சிறு உந்து சக்தியாக இருந்து வருகின்றேன், அதில் நான் கண்ட சிறு தீப்பொறி வலைபதிவுக்குள் அறிமுகமாகியுள்ளது… நேரமிருந்தால் சற்று அந்த சுத்த தமிழனை காண்பீர்கள் என்ற உவகையில் இதோ அந்த Website koottruvan.blogspot.in

    நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s