ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க நீ எம்மான் !

ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டிருக்கிறார்,நேசிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரது மறைவிற்கான‌ இரங்கல்களும் புகழாஞ்சலிகளும் தெளிவாகவே உணர்த்துகின்றன.ஜாப்சின் சாதனைகளையும் பங்களிப்பையும் நினைவு கூறும் கட்டுரைகள் அவர் எந்த அளவுக்கு பன்முக ஆற்றல் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை உனர்த்துகின்றன.

ஜாப்சின் சாதனைகளை எந்த வரைவரைக்குள்ளும் அடங்கிவிடாது .ஐபாடும் ஐப்போனும் மட்டும் அல்ல அவரது சாதனைகள்.ஆப்பிலை நிறுவியதோ அல்லது அந்நிறுவனத்திற்கு மறுஜென்மம் அளித்ததோடும் அவரது சாதனைகள் சாதனைகள் முடியவில்லை.வடிவமைப்பில் அவருக்கு இருந்த தொலைநோக்கும் பயன்ப்ட்டு குறித்து அவருக்கு இருந்த புரிதலும் அசாத்தியமான‌வை.ஆனால் ஜாப்ஸ் சிறந்த தொழில் முனைவோராகவும் இருந்திருக்கிறார்.மார்க்கெட்டிங்கிலும் அவரை மேதை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நிறுவன சி இ ஓ என்ற முறையில் தனது நிறுவனத்தை கப்பலின் மாலுமி போல ப‌டை தளபதி போல தான் அவர வழிநடத்தியிருக்கிறார்.அந்த வகையில் அவரை சர்வாதிகாரி என்றும் சொல்லலாம்.ஆப்பில் செல்ல வேண்டிய திசை குறித்து அவருக்கு இருந்த தெளிவு தந்த துணிச்சல் அது.

இன்னொரு வித்ததில் பார்த்தால் அவர் சிலிக்கான் பள்ளாத்தாக்கின் நட்சத்திரம்.ஒரு தேர்ந்த திரைப்ப்ட நட்சத்திரம் போல அவர் த‌ன்னை பற்றி பேச வைத்து ஆப்பில் நிறுவன அறிமுகங்களுக்கு கவனத்தை தேடித்தந்தார்.

இடையே அவருக்கு அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறையிலும் ஆர்வம் உண்டானது.பிக்சர் நிறுவ‌ன உருவாக்கத்தில் அவரது பங்கு கணிசமானது.

அப்புறம் இருக்கவே இருக்கிறது மேக் மீதான அபிமானம்.ஆப்பில் உண்டாக்கிய மேக்கின்டாஷ் கம்ப்யூட்டர்கள் விற்‌பனையில் சாதனை படைக்காமல் இருந்திருக்கலாம்.ஆனால் மேக் போல தனக்கென அபிமானிகளை பெற்ற கம்ப்யூட்டர் வேறில்லை என்றே சொல்ல வேண்டும்.மைக்ரோசாப்ட் நினைத்து கூட பார்க்க முடியாத விசுவாசத்தை மேக் மூலம் ஆப்பில் பெற்றது.

ஜாப்ஸ் செய்த மாயம் என்று தான் இதனை சொல்ல வேண்டும்.

இசைத்துறையின் எதிர்கால‌த்தை இண்டெர்நெட்டோடு இணைத்தது ஜாப்ஸ் மேதமையின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.இப்படி ஜாப்சின் புகழ் பாடிக்கொண்டே போகலாம்.

தனது கொள்கையில் ஜாப்சிற்கு இருந்த பிடிவாதமும் கம்பீரமானது தான்.கடைசி வரை அவர் ஐப்போனில் அடோப் சாப்ட்வேரை அனுமதிக்க மறுத்துவிட்டார்.அடோப் அவுடேட் ஆகிவிட்டது என்று அவர் சொன்னது அகம்பாவமாக கூட இருக்கலாம்.ஆனால் அதனை சொல்லும் துணிச்சலும் நம்பிக்கையும் ஜாப்ஸ் ஒருவருக்கு தான் வரும்.சும்மாவா ஐபோனை சுற்றி ஒரு சாம்ப்ராஜ்யத்தையோ அமைத்தவராயிற்றே.

