இணையதளங்களின் சுருக்கத்தை வாசிக்க!

கட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது.

அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான பொறுமை அல்லது அவகாசம் இல்லாதவர்களுக்கு எப்படி அந்த கட்டுரையின் சாரம்சத்தை ஒரு சில வரிகளில் சம்மரைசர் சுருக்கு தருகிறதோ அதே போல கிரக்ஸ்பாட் இணையதளங்களில் உள்ள விஷயத்தை இணையவாசிகளுக்கு அழகாக சுருக்கி தருகிறது.

கிரக்ஸ்பாட் மூலமாக எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக படித்துப்பார்க்கமலேயே அந்த தளத்தின் சாரம்சத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இதனை இணையதள சுருக்க சேவை என்று வர்ணிக்கலாம்.

இணையத்தில் உலாவும் போது இது போன்ற ஒரு சுருக்க சேவை எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்ககூடும் என்பதை சொல்லாலமே விளங்கி கொள்ளலாம்.

இணையத்தில் உலாவும் போது எப்படியும் நாம் தேடிச்செல்லும் இணையதளங்கள் தவிர வேறு பல தளங்களும் குறுக்கிடவே செய்யும்.அந்த தளங்களில் பல பயனுள்ளதாக இருக்கலாம்.ஆனால் கண்ணில் படும் தளங்களை எல்லாம் பார்த்து படித்து கொண்டிருந்தால் நேரம் விரயம் ஆகலாம்.

அதற்காக எந்த இணையதளத்தையும் ஏறெடுத்து பார்க்காமல் இருந்தால் நல்ல தளங்களை கோட்டை விட நேரலாம்.

இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே கிரக்ஸ்பாட் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

பரிசிலனையில் உள்ள இணையதளத்தை முழுமையாக படித்து பார்க்கா விட்டாலும் அதன் பயன்பாட்டு தன்மையை புரிந்து கொள்ளும் வகையில் அந்த தளத்தின் சாரம்சத்தை இந்த சேவை சுருக்கு தருகிறது.

இந்த சேவையை பயன்படுத்த விரும்பினால் முதலில் இதனை புக்மார்க் வசதியாக டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு எப்போது இணையதளத்தின் சுருக்கம் தேவைப்பட்டாலும் அந்த தளத்தின் மீது புக்மார்க் வசதியை கிளிக் செய்தால் போதும் உடனே இந்த சேவை அந்த தளத்தின் உள்ளடக்கத்தை சுருக்கு சில வரிகளாக முன் வைத்து விடுகிறது.

இணையதள சுருக்கத்தின் அருகே அந்த தளம் சார்ந்த குறிச்சொற்களும் இடம் பெறுகின்றன.குறிச்சொற்களை கிளிக் செய்தால் அந்த சொல் சார்ந்த சாரம்சத்தை பெறலாம்.

இணையத்தை ஆய்வு நோக்கில் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் இணையத்தில் உலாவும் போது அதிக அளவிலான தளங்களை பார்க்கும் வழக்கம் கொண்டவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செயற்கை அறிவு என்று சொல்லப்படும் கோட்பாட்டை பயன்படுத்தி இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரை அல்லது இனையதளத்தின் சாரம்சத்தை சுருக்கி தருவது என்பது மிகவும் சவாலான விஷயம் தான்.தேர்ச்சி மிக்க மனிதர்கள் செய்யக்கூடிய இந்த செயலை ஒரு சாப்ட்வேர் சிறப்பாக செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும் அடிப்படையில் இந்த சேவைகள் சுவாரஸ்யமானவை,நம்பிக்கை தருபவை.

இனையதள முகவரி;http://www.cruxbot.com/index.html

1 responses to “இணையதளங்களின் சுருக்கத்தை வாசிக்க!

பின்னூட்டமொன்றை இடுக