ஓவியங்களுக்கான விக்கிபீடியா;

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம் அளிக்கிறது டிராசம்(  http://www.drawsum.com/   ) இணையதளம்.

ஒரு திறந்தவெளி கலை முயற்சி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளத்தை ஓவியங்களுக்கான விக்கிபீடியா என குறிப்பிடலாம்.விக்கிபீடியாவை முன்னோடியாக கொண்டே இந்த தளம் உருவக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விக்கிபீடியா இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவானதோ அதே போல இந்த தளமும் காலப்போக்கில் இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் மக்கள் ஓவியமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பது மிகவும் சுலபமானது.இதில் உள்ள கேன்வாஸ் பகுதியை கிளிக் செய்தால் அதில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவிய பகுதிகள் இடம்பெற்றிருக்கும்.நீங்கலூம் உங்கள் பங்கிற்கு ஓவியத்தை வரையலாம்.

புதிது புதிதாக இணையவாசிகள் வரைந்து கோண்டே இருப்பார்கள் என்பதால் இந்த ஓவியம் தினம் மாறிக்கொண்டே இருக்கும்.வளர்ந்து கொண்டே இருக்கும்.

பெரிய கலைப்படைப்பாக இது உருவாகுமா என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமான முயற்சி.

இணையதள முகவரி;http://www.drawsum.com

பின்னூட்டமொன்றை இடுக