மர்மமான கூகுல்

mystery_google_cropகூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து.

மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல எங்கிருந்தோ எடுக்கப்பட்ட ஒரு முடிவு வந்து நிற்கும்.

அநேக‌மாக‌ உங்க‌ளுக்கு முன் கூகுலில் தேடிய‌ ந‌ப‌ர் பார்த்த‌ இணைய‌ப‌க்க‌ம் மர்ம‌ கூகுலால் காட்ட‌ப்ப‌டும்.

ஒரு மெலிதான‌ ஆச்ச‌ர்ய‌த்தை அளித்து நீங்க‌ள் பார்க்க‌ வாய்ப்பில்லாத‌ புதிய‌ த‌ள‌த்தை உங்க‌ள் பார்வைக்கு வைத்து புதிய‌ அனுப‌வ‌ம் அளிப்ப‌தே இந்த‌ சேவையிப் நோக்க‌ம்.ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மர்ம‌ கூகுல் அழைத்துச்செல்லும் த‌ள‌ம் முற்றிலும் எதிர்பாராததாக ஆனால் சுவையான‌தாக‌ இருக்கிற‌து.

நெத்திய‌டி போல‌ தேட‌ல் முடிவுக‌ளை த‌ருவ‌தாக தேடியந்திரங்கள் பெருமைப்ப‌ட்டுக்கொள்ளும் நிலையில் தேட‌லில் சூவார்ஸ்ய‌த்தை புக்குத்தும் வ‌கையில் இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்யப்பட்டுள்ள‌து.

நீங்க‌ளும் ஒரு முறை முய‌ற்சித்துப்பாருங்க‌ள், நிச்ச‌ய‌ம் ர‌சிப்பீர்க‌ள்.——

link;

13 responses to “மர்மமான கூகுல்

  1. சிம்மன் நீங்க விளம்பர வருமானம் ஈட்ட திட்டம்போட்டு செய்துவிட்டு பின்னர் தெரியாததுபோல நடிப்பது ஏன்?

    • நிச்சயம் அத்தகைய எண்ணம் இல்லை நண்பரே.மர்ம‌ கூகுல் இணையதளம் கூகுலுக்கு சொந்தமானது என குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதற்கும் கூகுலுக்கும் தொடர்பில்லை என்னும் வழக்கமான அறிவிப்பு இல்லை.இதன் உரிமையாள‌ர் யார் என்பது புதிராக‌வே இருக்கிறது.யார் கண்டது அது கூகுலாக கூட இருக்கலாம்.பின்னர் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.இல்லாமலும் போகலாம்.இப்போதைக்கு அது மர்மமாக உள்ளது என்பதே விஷயம்

  2. பிங்குபாக்: Twitter Trackbacks for மர்மமான கூகுல் « Cybersimman's Blog [cybersimman.wordpress.com] on Topsy.com·

  3. இன்றைக்கு நீங்கள் சுட்டியை மாற்றி விட்டீர்கள். சரியான முடிவு ஆனால்நேற்று இருந்த சுட்டி, நிச்சயம் விளம்பர சுட்டியே!
    http://go2.wordpress.com/?id=725X1342&site=cybersimman.wordpress.com&url=http%3A%2F%2Fwww.mysterygoogle.com%2F%23

    • தகவலில் தவறேதும் இல்லை.முதலில் இந்த தளம் கூகுலுக்கு சொந்தமானது என நினைத்து விட்டேன்,பின்னர் அதனை திருத்தி விட்டேன்.ஆனால் அதன் உரிமையாளர் பற்றிய தகவல் தெளிவாக இல்லை என்றே பின்னுட்டத்தில் தெரிவித்துள்ளேன்.
      சிம்மன்

பின்னூட்டமொன்றை இடுக