புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங்கள் பார்த்து கோன்டிருக்கும் போதே நன்பரின் குரல் கேட்கிறது.அந்த படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பதை அவர் உங்களுக்காக விளக்கி கூறுகிறார்.

அதை கேட்டு வியந்து போகீறீர்கள்.நண்பர் புகைப்படத்தின் சிறப்பை தனது குரலிலேயே விளக்கி கூறி அந்த ஒலிக்குறிப்பை இணைத்திருப்பது எப்படி சாத்தியமானது என்ற ஆரவமும் உங்களுக்கு ஏற்பட்டால் பிலர்ட்ஸ் சேவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் நண்பர் இந்த சேவையை பயன்படுத்தி தான் புகைப்படத்துடன் ஒலிக்குறிப்பினை இணைத்துள்ளார்.நீங்களும் விரும்பினால் பிலர்ட்ஸ் மூலம் உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை இப்படி பேச வைக்க முடியும்.

புகைப்படங்கள் என்றில்லை ,வீடியோ காட்சிகள்,டிவிட்டர் பதிவுகள்,இமெயில்கள் மற்றும் பேஸ்புக் பதிவுகளோடு இப்படி ஒலிக்குறிப்புகளை பிலர்ட் மூலம் சுலபமாக இணைத்து அனுப்பமுடியும்.

பிலர்ட் இவற்றை வாய்ஸ் டேகிங் என்று குறிப்பிடுகிறது.இணையத்தில் தற்போது டேகிங் பரவலாக புழக்கத்தில் இருப்பதை நீங்கள் அறியலாம்.ஒரு செய்தி அல்லது புகைப்படத்தின் வகைகளை குறிப்பிட இந்த டேகிங் பயன்படுகிற‌து.

பிலர்ட்ஸ் சேவை மிக அழகாக இந்த பழக்கத்தை குரல் மூலம் அடுத்த கட்டதிற்கு கொண்டு சென்றுள்ளது.

புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டும் போது அவை எப்போது எடுக்கப்பட்டவை என்று விளக்கி சொல்வீர்கள் அல்லவா,அதே போல நீங்கள் சொல்ல நினைப்பதை ஒலிப்பதிவு செய்து புகைப்படத்தோடு ஒட்ட வைக்கும் வசதியை பிலர்ட்ஸ் வழங்குகிறது.

ஆனால் டிவிட்டரில் எப்படி 140 எழுத்துக்கல் என்னும் கட்டுப்பாடு இருக்கிறதோ அதோ போல பிலர்ட்டில் எதையும் 30 நொடியில் சொல்லி விட வேண்டும்.அதே நேரத்தில் குரல் சேவை என்பதால் இதற்கு மொழி ஒரு பிரச்சனை அல்ல.எல்லோரும் தங்கள் தாய்மொழியிலேயே ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்.

பிலர்ட்ஸ் சேவையை பல விதங்களில் பயன்படுத்தலாம்.

புகைப்படம் என்றால் அவை எடுக்கப்பட்ட சூழலை விளக்கலாம்.வீடியோ என்றால் ஒரு முன்னோட்டமாகவோ அல்லது அறிமுக உரையாகவோ பயன்படுத்தலாம்.இமெயில் என்றால் மிக்க அன்புடன் என்று சொல்லி முடித்து   உங்கள் குரல் கையெழுத்தாக பயன்படுத்தலாம். டிவிட்டர் பதிவுகளுக்கும் உங்கள் குரல் மூலம் இன்னும் அழுத்தம் கொடுக்கலாம்.உணர்ச்சிவசப்படலாம்.

மற்றவர்களில் ப‌திவுகளுக்கு பதில் அளிக்கும் போதும் குரல் மூலம் உங்கள் கருத்தை வலியுறுத்தலாம்.

பொதுவாக இணையத்தின் வாயிலாக பகிர்து கொள்ளக்கூடிய எந்த தகவலோடும் இந்த ஒலிக்குறிப்புகளை இணைத்து அனுப்பலாம். புகைபப்டங்கள்,வீடியோ,டிவிட்டர் பதிவுகள் என எல்லாவற்றுக்கும் குரல் குறிப்புகள் மூலம் உயிரூட்டுங்கள் என்று அழைப்பு விடுக்கும் பிலர்ட்ஸ்
மிக சுலபமாக ஒலி குறிப்புகளை இணைத்து இணையத்தில் எங்கும் உங்கள் குரலை ஒலிக்க செய்யுங்கள் என்கிறது .

பேஸ்புக்,டிவிட்டர்,வலைப்பதிவு போன்றவற்றில் இந்தனை பயன்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் குரலை பதிவுச் எய்வது மிகவும் சுலபம்.பிலர்ட்ஸ் தளத்தில் அதற்கான வழிமுறை விளக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்களும் இந்த சேவையை பயனப்டுத்தி கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://blurts.com/

3 responses to “புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

பின்னூட்டமொன்றை இடுக