முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும்.

அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.

டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா?டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும்.இதனால் இணைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.

இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையதளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

ஆனால் ஒன்று மூல இணையதளமும் முடக்கப்பட்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த வகையில் இதன் பயன்பாடு குறிப்பிட்ட எல்லை வரை தான்.

இணையதள முகவரி;http://untiny.me/

1 responses to “முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

  1. இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
    அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக