இணையத்தை பூனை மயமாக்குங்கள்.


இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.சந்தேகம் இருந்தால் இணையத்தில் பூனை என்று தேடிப்பாருங்கள்.இணையவாசிகளுக்கு பூனைகள் மீது தனிப்பாசமும் ஈர்ப்பும் இருப்பது தெரியவரும்.

நீங்களும் கூட இப்படி பூனை பிரியராக இருந்தால் உங்கள் அபிமான தளங்களை பூனைமயமாக்கி பார்த்து ரசிக்கலாம்.அதாவது எந்த ஒரு தளத்திலும் உள்ள புகைப்படங்களை எல்லாம் பூனை படங்களால் நிரப்பி விடலாம்.

மியோபிபை என்னும் இணையதளம் ஜாலியான இந்த சேவையை வழங்குகிறது.இந்த தளத்தில் நீங்கள் பூனைமயமாக்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை சமர்பித்தால் போதும் அடுத்த நொடி அந்த தளத்தில் கட்டுரை செய்திகள் எல்லாவற்றையும் பூனை படம் கொண்டதாக மாற்றிவிடுகிறது.

இப்படி மாற்றப்பட்ட தளத்தில் பார்த்தால் நகரும் பூனை,ஓடும் பூனை,விளையாடும் பூனை என எல்லாம் ஒரே பூனைமயமாக இருக்கும்.பூனை புகைப்படம் மட்டும் அல்லாது பூனை வீடியோ,பூனை அனிமேஷன் என்று அசத்தாலாக இருக்கும்.

பிபிசி போன்ற பிரபலமான தளங்களை இந்த தளத்தில் சமர்பித்து பூனைகள் நிரம்பியதாக பார்க்கும் போது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

குறிப்பிட்ட பயன் என்று எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமான சேவை.இதிலும் பூனை பிரியர்கள் மிகவும் ரசிப்பார்கள்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இணையபக்கங்கள் மீது குண்டுகளை வீசுவது போன்றதொரு சேவையே இது.ஆனால் ஒன்று இந்த சேவையின் பின்னே இருக்கும் மோபிபை என்னும் நிறுவனம் செல்போனுக்கான இணையதள வடிவமைப்பில் தீவிரமாக இயங்கி வருகிறது.

இணையதள முகவரி;http://meowbify.com/

பூனைகளுக்கும் இணையத்திற்குமான உறவை அறிய இதை படியுங்கள்;https://cybersimman.wordpress.com/2012/09/28/movies-4/

பின்னூட்டமொன்றை இடுக