10
நவ
கீழ் iphone பதிபவர் cybersimman கருத்துத் தெரிவிக்கவும்
ஆப்பிளின் ஐபோனில் செயல்படக்கூடிய விதவிதமான செயலிகளின் வரிசையில் இப்போது புகழ்பெற்ற ஒவியமான மோனோலிசா உள்ளிட்ட ஓவியங்களை காணக்கூடிய செயலி அறிமுகமாகியுள்ளது.
பிரன்சின் பாரீஸ் நகரில் உள்ள லவுரே அருங்காட்சியகம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.பாரம்பரியம் மிக்க இந்த அருங்காட்சியகம் கடந்ட 1995 ம் ஆண்டு முதல் இணையதளம் அமைத்து தனது சேவைகளை இண்டெர்நெட் மூலம் வழங்கி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது ஐபோனுகான செயலி(சாப்ட்வேர்)வெளியிடப்பட்டுள்ளது.ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் செயல்படும் இந்த சாப்ட்வேரை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை காண்பதோடு அருங்காட்சியக விவரங்களையும் பெற முடியும்.புகழ்பெற்ற மோனோலிசா ஓவியம் இங்கு தான் உள்ளது.
இண்டெர்நெட் யுகத்தில் அருங்காட்சியகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக இதனை கருதலாம்.
——
link;
http://www.louvre.fr/llv/commun/home.jsp?bmLocale=en
9
நவ
கீழ் இணையதளம் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:சமையல் குறிப்பு. கருத்துத் தெரிவிக்கவும்
பல கை சமையல் பாழ் என்பது பிரபலமான ஆங்கில பழமொழி.ஆனால் சுவையான சமையக்கு கூட்டு முயற்சியைவிட சிறந்தவழி வேறில்லை என்னும் எண்ணத்தோடு சமையல் கலை இணையதளம் ஃபுட்டிஸ்ட்டா செயல்பட்டு வருகிறது.
சமையல் குறிப்புகளை வழங்கும் சிறந்த இணையதளங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த இணையதளம் அமைந்துள்ளது.மேம்பட்டதாகவும் இருப்பதாக சொல்லலாம்.
அதற்கு காரணம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள சமையல் குறிப்புகளை இணையவாசிகள் படித்து பயன்படுத்துவதோடு அவற்றை திருத்தி மேம்படுத்தவும் முடியும். அந்த வகையில் சமையல் குறிப்புக்கான விக்கிபீடியா என்று கூறலாம்.
ஒவ்வொரு உணவுக்கும் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் முறைகள் திட்டவட்டமாக இருந்தாலும் எதாவது பொருளை மாற்றுவதன் மூலம் அல்லது புதிதாக சேர்ப்பதன் மூலம் சுவையை கூட்ட முடியும் அல்லாவா?
இப்படி பலருக்கு தெரிந்திருக்க கூடிய நுட்பங்களை பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.சமையல் பிரியர்களுக்கு சரியான விருந்து என்றே இந்த தளத்தை வர்ணிக்கலாம்.
————
link;
http://www.foodista.com/
8
நவ
கீழ் இணைய செய்திகள் பதிபவர் cybersimman 2 மறுமொழிகள்
எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு கல்வித்துறை.
அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில் இந்த கருத்து முன்வைகப்பட்டுள்ளது.தலைநகர் கோப்பன்ஹேகன்னில் உள்ள பள்ளி உட்பட நாடு முழுவதும் உள்ள 14 பள்ளிகளில் இந்த முறை அமல் செய்யபட்டுள்ளது.
டென்மார்க் இன்டெர்நெட் பய்ன்பாட்டைப்பொருத்தவரி முன்னணியில் உள்ள நாடு. அங்குள்ள பள்ளிகளில் பாடங்களை கற்பிக்க இண்டெர்நெட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் பள்ளிக்கு லேப்ட்டாப்போடு வருவது அங்கே சர்வ சாதரணம்.தேர்வுகளின் போது கூட கேள்வித்தாள் டிஜிட்டல் வடிவில் தரப்படுகிறது.
