பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது.

பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் செய்வதற்கான இணைய மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது நம்மிடம் உள்ள ஆனால் நம்மால் பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை அவற்றை பயன்படுத்தகூடியவர்களிடம் தருவதற்கான வழியாக இந்த தளம் விளங்குகிறது.

இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.சினிமாவுக்கோ,ஐபிஎல் போட்டிக்கோ டிக்கெட் வாங்கியிருப்போம்,திடீரென போக முடியாத சூழ்நிலை ஏர்பட்டு விடும்.அப்போது என்ன செய்வோம்.வேறு யாரிடமாவ‌து அந்த டிக்கெட்டை கொடுத்து விட நினைப்போம்.

சில நேரங்களில் நண்பரோ அல்லது தெரிந்தவரோ அட்டா நானும் டிக்கெட்டுக்காக அலைந்து கொண்டிருந்தேன் என ஆனந்தமாக வாங்கி கொள்ளலாம்.பல நேரங்களில் தெரிந்தவர் நண்பர்கள்,தெரியாதவர்கள் என யாரை கேட்டாலும் பயன் இருக்காது.

இந்த பிரச்ச‌னைக்கு தீர்வாக தான் ஸ்பேர் டிக்கெட் தளம் உருவாகப்பட்டுள்ளது.

யாரிடம் பய‌ன்படுத்த முடியாத உபரி டிக்கெட் இருக்கிறதோ அவர்கள் இந்த தளத்தில் அந்த டிக்கெட்டை பட்டியலிடலாம்.யாருக்கு இவை தேவையோ அவர்கள் தொடர்பு கொண்டு அந்த டிக்கேட்டை வாங்கி கொள்ளலாம்.

பல‌ருக்கும் போன செய்து தேவையா தேவையா என கேட்டு கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.டிக்கெட்டை பட்டியலிட்டு விட்டு காத்திருக்கலாம்.அதே நேரத்தில் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள் நேராக இந்த‌ தளத்தில் வந்து தங்களுக்கு தேவையான டிக்கெட் இருக்கிறதா என பார்த்து கொள்ளலாம்.

டிக்கெட்களை சம்ர்பிப்பவர்கள் அவற்றுக்கு தள்ளுபடி த‌ர விரும்பினால் அதனையும் குறிப்பிடலாம்.

டிக்கெட்கள் வீணாக கூடாது என நினைப்பவ‌ர்களுக்கும் சரி ,குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைகாத என ஏங்கி கொண்டிருப்பவருக்கும் சரி இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் தான்.ஆனால் ஒன்று கணிசமான அளவு பயனாளிகள் சேர வேண்டும்.இல்லை என்றால் கடை விரித்தோம் கொள்வார் இல்லை என்னும் நிலை ஏற்படலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்படி உபரி டிக்கெட்டை தேவைப்படுவரிடம் விற்பதற்கான இணைய சேவைகள் நிரைய உள்ளன.இவ்வ‌ளவு ஏன் கையில் இருக்கும் டிக்கெட்களை ஏல தளமான இபேவில் பட்டியலிட்டால் கொத்தி கொண்டு போய் விடுவார்கள்.

இந்த வகையில் இந்திய சந்தியில் அறிமுகமாகியுள்ள முதல் தளமாக இந்தனை குறிப்பிடலாம்.முதல் க‌ட்டமாக‌ மும்பை,டெல்லி,புனா போன்ற‌ நகரங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.அடுத்த கட்டமாக் சென்னை உள்ளிட்ட ந‌கரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படலாம்.

இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிற‌ப்பம்சம் பயனாளிகள் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை குறிப்பிட்டால்,அவ‌ற்றுக்கான உபரி டிக்கெட் சம‌ர்பிக்கப்படும் போது அது பற்றிய தகவல் உடனே தெரிவிக்கப்படும்.மற்றவர்களை முந்திக்கொண்டு டிக்கெட்களை வாங்கி கொள்ளலாம்.

நடைமுறையில் பயன் தரக்கூடிய தளங்களின் வரிசையில் இந்த தளத்திற்கு நல்வரவு கூறலாம்.

இணையதள முகவ‌ரி;http://spareticket.in/

1 responses to “பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

பின்னூட்டமொன்றை இடுக