கொடுப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்!

பொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது.

இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.

இந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது.கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது.பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று தேடி பார்த்து கொள்ளலாம்.

உலகலாவிய தளம் என்பதால் இணையவாசிகளின் இருப்பிட நகரத்தின் அருகாமையில் பட்டியலிடப்படுள்ள பொருட்களே காட்டப்படுகின்றன.எந்த எந்த நகரங்களில் இருந்து விஜயம் செய்கின்றனரோ அந்த நகரின் அருகாமையில் தரப்படும் பொருட்களை பெறலாம்.

இப்போது தான் துவக்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பரிமாற்றங்கள் இல்லை.ஆனால் நம்க்கு பயன்படாதது யாருக்கேனும் பயன்படட்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் பிறருக்கு கொடுப்பதை உக்குவிக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தளம் என்பதால் இது பிரபலமானால் நன்றாக இருக்கும்.

அதிலும் 100 கோடிக்கும் மேல் மக்கள் வாழும் இந்திய திருநாட்டிலிருந்து ஒருவர் கூட இன்னும் உறுப்பினராகவில்லை.சென்னை நகரில் இருந்து நுழைந்தால் இன்னும் ஒரு சென்னைவாசி கூட பொருளை தருவதாக பட்டியலிடவில்லை.நீங்கள் ஆரம்பித்து வையுங்களேன் என்று அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.

இணையதள முகவரி;http://www.yaakit.com/items.html

பின்னூட்டமொன்றை இடுக