ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணையதளம் இப்படி டிவிட்டர் செய்தி உரக்க ஒலிக்க வழி செய்கிறது.

ஒரு கருத்தை ஒருவர் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பதை விட பல்ர் சேர்ந்து சொன்னால் ,அதிலும் ஒரே நேரத்தில் சொன்னால் அதன் சக்தியே தனியாக இருக்கும் தானே.அதை தான் டிவிட்டர் உலகில் சாத்தியமாக்கி தர முயல்கிறது இந்த சேவை.

அதாவது ஒருவர் பகிர்ந்து கொள்ள விரும்பும் டிவிட்டர் செய்தியை ஒரே நேரத்தில் பலரால் பகிர்ந்து கொள்ளப்பட‌ உதவுகிறது .ரஜினி பாணியில் சொல்வதானால் ஒரு முறை டிவீட் செய்தால் நூறு முறை டிவீட் செய்த விளைவை ஏற்படுத்த முயல்கிறது.

குறிப்பிட்ட ஒரு கருத்திற்கு ஆதரவு திர‌ட்ட விரும்பும் போது அந்த சேவையை பய‌ன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு டிவிட்டர் பயனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த செய்தியை உரத்து சொல்ல நினைக்கின்றனறோ அதனை இந்த தளத்தில் உள்ள கட்டத்தில் இடம் பெறச்செய்து விட்டு,அதனை எத்தை பேர் டிவீட் செய்ய வேண்டும் ,எப்போது டிவீட் செய்ய வேண்டும் என்று குறிப்பிட வேண்டியது மட்டும் தான்.

அதன் பிறகு உங்கல் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து ஆத‌ரவு திர‌ட்டலாம்.அவர்கள் தங்கள் நண்பர்களிடம் ஆதர‌வு திர‌ட்டலாம்.குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் குவிந்ததும் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அந்த டிவிட்டர் செய்தி அனைவராலும் டிவீட் செய்யப்படும்.

அதாவ‌து ஒரே நேரத்தில் ஒரே செய்தியை அனைவரும் டிவீட் செய்வார்கள்.

இதன் மூலம் டிவிட்டர் வெளியில் நாம் சொல்ல நினைக்கும் கருத்தை நண்பர்கள் படைசூழ உரத்து சொல்லலாம்.அது மட்டும் அல்ல டிவிட்டரில் குறிப்பிட்ட அந்த தலைப்பு முன்னிலை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

டிவிட்டர் உலகில் முன்னிலை பெறும் தலைப்புகளுக்கு இருக்கும் செல்வாக்கும் வீச்சும் அனைவரும் அறிந்தது தான்.டிரென்டிங் டாபிக் என்று இவை குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் ஒரு விஷ‌யத்தை டிவிட்டரில் முன்னிலை பெற வைப்பது சுலபமான விஷயம் அல்ல;ரீட்வீட் மற்றும் ஹாஷ்டேக் போன்ற டிவிட்டர் ஆயுதங்களை கையில் எடுத்து கொண்டு ஒரு பிரச்சார இய‌க்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு சுலபமான மாற்று வழியாக ‘ஷவுட் ஏ டிவீட்’ சேவை அறிமுகமாகியிருக்கிற‌து.

இந்த சேவையின் மூலமாக எந்த ஒரு டிவிட்டர் செய்திக்கும் நாம் விரும்பும் அளவுக்கான ஆதரவாளர்களை திரட்டி அந்த செய்தியயை ஒரே நேரத்தில் டிவிட்டர் வெளியில் ஒலிக்க செய்து கவனத்தை ஈர்க்கலாம்.

அது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னதாக திட்டமிட்டு அந்த தினத்தின் போது நாம் சொல்ல நினைக்கும் செய்தியை அதிரடியாக சொல்லலாம்.தலைவர்களில் பிறந்த நாள்,விடுதலை தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது இவ்வாறு செய்யலாம்.

நாமும் கூட நம் பங்கிறகு அடுத்த முறை முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் வருவதற்கு முன்பாக இலங்கை ராணுவத்தின் படுபாதக செய‌லை கண்டிக்கும் செய்தியை டிவிட்டர் வெளியில் வலுவாக ஒலிக்கச்செய்யலாம்.

இணையதள முகவரி;http://www.shoutatweet.com/

3 responses to “ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.

பின்னூட்டமொன்றை இடுக