இப்படி சகலமும் இண்டெர்நெட் மயமாகி வரும் போது கல்வி கற்பிப்பதே ஈன்டெர்நெட் சார்ந்து இருக்கும் போது தெர்வு அறையில் மட்டும் இண்டெர்நெட்டுக்கு தடை என்றால் சரியாக இருக்குமா?மேலும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இண்டெர்நெட்டை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது தேர்வில் வேண்டாம் என்று சொன்னால் ஏற்க கூடியதாக இருக்குமா?
எனவே தான் துணிந்து தேர்வு எழுதும் போது இண்டெர்நெட்டின் துணையை நாடலாம் என்று அறிவித்துள்ளனர்.
பாரம்பரியத்தில் ஊறித்திளைத்த கல்வியாளர்கள் இந்த செய்தியால் திகைத்துப்போகலாம்.இண்டெர்நெட்டை தேர்வு அறையில் அனுமதித்தால் முறைகேடு நடைபெற வழி வகுக்ககாதா என அவர்கள் பதறலாம்.
ஆனால் இண்டெர்நெட் தினசரி வாழ்வின் அங்கமான பின் தேர்விலும் அதனை அனுமதிப்பது காலத்தின் கட்டாயம் என்று டென்மார்க் அரசு கருதுகிறது.அதனால் தான் தகுந்த கட்டுப்பாடுகளோடு இண்டெர்நெட்டிற்கு அனுபதி வழங்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள் ஃஃபேஸ்புக் உள்ளிட்ட எந்த தளத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஆனால் இமெயில் அனுப்பவோ வேறு யாரையேனும் தொடர்பு கொள்ளவோ அனுமதியில்லை.
இத்தகைய கட்டுப்பாடைவிட மாணவ்ர்களின் நேர்மையின் மீது அதிக நம்பிக்கை வைத்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளனராம்.இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்தசில ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வருமாம்.
8
நவ
கீழ் இணைய செய்திகள் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:கூகுல். கருத்துத் தெரிவிக்கவும்
கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷயங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும்.
மாதிரிக்கு சில கேள்விகள்;
பாதாள சாக்கடைக்கான மூடிகள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன?
உலகில் மொத்தம் எத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள்?
ஒரு பேருந்தில் எத்தனை கால்ப் பந்துகளை அடைக்க முடியும்?
கூகுல் நேர்க்காணலில் கேட்கப்படும் கேள்விகளை அமெரிக்க வலைப்பதிவாலர் ஒருவர் பட்டியலிட்டுள்ளார்.அதிலிருந்து எடுக்கப்பட்டவை தான் இந்த கேள்விகள். முழு பட்டியலுக்கு கிழே உள்ள இணைப்பை பார்க்கவும்.
——-
link;
http://blog.seattleinterviewcoach.com/2009/02/140-google-interview-questions.html
7
நவ
கீழ் இணைய செய்திகள், இணையதளம் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:சுற்றுச்சூழல், தண்ணீர், மினரல் வாட்டர். கருத்துத் தெரிவிக்கவும்
முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட்டில்கள் அறிமுகமாயுள்ளன.அமெரிகாவை சேர்ந்த வேப்பர் என்னும் நிறுவனம் இந்த பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக தண்ணீர் பாடில்களை பயன்படுத்திய பிறகு என்ன செய்வோம் தூக்கியெரிந்து விடுவோம் அல்லவா? வேப்பர் பாட்டிலல்களை தாக்கியெரிய வேண்டாம் . தண்ணிர் தீர்ந்த பிறகு அப்படியே மடித்து பையிலேயே அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு விடலாம். அடுத்தமுறை தேவைப்படும் போது மீண்டும் எடுத்து தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டியது தான்.
