சுவாரஸ்யமான பயண இணையதளம்.

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா?

சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம்.

எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த தளம் உருவாக்கி தருகிற‌து.அப்படியே அந்த நாட்டில் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைக்கிற‌து.உணவு வழியே நட்பையும் நட்பு வழியே உன‌வையும் பெற்று சுற்றுலாக்களை சுவையுள்ள அனுபவமாக்கி தருகிற‌து .

இதன் பின்னே உள்ள ஐடியா எளிமையானது.

சுற்றுலா பயணிகளையோ அல்லது வெளிநாட்டு மாணவர்களையோ வரவேற்று விருந்து படைக்க தயாராக இருப்பவர்கள் இந்த தள‌த்தில் உறுப்பினராக வேண்டும். உறுப்பினர்கள் புதிதாக ஒரு நாட்டுக்கு செல்லும் போது அந்த நாட்டில் உள்ள சக உறுப்பினரை இந்த தளம் மூலம் தொடர்பு கொண்டு சாப்பிட வரலாமா என்று கேட்டு சென்று அவரது வீட்டில் சாப்பிட்டு மகிழலாம்.

ஊர் சுற்றி பார்த்து சுற்றுலா தளங்களையும் புகழ் பெற்ற இடங்களையும் பார்த்து ரசித்தால் மட்டும் போதுமா?உள்ளூர் உணவை சுவைக்காத எந்த பயணமும் முழுமையாகாது என்பது பயனங்களுக்கான பொன்விதிகளில் ஒன்று அன்றோ!.

ஆனால் உள்ளுர் உணவு சுவை அனுபவிப்பது என்றால் அதிலும் இல்லச்சுழலில் சுவைப்ப‌து என்றால் நண்பர்கள் யாராவது இருந்தால் தானே சாத்தியம்.

ஈட் வித் லோக்கல் தளம் இத்தகைய நண்பர்களை அடையாளம் காட்டுகிற‌து.அதே போல உறுப்பினர்கள் தாங்கள் வெளிநாடு செல்லும் போதும் இத்தகைய நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த ஊர் உண‌வை சுவைத்து மகிழலாம்.

என்ன தான் உறுப்பினர் என்றாலும் அறிமுகம் இல்லாதவர் வீட்டை நாடு பாதுகாப்பானதா என்னும் இயல்பான சந்தேகம் எழலாம். உறுப்பினர்கள் சம்ர்பித்துள்ள விவரங்களை வைத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்வது நம்பிக்கையை அளிக்கும்.முன் கூட்டியே இமெயில் தொடர்பு கொண்டும் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

அதோடு உறுப்பின‌ர்கள் தங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அவரது உறுப்பினர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அதுவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

அதற்கேற்ப விருந்துக்கு அழைக்கும் போது அதனை நிகழ்ச்சியாக தளத்தில் பட்டியலிடுமாறும் இந்த தளம் கேட்டு கொள்கிற‌து.அதே போல சாபிட்டு முடித்ததும் அந்த அனுபவத்தை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளவும் வேன்டுகோள் வைக்கிற‌து.இதன் மூலம் மற்றவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய நாட்டில் புதிய நண்பரை அறிமுகம் செய்து கொண்டு அந்த ஊர் உணவை சுவைக்க வழி செய்யும் இந்த தளம் பயண அனுபவத்தை மேலும் விலாசமாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்க கூடிய‌து.

இணையதள முகவரி;http://www.eatwithalocal.socialgo.com/

(ஏற்கனவே சுவை பயணங்களை உருவாக்கி தரும் சுவையான இனையதளம் பற்றி எழுதியுள்லேன்.அந்த தளம் உண‌வு சார்ந்த பயனத்தை ஏற்பாடு செய்கிற‌து என்றால் இந்த தளம் பயணத்தின் ந‌டுவே உள்ளூர் உண‌வை சுவைக்க வழி செய்கிற‌து.)

———–

(சுவை பயணங்கள் பற்றிய எனது பதிவு உனமையிலேயே சுவையாக உள்ள‌து போலும்.அதனால் தான் பலரும் அதனை அப்படியே பிரதியெடுத்து தங்கள் வலைப்பதிவு மற்றும் கூகுல் + ல் பதிவு செய்துள்ளனர்.பார்க்க கூகுல் தேடல் பட்டியல்.)

சிம்மன்-http://www.google.co.in/#sclient=psy-ab&hl=en&source=hp&q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&pbx=1&oq=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&aq=f&aqi=&aql=&gs_sm=s&gs_upl=4408l4408l0l5538l1l1l0l0l0l0l164l164l0.1l1l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=7e4524f24f1c98b8&biw=800&bih=436

4 responses to “சுவாரஸ்யமான பயண இணையதளம்.

  1. நல்ல பதிவு . நாடுகளில் இந்தியா என குறிபிட்டதும் அந்த பக்கத்தில் ஒரு நிகழ்வு கூட இல்லை . விருந்தோம்பலுக்கு பேர் பெற்ற நம் நாட்டை பற்றி எந்த குறிப்பும் இல்லை .

    கிரி

    • உண்மை தான் நண்பரே.வந்தாரை வாழ வைக்கும் நாடு என்று சொல்லி கொண்டிருந்தால் போதுமா செயலில் காட்ட வேன்டாமா?

      அன்புடன் சிம்மன்.

பின்னூட்டமொன்றை இடுக