ஜாப்ஸ் போன்ற செல்வாக்கும் விசுவாசம் மிக்க அபிமானிகளையும் பெறக்கூடிய ஆற்றல் கொண்ட நிறுவன தலைவர்கள் இங்கே உருவாக‌ முடியுமா என்று தெரியவில்லை.

பிள்ளைகள் தன்னை பற்றி அறிய வேண்டும் என்பதற்காக சுயசரிதையை எழுத ஜாப்ஸ் தீர்மானித்ததிலிருந்து அவரது தந்தை முகத்தையும் அறிய முடிகிற‌து.இதன் மூலம் தான் எப்போதும் அருகே இருக்க மாட்டோம் என்ப‌தை உண‌ர்த்தவும் விரும்பியதாக் படிக்கும் போது நெகிழாமல் இருக்க முடியவில்லை.ஜாப்ஸ் ஒரு ஞானியாகவும் இருந்திருக்கிறார்.

புற்றுநோயால் போராடியபடி அவர் வலியை எதிர்கொண்ட விதமும் போற்றுதலுக்குறியது.மரனத்திற்கு முன்வரை எல்லாவற்றையும் அவர் தானே தீர்மானித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மறன் பயன் அவரை சல்னப்படுத்தியதாக தெரியவில்லை.மாறாக தனது முன்னுரிமைகளை உறுதியாக தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்.

மைக்ரோசாப்ட் கோடிகளை குவித்திருக்கலாம்.விண்டோஸ் காப்புரிமை மூலம் டெஸ்க்டாப் உல‌கில் கோலோச்சலாம்.ஆனால் எந்த காப்புரிமையும் பெறாமலே ஐ என்னும் எழுத்தை அப்பிலுக்கு உரியதாக ஆக்கியது ஜாப்சின் சாதனை தான்.

ஐபோன் இருக்கும் வரை ஐபாட் இருக்கும் வரை ஜாப்ஸ் புகழும் இருக்கும்.பழைய மேக் கம்ப்யூட்டர் இருக்கும் வரையிலும் தான்.யாரேனும் மேக்கை தூக்கி போடுவார்களா என்ன?

(ஸ்டீவ் ஜாப்சை பற்றி ரிச்சர்டு ஸ்டால்மன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் பற்றி எழுத நினைத்து துவங்கிய இந்த பதிவு ஜாப்சுக்கான புகழாஞ்சலி போலவே அமைந்து விட்டது.ஸ்டால்மன் ஜாப்ஸ் மறைவில் மகிழ்ந்து போல குறிப்பிட்டிருந்த அந்த கருத்தை பற்றி பேசும் முன் ஜாப்ஸ் மீதான் என அபிமானத்தை தெரிவித்துவிட விரும்பினேன்.இப்போது இத்துடனே விட்டுவிடலாம் என நினைக்கிறேன்.தேவைப்பட்டல் தனி பதிவு எழுதுகிறேன்)அன்புடன் சிம்மன்.

8 responses to “ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க நீ எம்மான் !

  1. ஜாப்ஸ் பற்றிய நினைவுப் பகிர்வை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே!

    //ஐபோன் இருக்கும் வரை ஐபாட் இருக்கும் வரை ஜாப்ஸ் புகழும் இருக்கும்.//

    மிகவும் சரியான கருத்து ஆப்பிள் இருக்கும்வரை ஜாப்ஸின் பெயரும் அழியாது.

    ஒரு மாபெரும் தொழில் பிரம்மா, தொழில்நுட்ப பிதாமகனை இழந்துவிட்டோம்….

பின்னூட்டமொன்றை இடுக