தண்ணீர் நிரப்ப படும் போது மட்டும் பாட்டில் வடிவம் கொள்ளக்கூடிய பாட்டில் இது என்று வேப்பர் இதனை வர்ணிக்கிறது.விஷேச பிளாஸ்டிக்கை கொண்டு இந்த பாட்டிலை நிறுவனம் தாயாரித்துள்ளது.
இந்த தயாரிப்பின் புதுமைத்தன்மையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.ஆனால் வெறும் வர்த்தக தயாரிப்பாக மட்டும் இதனை வேப்பர் நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.இதனை ஆன்டி பாட்டில் அதாவது எதிர் பாட்டில் என நிறுவனம் குறிப்பிடுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கம் என்பதை வேப்பர் நிறுவனத்தின் இணையதளம் மூலம் அறிய முடிகிறது.ஆனால் இதன் பின்னே இருப்பது வெறும் வணிக சிந்தனை மட்டுமல்ல.பிளாஸ்டிக் தண்ணிர் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டைனை கட்டுப்பதுத்துவதும் தான்.
தளத்தில் உள்ள நிறுவன அறிமுகப்பகுதியில் பாட்டில் தண்ணீரைவிட அதாவது மினரல் வாட்டரை விட குழாய் தண்ணீரே சிறந்தது என கருதுவதால் குழாய் தண்ணிரை சுலபமாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் இந்த பாட்டில்களை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மினரல் வாட்டரில் உள்ள அணுகூலம் என்னவென்றால் வேண்டும் போது வாங்கிக்கொண்டு பயன்படுத்திய பிறகு தூக்கியெரிந்து விடலாம் என்பது தான்.அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை நாம் உணர்வதில்லை.அப்படியே உணர்ந்தாலும் நம்மால் அதிகம் செய்ய முடியாது..காரணம் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இது விளங்குகிறது. அதன் விளைவாக தண்ணீர் தொழில் செழிக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 5000 கோடி மினரல் வாட்டர் பாட்டில்கள் விற்பனையாகினறன. உலகம் முழுவதும் 20000 கோடி மினரல் வாட்டர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.அமெரிக்க தண்ணீர் சந்தையின் தேவைக்கான பாட்டில்களை உருவாக்க ம்ட்டும் 1.7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது.அது மடுமல்லாமல் இவற்றின் போக்குவரத்திற்காகவும் பெருமலவில் எரிபொருள் தேவைப்படுகிறது.எல்லாமே சுற்றுச்சூழலுக்கு சுமை தான்.
இதனை எல்லாம் குறிப்பிட்டுள்ள வேப்பர் நிறுவனம் பலவிதங்களில் குழாய் நீரே பாதுகாப்பனது என தெரிவிக்கிறது.குழாய் நீரை சுலபமாக எடுத்துச்செல்ல வசதியாக பயன்படுத்திய பின் மடித்து வைக்க கூடிய பாட்டில்களை தாயரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
—-
link;
http://vapur.us/home.php#
5
நவ
கீழ் இணைய செய்திகள் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:இணையசேவை, இமெயில், கூகுல். 5 மறுமொழிகள்
கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்தேன்.ஆனால் அதுவே வாசகர்களின் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்திருக்கிறது.
பலர் இந்த பதிவை படித்துவிட்டு கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி என கேட்டுள்ளனர்.ஒருவர் கூகுல் அழைப்பை நான் பெற்றிருந்தால் தனக்கும் அழைப்பு விடுக்குமாறு கேட்டிருந்தார்.கூகுல் அழைப்பை பெறும் அதிர்ஷ்டசாலி நான் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
இருப்பினும் கூகுல் அழைப்பை பெறுவதற்கான வழிகளை தேடிப்பார்த்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் ஒரு விஷயம் கூகுல் அழைப்பை நேரடியாக பெற வழியில்லை.அழைப்பௌ வந்தவர்கள் அழைத்தால் உண்டு.கூகுல் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பியுள்ளது.
