நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர்.

இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் உண்டு.அது ஒரு புறம் இருக்க நண்பர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது தான் சரி என நினைப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்க் கிளவுடி என்னும் எந்த செயலி நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை சுலபமாக்கி முடிவு எடுப்பதை எளிதானதாக ஆக்குகிறது.

புதிதாக செல்போன் வாங்கும் முன் எந்த மாடல் சிறந்தது என தெரிந்து கொள்ள நினைத்தாலோ அல்லது விடுமுறையை கழிக்க எந்த ஊருக்கு செல்லலாம் என்று தீர்மானிக்க விரும்பினாலோ அது குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய இந்த செயலியை பயன்படுத்தலாம்.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்ட பின் எப்போது தோழர்களின் கருத்துக்கள கேட்க விரும்பினாலும் இந்த செயலியை இயக்கி வைக்கலாம்.

உடனே இந்த செயலி ஒரு விசுவாசமான உதவியாளர் போல நண்பர்களுக்கு கேள்வியை அனுப்பி வைத்து அவர்களின் பதிலை பெற்றுத்தரும்.

பதில் சொல்வதற்கு நண்பர்களும் ஐபோன் வைத்திருக்க வேண்டும் என்றோ இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை.எஸ் எம் எஸ் வசதி உள்ள எந்த போனில் இருந்தும் பதிலை அனுப்பி வைக்கலாம்.

கருத்துக்களை பரிசிலித்த பின்னர் என்ன முடிவு எடுத்தோம் என்பதையும் இந்த செயலி மூலமே நண்பர்களுக்கு தெரிவித்து விடலாம்.

உடனடியாக முடிவு எடுக்க நினைக்கும் நேரங்களில் நண்பர்களின் ஆலோசனை பெற இந்த செயலி உதவியாக இருக்கும்.

செயலி முகவரி;http://www.askcloudy.com/

2 responses to “நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

பின்னூட்டமொன்றை இடுக