இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.

குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் எல் தளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த தலத்தில் என்ன விஷேசம் என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு இணையதளத்தையும் பி டி எஃப் வடிவில் மாற்றிக்கொள்ளலாம். இணையமுகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் அத்னை பி டி எஃப் வடிவில் சுலபாமாக மாற்றித்தந்து விடுகிற‌து.

சில த‌க‌வ‌ல்க‌ளை அப்புற‌ம் ப‌டிக்க‌லாம் என்று இணைய‌ ப‌க்க‌மாக‌ சேமித்து வைப்பீர்க‌ள் அல்ல‌வா? அத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ளை அப்ப‌டியே பி டி எஃப் ப‌க்க‌மாக‌ மாற்றிகொண்டால் இணைடெர்நெட் இணைப்பு இல்லாத‌ நிலையில் ப‌டிப்ப‌து மிக‌வும் சுல‌ப‌ம்.

அதே போல் ஆவ‌ன‌ப்ப‌டுத்த‌ விரும்பும் த‌ள‌ங்களையும் இப்ப‌டி மாற்றிக்கொள்ள‌லாம்.

மேலும் இ‍ புக் ரீட‌ர் சாத‌ன‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் பி டி எஃப் வ‌டிவில் க‌ட்டுரைக‌ளை ப‌டிக்க‌ முடியும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍………..

http://www.pdfmyurl.com/

———–

பி டி எஃப் கோப்பை சாத‌ர‌ண‌ வ‌டிவில் மாற்றும் வ‌ச‌தி ப‌ற்றிய‌ முந்ததைய‌ ப‌திவு…https://cybersimman.wordpress.com/2009/12/07/pdf/

6 responses to “இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

  1. பிங்குபாக்: Tweets that mention இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற.. « Cybersimman's Blog -- Topsy.com·

  2. மிகவும் உபயோகமான பதிவு நரசிம்மன்,பதிவிற்கு மிக்க நன்றி,தங்களின் கணினி தொழில்நுட்ப பதிவுகள் அனைத்தும் அருமை,தொடர்ந்து தாருங்கள்,

    என்றும் அன்புடன்,மகுடம் மோகன்.

  3. பிங்குபாக்: இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிக்க « தமிழ் நிருபர்·

  4. பிங்குபாக்: பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க‌ உதவும் இணையதளம் « Cybersimman's Blog·

பின்னூட்டமொன்றை இடுக