ஆனால் அழைப்பு கேட்டு நீங்களே கூகுலுக்கு விண்ணப்பிக்க வழி இருப்பதாக ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.(டெக்டிரீம்ஸ் வெளீயிட்டது)அந்த இணைய படிவத்தை கீழே கொடுத்துள்ளேன்.
அதே போல வேவட்டி இணையதளத்தில் கூகுல் அழைப்பை பெறுவது பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
ஷவுட்மீலவுட் இனையதளமும் இது பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
——–
link;
https://services.google.com/fb/forms/wavesignup/
—————-
link1;
http://www.shoutmeloud.com/shoutmeloud-google-wave-invitation-giveaway.html
4
நவ
கீழ் இணைய செய்திகள் பதிபவர் cybersimman 4 மறுமொழிகள்
கூகுல் வேவ் எனும் பெயரில் கூகுல் அறிமுகம்செய்துள்ள புதிய சேவை இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இமெயிலின் அடுத்த வடிவம் என்று சொல்லப்படும் இந்த சேவை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அதன் சூட்சமங்கள் முழுவதும் பிடிபடாததால் எழுதாமால் இருக்கிறேன்.தொடர்ந்து கூகுல் வேவ் தொடர்பான கட்டுரைகளை படிக்க முற்பட்ட போது இந்த கட்டுரை கண்ணில் பட்டது.
கூகுல் வேவ் சேவையை புரிந்து கொள்ள உதவக்கூடிய கட்டுரை என்பதால் அதன் இணைப்பை தருகிறேன்.படித்து பார்த்து விட்டு சொல்லவும்.
—————
link;
http://www.webpronews.com/topnews/2009/11/03/google-wave-simplified-how-it-basically-works
3
நவ
கீழ் Uncategorized பதிபவர் cybersimman கருத்துத் தெரிவிக்கவும்
மணமக்களுக்கான கூகுல். ஹெல்பர் ஆப் த பிரைடு இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம்.
வடிவமைப்பில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கூகுலைப்பபோலவே இருக்கிறது இந்த தளம்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் மணமகன் அல்லது மணமகள்கள் இந்த தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திருமண சேவை தொடர்பான தகவலகளையும் பெற முடியும்.அந்த வகையில் திருமண தகவல்களுக்கான கூகுலாக இந்த தளம் விளங்குகிறது.
திருமணம் தொடர்பாக எந்த தகவல் வேண்டுமோ அதனை டைப் செய்தால் போதும் அதற்கான தகவல்களும், அந்த சேவை குறித்த விமர்சன குறிப்புகளும் பட்டியலிடப்படுகிறது.
தேடல் கட்டத்தை தவிர முகப்பு பக்கத்தில் வேரு எதுவும் கிடையாது.அந்த அளவுக்கு எளிமையாக உள்ளது .
தேடும் வசதியோடு ஏற்கனெவே தேடியவர்கள் பயனபடுத்திய தேடல் பட்டியலையு பார்க்கும் வசதியும் இருக்கிறது.இந்த பட்டியலில் உலா வந்தால் மற்றவர்கள் தேடியதை கொண்டு திருமணத்திறகான புதிய யோசனைகளையும் பெற முடியும்.
ஆனால் அமெரிக்காவை மையமாக கொண்ட தளம்.எனவே நம்மவர்கள் பார்த்து பாராட்டலாமேத்தவிர அதிகம் பயன்படுத்த முடியாது.
திருமண அழைப்பிதழ் தொடர்பான நம்மூர் இணையசேவை பற்றிய எனது முந்தைய பதிவை பார்க்கவும்.
—————-
link;
http://www.helperofthebride.com/
——–
link;
http://cybersimman.wordpress.com/2009/08/19/wedding/
3
நவ
கீழ் இணைய செய்திகள் பதிபவர் cybersimman 11 மறுமொழிகள்
கூகுல் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.இந்த நகரம் பேய் நகரமாக கருதப்படுவதே பரபரப்பிறகு காரணம்.
