தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌.

பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன.

பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள்.

எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த தளங்களின் ப‌க்கம் செல்வது உண்டு.மற்றபடி தினம் ஒரு சொல் அறிவோம் என்பது போல தினம் ஒரு பொன்மொழி அறிவோம் என்றெல்லாம் யாரும் முயற்சிப்பதில்லை.

ஆனாலும் கூட பள்ளிக்கூட சுவர்களிலோ அல்லது அலுவலக கரும்பலகைகளிலோ எழுதப்படும் பொன்மொழிகளை நாம் பார்த்து ரசித்து சிந்திக்காமல் இருப்பதில்லை.ரீட்ரஸ் டைஜஸ்ட் போன்ர பத்திரிகைகளில் முன் பக்கத்தில் இடம் பெறும் பொழ்மொழிகளை முதலில் படித்து மகிழும் வாசக‌ர்கள் எண்ணற்றவர் இருக்கின்றனர்.

இவ்வளவு ஏன் நண்பர்களின் வீடுகளில் அழகான காட்சி அமைப்போடு இருக்கும் படங்களில் இடம் பெற்றிருக்கும் பொன்மொழி வாச‌கங்களை எல்லோருமே படித்து ர‌சிக்கவே செய்கிறோம்.

இருந்தும் ஏன் பொன்மொழி தோட்டம் போன்ரா தளங்களுக்கு நாம் தினமும் சென்று தின‌ம் ஒரு பொன்மொழியை படித்து ஊக்கம் பெறுவதில்லை.

இதற்கான் பதில் தெரியவில்லை.ஆனால் அழகான ஒரு தீர்வு இருக்கிறது.பொன்மொழி ரகசியம் (கோட் சீக்ரெட்) என்னும் இணைய‌தளம் தான் அந்த தீர்வு.

இந்த தளத்திற்கு ஒருமுறை சென்றால் போதும் அதன் பிறகு தினந்தோறும் பொன்மொழிகள் உங்களை தேடி வரும்.

அதாவது இமெயிலில் தினம் ஒரு பொன்மொழி அனுப்பி வைக்கப்படும்.அதற்கு உறுப்பினராக‌ பதிவு செய்து கொள்ள‌ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் சிந்தித்து ஊக்கம் பெருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதன் உறுப்பினர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழியை இமெயிலில் அனுப்பி வைக்கிற‌து.எப்படியும் தினமும் இமெயில் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிற‌து.பலருக்கு காலை எழுந்ததுமே இமெயில் முகத்தில் விழிக்கும் பழக்கமும் இருக்கிற‌து.

எனவே இந்த சேவையில் உறுப்பினராகிவிட்டால் தினமும் பொன்மொழி தளங்களின் பக்கம் போகாவிட்டாலும் குட இமெயில் வழியே புதிய பொன்மொழியை படித்து விடலாம்.

தினம் ஒரு பொன்மொழியை அனுப்பி வைப்பதோடு இந்த தளம் அந்த பொன்மொழி தொடர்பான கேள்வி ஒன்றையும் அனுப்பி வைத்து சிந்திக்க வைக்கிற‌து.

இந்த தள‌த்தில் இன்றே சேருங்கள் ;நாளை முதல் பொன்மொழி படித்து ஊக்கம் பெருங்கள்.

பொன்மொழி தடைகள்

அட இந்த தளம் எளிமையாக இருந்தாலும் இதன் பின்னே உள்ள கருத்தாக்கம் அழகாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் இதே போன்ற அசத்தலான பொன்மொழி இணையதளம் இன்னொன்றும் இருக்கிற‌து.

இந்த‌ தளம் தினம் ஒரு பொன்மொழியை அனுப்பி வைக்கிறது என்றால் கோட் ஸ்டம்ப்லர் என்னும் இந்த புதிய தளம் பொன்மொழிகளில் தடுக்கி விழ வைக்கிறது. இந்த தளத்தில் நுழைந்துவிட்டால் பொன்மொழிகல் இடறிக்கொண்டே இருக்கும்.

செறிவான ,அடர்த்தியான உள்ளடக்கத்தை மீறி பொன்மொழி தளங்கள் ஏன் கவனத்தை ஈர்ப்பதாக அமையவில்லை என்பதற்கு பதில் அளிப்பது போல இந்த தளம் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமை என்று கூட சொல்ல வேண்டாம்.புத்திசாலித்தனமாக என்று சொல்லலாம்.

இந்த தளத்தில் நுழைந்தால் மற்ற பொன்மொழி தளங்கள் பார்க்க கூடியது போல பொன்மொழிகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப பல்வேறு தலைப்புகலில் தொகுக்கப்படுள்ள‌தையோ அல்லது அறிஞர்களின் அகர‌வரிசைப்படி பட்டியலிடப்பட்டிருப்பதையோ பார்க்க முடியாது.

மாறாக பளிச்சென சுத்தமாக இருக்கும் முகப்பு பக்கத்தின் நடுவே ஒரே ஒரு பொன்மொழி மட்டும் மின்னி கொண்டிருக்கும்.ஒவ்வொரு முறை இந்த தளத்தில் நுழையும் போதும் இப்படி ஏதாவது ஒரு பொன்மொழியை காணலாம்.

இந்த பொன்மொழி மாறிக்கொண்டே இருக்கும் .ஆக எப்போது இந்த தளத்திற்கு வருகை தந்தாலும் சரி ஒரு புதிய பொன்மொழியை படிக்கலாம்.சும்மா தலைப்புகளியோ அறிஞர் பெயர்களையோ தேடி கொண்டிருக்க வேண்டாம்.

அது மட்டும் அல்ல;முகப்பு பக்க்த்தில் மின்னும் பொன்மொழிகளில் ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் கணமானவையாகஅ கொட்டை எழுத்துக்களில் காணப்படும்.அந்த வார்த்திகளின் மீது கிளிக் செய்தால் அந்த சொல் தொடர்பான பொன்மொழியை படிக்கலாம்.அதன் பிற‌கு அதில் உள்ள‌ சொல்லை கிளிக் செய்தால் வேறு ஒரு பொன்மொழிக்கு தாவலாம்.இப்படி பொன்மொழிகளாக தாவிக்கொண்டே இருக்க‌லாம்.

கூகுல் போன்ற எளிமையான் முகப்பு பக்க்த்தோடு எந்தவித கவனச்சிதறலும் இல்லமால் சுவாரஸ்யமான முறையில் பொன்மொழிகளை இந்த தளம் அறிமுகம் செய்கிற‌து.

அதே நேரத்தில் தேவையான் பொன்மொழிக‌ளை குறிப்பீடு தேடும் வசதியும் இருக்கிற‌து.இடது பக்கத்தில் மேலே தேடல் வசதிக்கான‌ கட்டம் இருக்கிற‌‌து.

இணையதள முகவரி;http://www.quotesecret.com/

http://www.quotestumbler.com/

7 responses to “தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

    • ஒருவிதத்தில் நான் கதைசொல்லி தான் நண்பரே.வெறும் இணைப்புகளை மட்டும் சொல்வதில் என்ன பயன்?ஒரு தளம் பற்றி எழுதுவதற்கான காரணங்களை விளக்க வேண்டாமா?

      அன்புடன் சிம்மன்.

  1. பிங்குபாக்: பொன்மொழிகளுக்கான தேடியந்திரம். « Cybersimman's Blog·

  2. பிங்குபாக்: பொன்மொழிகளுக்கான தேடியந்திரம். | Cybersimman's Blog·

பின்னூட்டமொன்றை இடுக