சேரியில் உதயமான டிவிட்டர் நட்சத்திரம்

நடந்ததை நடந்தபடி பதிவு செய்யக்கூடிய தன்மையே குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனித்தன்மை.அதிலும் நடந்து கொண்டிருக்கும் போது எந்த ஒரு நிகழ்வையும் பதிவு செய்யும் உடனடித்தன்மை டிவிட்டரின் ஆதார பலமாக புகழப்படுகிற‌து.

அதாவது சம்பவ இடத்தில் இருந்தே என்ன நிகழ்கிறது என்பதை டிவிட்டரில் வெளியிடலாம்.140 எழுத்துக்கள் என்னும் வரம்பை மீறி டிவிட்டரை வெளியீட்டு சாதனமாக புகழ் பெற வைத்திருப்பது இந்த உடனடித்தன்மையே.

டிவிட்டரின் இந்த ஆற்றலை மிக அழகாக பயன்படுத்தி கொண்டு புகழ் பெற்றிருக்கிறார் பிரேசில் வாலிபரான ரெனே சில்வா.

சேரிப்பகுதியில் வசிக்கும் சில்வா டிவிட்டர் நட்சத்திரமாக உருவாகியிருப்பதோடு சேரிவாழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவாகியிருக்கிறார்.அதோடு இதழியலாளர்களுக்கு வேண்டிய துணிச்சலை வெளிப்படுத்தியவராகாவும் பாராட்டப்படுகிறார்.

அவர் இந்த துணிச்சலை வெளிப்படுத்திய சூழலை தெரிந்து கொண்டால் நிச்சயம் வியந்து போவீர்கள்.காவல் துறையால் முற்றுகையிடப்பட்டு,துப்பாகிகள் குண்டு மழை பொழிய வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டு கொண்டிருந்த நிலையில் சில்வா துணிச்சலோடு செயல்பட்டு ஒட்டுமொத்த தேசத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

சில்வா பிரேசிலின் ரியோடிஜெனிரோ நகரின் சேரிப்பகுதியில் வசித்து வருகிறார்.இந்த பகுதி போதை பொருள் கடத்தல்கார்கள் புகலிட‌மாகவும் விளங்கியது.இதனால் குற்றங்கள் அதிகரித்த நிலையில் போதி பொருள் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு காவல் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்து சேரிப்பகுதியை முற்றுகையிட்டது.

இந்த முற்றுகையின் போது காவலர்களூக்கும் போதை பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி போதல் ஏற்பட்டு சேரிப்பகுதியே யுத்த பூமியாக மாறியிருந்தது.காவல்ர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற கடத்தல்காரர்கள் கண்மூடித்தனமாக சுட்டப‌டி அருகே இருந்த மலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.

பிரேசில் தொலைக்காட்சிகள் இந்த முற்றுகை நடவடிக்கை பற்றி நேரிடையாக செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன.இந்த பரபரப்பான காட்சிகளுக்கு நடுவே தொலைகாட்சி அரங்கில் பாதுகாப்பு நிபுணர்களும்,சமூக விஞ்ஞானிகளும் இந்த நடவடிக்கையின் சாதக பாதக அம்சங்களை விவாதித்து கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சி காமிராக்கள் மோதலை நேரடியாக ஒளிபரப்பினாலும் இந்த மோதலில் சிக்கிக்கொண்ட சேரி வாசிகளின் நிலை என்ன என்பது பற்றி அதிக தகவல் இல்லை.அத‌னை அறியவும் வழியில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் சில்வா காவலர்களின் முற்றுகையை அடுத்து சேரிப்பகுதியில் நடப்பவற்றை அப்படியே டிவிட்டரில் பதிவு செய்து வந்தார்.17 வயதான சில்வா ஏற்கனவே இதழியலில் ஆர்வம் கொண்டிருந்தவர்.தனது நண்பர்களோடு சேர்ந்து மாத இதழ் ஒன்றை அவர் நடத்தி வந்தார்.சேரியின் குரல் என பொருள் வரும் அந்த இதழின் பெயரிலேயே டிவிட்டரிலும் அவர் செயல்பட்டு வந்தார்.

எனவே சேரியில் மோதல் வெடித்ததுமே அவர் தான் கண்ட காட்சிகளை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள துவங்கினார்.ஆம் உண்மை தான்,சேரியின் ஜெர்மன் அரங்கில் துப்பாக்கி சண்டை நடக்கிறது என்பதை நான் உறுதி செய்கிறேன் என முதல் குறும்பதிவை வெளீயிட்ட அவர் தொடர்ந்து முற்றுகையின் விவரம் மற்றும் சேரியின் பதட்டமான நிமிடங்களை பதிவு செய்தார்.

