டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை!

ஞானக்குழந்தை என்று சொல்வது போல நியூசிலாந்து நாட்டில் பிறந்த நியாமை டிவிட்டர் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்று வர்ணிக்கலாம்.

டிவிட்டர் குழந்தை என்றால் டிவிட்டரில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை என்று பொருள்.அது மட்டும் அல்ல டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை என்று டிவிட்டர் சொந்தங்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம்.டிவிட்டர் வாழ்த்துக்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம்.

குழந்தை நியாமின் பெற்றோர்கள் கர்மக் ஒரியலி மற்றும் லூயி டிரேப்பர் இருவருமே டிவிட்டர் பயனாளிகள்.டிவிட்டர் பயனாளிகள் நேரில் சந்தித்து கொள்வதற்கான டிவீட்டப் நிகழ்ச்சி முலம் சந்தித்து கொண்டவர்கள்.அந்த சந்திப்புக்கு பின் டிவிட்டரில் உரையாடத்துவங்கி மிகவும் நெருக்கமாகிவிட்டனர்.

இந்த நெருக்கம் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தை தொடர்ந்து ஆக்லாந்து நகரில் இருந்து வெலிங்டன் நகருக்கு குடிபெயர்ந்து வசிக்கத்துவங்கினர்.

மனைவி லூயி கர்பமானதும் ஓரியலி அந்த சந்தோஷ செய்தியை உறவினர்கள்,நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதோடு மறக்காமல் தனது டிவிட்டர் நண்பர்களோடும் பகிர்ந்து கொண்டார்.என்ன இருந்தாலும் டிவிட்டர் சமூகம் என்பது அவரது இன்னொரு குடும்பம் போல் அல்லவா?

டிவிட்டர் சமூகமும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தது.சிலர் இந்த தம்பதிக்கு பரிசுப்பொருளையும் அனுப்பி வைத்தனர்.

‌அதன் பிறகு மிகுந்த உற்சாகத்தோடு குழந்தை வள‌ர்ச்சி பற்றிய தகவல்களையும் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டனர்.டிவிட்டர் நண்பர்களும் அவற்றை ஆர்வத்தோடு படித்து வந்த‌தோடு அன்போடும் அக்கறையோடும் அவ்வப்போது ஆலோசனைகளை கூறி வந்தனர்.

பிரசவ‌த்திற்கு முன்பாக லூயீக்கு எதிர்பாராத விதமாக வலி ஏற்பட்ட போது ஒரியலி டிவிட்டரில் தான் ஆலோசனை கேட்டார்.உடனே என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூறும் குறும்பதிவுகளும் குவிந்துவிட்டன.தொடர்ந்து லூயியின் கர்பத்தில் இருந்த குழந்த வளர்ச்சியை டிவிட்டர் நண்பர்கள் ஆர்வத்தோடு பின்தொடர்ந்தனர்.

குழந்தை பிறந்ததுமே ஒரியலி டிவிட்டரில் அந்த செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.நியூசிலாந்து நாட்டின் முதல் டிவிட்டர் குழந்தை பிரந்திருக்கிரது நண்பர்களே என்னும் அடைமொழியோடு இந்த செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார்.டிவிட்டர் நண்பர்கள் தாங்கள் மாமாவாகவும் அத்தையாகவும் ஆன மகிழ்ச்சியோடு இந்த செய்தியை வரவேற்றனர்.

அது மட்டும் அல்ல;இந்த செய்தியை மகிழ்ச்சியோடு தங்கள் டிவிட்டர் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளவும் செய்த‌னர்.டிவிட்டர் பாணியில் அழந்தையின் பெயரை குறிப்பிடும் ஹாஷ்டேகோடு இந்த செய்தியை பலரும் பகிர்ந்து கொள்ள டிவிட்டரில் இந்த தலைப்பு மெலேழும் விஷ‌யமாகி குழந்தை நியாம பிறக்கும் போதே டிவிட்டரில் பேசப்படும் குழந்தையாகி விட்டது.

இப்படி முன் பின் தெரியாத டிவிட்டர் நண்பர்கள் காண்பித்த அன்பு ஒரியலி தம்பதியை நெகிழ வைத்து விட்டது.குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் டிவிட்டர் சமூகத்தினரிடம் தொடர்ந்து கேட்பேன் என்று அவர்கள் உற்சாகமாக கூறுகின்றனர்.

1 responses to “டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை!

பின்னூட்டமொன்றை இடுக