பேய் நகரம் என்றதும் பேய் பிச்சாசுகள் உலாவும் நகரம் என்று நினைக்க வேண்டாம்.இது இல்லாத நகரம் என்பதே விஷயம்.அதாவது இந்த பெயரில் உண்மையில் ஒரு நகரம் இல்லவே இல்லை. ஆனால் கூகுல் வரைப்படத்தில் மட்டும் இந்தநகரம் இருப்பதாக காட்டப்படுகிறது.
இல்லாத நகரமெப்படி வரைபடத்தில் இடம் பெற முடியும்.இந்த கேள்வி தான் பலரை குழபத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூகுலின் வரைப்பட சேவையின் முலம் குறிப்பிட்ட நகரம் அல்லது சிற்றுரை கூட அவற்றின் பூகோள அமைப்போடு பார்க்கலாம்.நகரின் சிறப்பம்சம்,அருகே உள்ள இடங்கள் போனற கூடுதல் தகவல்கலையும் இதில் காண முடியும்.
இப்படி தான் இங்கிலாந்தின் லன்காஷயர் அருகே ஆர்க்லேட்டன் என்னும் கிராமம் இருப்பதாக கூகுல் வரைப்படத்தில் காட்டபட்டுள்ளது.அது மட்டுமல்ல அந்த இடத்தில் செய்ல்பட்டு வரும் கடைகள் போன்றவற்றின் விவரங்களும் கொடுக்கப்பட்டுளளன.
ஆனால் இந்த இடத்தில் கிளிக் செய்து பார்த்தால் வெற்று வயல்களையே காண முடிகிறது. ராய் பேஃபீல்டு என்பவர் இந்த இடத்திற்கு நேரில் போய் பார்த்த பொதும் அங்கு வயல்கள் ம்ட்டுமே இருந்திருக்கிறது.
இந்த தகவல் நாளிதழில் வெளியாகி பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் கூகுல் நிறுவனத்தாலேயே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியவிலை என்பது தான்.
வரைப்பட சேவையில் பெரும்பாலான தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இடம்பெறுகின்றன எனன்றாலும் எப்போதாவது தவறு நிகழலாம் என்று மட்டுமே கூகுல் கூறியுள்ளது.
ஆனால் வரைப்பட நிபுணர்களோ வரைப்ப்டம் அனுமதி இல்லாமல் நகலெடுக்கப்படுவதை தவிர்க்க இப்படி பொய்யான தகவல்கள் சேர்க்கப்படுவது உண்டு என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் சிலரோ இது எதிரபாராமல் நடந்த தவறாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எப்படியோ இந்த பேய் நகரம் இண்டெர்நெட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2
நவ
கீழ் Uncategorized பதிபவர் cybersimman கருத்துத் தெரிவிக்கவும்
கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதளங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் வரலாறு தொடர்பான உண்மையான வேட்கை இல்லை எனறால் பலவற்றை படிப்பது கடினம்.
ஆனால் யார் வேண்டுமானாலும் படித்து பார்க்ககூடிய வகையில் மிகவும் வித்தியாசமான கம்ப்யூட்டர் கட்டுரை நெட்டோரொமா எனும் இணைய இதழில் வெளியாகி உள்ளது.
அகர வரிசையில் கம்ப்யூட்டர் வரலாற்றை விவரித்திருப்பது தான் இந்த கட்டுரையின் சிறப்பு.ஆப்பிளில் துவங்கி பிளாக்பெரி, சிஸ்கோ என தொடங்கி டெல்,ஃபோர்டான்.ஜிமெயில் ,டிவிட்டர் என முன்னேறும் இந்த கட்டுரை உண்மையிலேயே படிக்க சுவையாக உள்ளது.
அப்படியே பரவை பார்வை போல கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பி பார்க்கவும் முடிகிறது.
—–
link;
http://www.neatorama.com/2009/10/30/alphabet-of-computing/
அண்மைய மறுமொழிகள்