ஜெர்மன் அரங்கின் மீது ஹெலிகாப்டர் பறப்பதி பார்க்கிறேன்.அருகே உள்ள குரோட்ட பகுதியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் ஓசை கேட்கிறது என்று மற்றொரு பதிவு அமைந்திருந்தது.ஜெர்மன் அரங்கில் இருப்பவர்கள் அடித்து உதைக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன என அவரது பதிவுகள் தொடர்ந்த போது முற்றுகையின் மையத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்த்தக்கூடியவையாக அவை அமைந்திருந்த‌ன.

மோதலின் தீவிரத்தை மட்டும் அல்லாமல் இதில் சிக்கி கொண்ட அப்பாவி மக்களின் இடர்களையும் இந்த பதிவுகள் சுட்டிக்காட்டின.சில நேரங்களில் தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகளில் உள்ள தகவல் பிழையை திருத்தும் வகையிலும் இந்த பதிவுகள் அமைந்திருந்தன.

அது மட்டும் அல்ல செல்போன் காமிரா மூலம் துப்பாக்கி சண்டையை நேரடியாக காண்பிக்கவும் செய்தார்.

இந்த மோதல் காட்சிகளை தேசமே தொலைக்காட்சிகளில் பதட்டத்தோடு பார்த்து கொண்டிருந்த நிலையில் சில்வாவின் பின்தொடர்பாளர்கள் அவரது டிவிட்டர் பதிவுகள் மூலம் நட‌ப்பவற்றை இன்னும் துல்லியமாக அறிந்து கொண்டனர்.

பலர் அவற்றை படிக்கும் போதே மனதுக்குள் சபாஷ் போட்டனர்.இந்த பதிவுகளை ஒரு சில பத்திரிகையாளர்களும் பின்தொடர்ந்தனர்.சம்பவ இடத்திலிருந்தே நேரடி பதிவாக வெளியான இந்த தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த பத்திரிகையாளர்கள் அவற்றை தங்கள் வாசகர்களுக்காக மறுபதிவு செய்தனர்.

இத பயனாக மேலும் பலர் இந்த பதிவுகளை பின்தொடர்ந்தனர்.சில்வாவோ இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோதல் காட்சிகளை டிவிட்டரில் படம் படித்தபடி இருந்தார்.இந்த பணியில் அவரது சக நிருபர்களும் ஈடுபாடிருந்தனர்.எல்லாவற்றையும் சில்வா ஒருங்கிணைத்து கொண்டிருந்தார்.
மோதல் துவங்கிய சனிக்கிழமை நன்பகல் முதல் முடிவுக்கு வந்த திங்கட் கிழமை மாலை வரை அவர்கள் டிவிட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

அதன் பிறகு கூட எப்போதெலாம் துப்பாகி சத்தம் கேட்டதோ அப்போது உடனடியாக பதிவிட்டனர்.

இதனிடையே டிவிட்டரில் உயிர்பெற்ற இந்த தகவல்களை படிப்பவர்கலின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.பிரபல பத்திரிகையாளட்களால சுட்டிக்காட்டபட்டதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த ப‌திவுகளை படித்தனர்.

வாசகர்களில் பலரும் சில்வாவின் துணிச்சலை பார்த்து விய‌ந்து போய் பாரட்டவும் செய்தனர்.சிலர் டிவிட்டர் பதிவிலேயே பாராட்டையும் குறிப்பிட்டனர்.விளைவு நாடே அவரை பற்றி பேசத்துவங்கியது.

பொதுவாக சேரில் வசிக்கும் இளைஞர்கள் பற்றி மேட்டுகுடியினர் மற்றும் நடுத்தர மக்களுக்கு நல்லபிப்ராயம் கிடையாது.தவறான அபிப்ரயங்க‌ளே உண்டு.இதனை சில்வா மாற்றிக்காட்டி அனைவரையும் பாரட்ட வைத்திருந்தார்.இளைஞர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று புகழப்பட்டார்.

செய்திகளையும் நிகழ்வுகளையும் பதிவு செய்வதில் டிவிட்டருக்கு உள்ள ஆற்றலை உணர்த்திய டிவிட்டர் நட்சத்திரமாகவும் பாராட்டப்படுகிறார்.

பின்னூட்டமொன்றை இடுக