இணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்!

netchathiranhgalஎனது இரண்டாவது புத்தகமான ‘நெட்’சத்திரங்கள் வெளியாகி இருக்கிறது என்பதை மகிச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம் நூலை தொடர்ந்து இந்த நூல் வெளியாகி இருக்கிறது. மதி நிலையம் சார்பில் முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் நெட்சத்திரங்கள் நூலையும் வெளியிட்டுள்ளது.
இணையம் மூலம் புகழ் பெற்ற மற்றும் புதிய பாதை கண்ட சாமான்யர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் எல்லையில்லா சாத்தியங்கள் என்னை எப்போதுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வியப்பையும், இணையத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் எனும் ஊக்கத்தையும் ஏற்படுத்துவதை இந்த வலைப்பதிவின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளேன்.
அந்த வகையில் இணையத்தை அழகாக பயன்படுத்திக்கொண்டு உலகம் போற்றும் நபர்களாக விளங்கிய இணைய நாயகர்களின் வெற்றிக்கதைகளை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.
முதல் இணைய நட்சத்திரம் துவங்கி , இணையத்தை சூறாவளையாக தாக்கிய முக்கிய ஆளுமைகளை இந்த புத்தக்கத்தில் காணலாம்.
இணையத்தை இப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமா? என இவர்கள் வியப்பில் ஆழ்த்துவார்கள். இவ்வாறு 30 இணைய ஆளுமைகளின் வெற்றிக்கதைகளை படிக்கலாம்.
இவற்றில் உள்ள அனைத்து கட்டுரைகளுமே புதிதாக எழுதப்பட்டவை. வலைப்பதிவில் ஏற்கனவே எழுதிய ஒரு சில ஆளுமைகள் பற்றியும் கூட அப்டேட் செய்து முழுவதும் திருத்தி எழுதியுள்ளேன்.
எனவே என் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இந்த கட்டுரைகள் புதிதாகவும் இருக்கும். புதிய அனுபவமாக இருக்கும்.
புத்தக கண்காட்சியை முன்னிட்டு உருவாக்கிய தொடர் வரிசையில் முதல் தொகுதி இது.
முதல் புத்தகம் போலவே இதை வாங்கிப்படித்து கருத்து சொல்லி ஊக்குவிக்க வேண்டும் என அன்புடன் கோருகிறேன்.
இந்த புத்தகம் எழுதிய அனுபவம் மற்றும் இதில் உள்ள ஆளுமைகள் பற்றிய சிறப்பு தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ள விருப்பம்.
புத்தகம் கிடைக்கும் இடங்கள் மற்றும் ஆன்லைனில் வாங்கும் வசதி பற்றி விரைவில் குறிப்பிடுகிறேன்.
புத்தகத்தின் பிரதி தேவைப்படுபவர்கள் இமெயில் மூலம் கோரினால் நானே அனுப்பி வைக்கிறேன்.
புத்தகம் தொடர்பான உங்கள் எதிர்வினையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் சிம்மன்

6 responses to “இணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்!

    • வணக்கம்.

      தங்கள் பாராடுகளுக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி . புத்தகத்தின் விலை ரூ. 130 என்று பதிப்பகத்தினர் கூறியிருந்தனர். ( 176பக்கங்கள்).

      விவரங்களுக்கு ; Vivek Enterprises,
      No.2/3, 4th Street,
      Gopalapuram,
      Chennai – 600 086.
      Ph: 044-28111506

      அன்புடன் சிம்மன்.

      அவசியம் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

    • மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்.

      புத்தகத்தின் விலை ரூ. ( 176பக்கங்கள்).

      விவரங்களுக்கு ; Vivek Enterprises,
      No.2/3, 4th Street,
      Gopalapuram,
      Chennai – 600 086.
      Ph: 044-28111506

      அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s