திரைப்பட கிளிப்களை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

திரைப்பட‌ ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் தருகின்றன.அதோடு பிடித்தமான படங்களை தேடி கண்டுபிடிக்கும் வசதியையும் அளித்து,அப்படியே நண்பர்களோடு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவி வசிகரீக்கும் தளங்களாகவும் திகழ்கின்றன.

இந்த பட்டியலில் மூவிகிளிப்ஸ் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.மற்ற திரைப்பட தளங்கள் ஹாலிவுட் படங்களை பார்க்க வழி செய்கின்றன என்றால் படங்களை துண்டு துண்டாக பார்த்து ரசிக்க உதவுவதே இந்த இணையதளத்தின் தனிச்சிறப்பு.அதாவது தொலைகாட்சியில் காட்டுவது போல கிளிப்பிங்சாக திரைப்பட காட்சிகளகளை கண்டு ரசிக்கலாம்.

முழு ப‌ட‌த்தையும் பார்க்க‌ நேர‌ம் இல்லை என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து குறிப்பிட்ட‌  காட்சிக‌ளை ம‌ட்டுமே பார்த்து ர‌சிப்ப‌தில் நாட்ட‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக‌ள் இந்த‌ த‌ள‌த்தை பார்த்த‌துமே துள்ளி குதிப்பார்க‌ள்.

கார‌ண‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ 12 ஆயிர‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ கிளிபிங்கிஸ்க‌ள் இந்த‌ த‌ள‌த்தில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌.

அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ம‌ற்றும் ரச‌னைக்கேற்ப‌ எந்த‌ காட்சியை வேண்டுமானாலும் பார்த்து ர‌சிக்க‌லாம்.அது ம‌ட்டுமல்ல‌ இந்த‌ காட்சிக‌ளை எல்லாம் சுல‌ப‌மாக‌ தேட‌க்கூடிய‌ வ‌கையில் தொகுத்து வைத்துள்ள‌ன‌ர் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதிலும் எப்ப‌டி தெரியுமா,தேவையான‌ காட்சிக‌ளை ப‌ட‌த்தின் பெய‌ரை குறிப்பிட்டோ அதைல் ந‌டித்த‌ ந‌டிக‌ரின் பெய‌ரை குறிப்பிட்டோ தேட‌லாம். இவ்வ‌ள‌வு ஏன் ப‌ட‌த்தில் இட‌ம் பெற்ற‌ வ‌ச‌ன‌த்தை சொல்லி கூட‌ காட்சிக்கான‌ கிளிப்பை தேடிப்பார்க்க‌லாம்.

யோசித்துப்பாருங்க‌ள் திரைப்பட‌ ர‌சிக‌ர்க‌ள் தாங்க‌ள் பார்த்து ர‌சித்த‌ காட்சிக‌ள் குறித்து நன்பாற்காலோடு ஸ்ல‌கித்து ம‌கிழ்வ‌து உண்ட‌ல்லவா? அது போன்ற‌ த‌ருண‌ங்க‌ளில் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சியை தேடிப்பார்த்து ர‌சித்த‌ப‌டி விவாதிக்க‌லாம்.

இந்த‌ த‌ள‌த்தை உருவாக்கிய‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளை தீவிர‌ திரைப்ப‌ட‌ ர‌சிக‌ர்க‌ள் இல்லைஇல்லை திரைப்ப‌ட‌ வெறிய‌ர்க‌ள் என‌ அழைத்துக்கொள்கின்ற‌ன‌ர். திரைப்ப‌ட‌ங‌க்ள் ப‌ற்றி அலுப்பில்லாம‌ல் பேசித்தீர்க்கும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌ இவ‌ர்க‌ள் திரைப்ப‌ட‌ காட்சிக‌ளை சுல‌ப‌மாக‌ தேடிப்ப‌ர்த்து எடுக்கும் வ‌ச‌தி வேண்டும் என்ப‌த‌ற்காக‌ ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்து இந்த‌ வ‌ச‌தையை உருவாக்கியுள்ள‌ன‌ர்.

இதில் முக்கிய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் ஹாலிவுட் ஸ்டுடியோக்க‌ளோடு சேர்ந்தே இந்த‌ வேலையை செய்து முடித்துள்ள‌ன‌ர். இத‌ன் பொருள் ஹாலிவுட் அனும‌தியோடு கிளிப்க‌ள் ப‌திவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.என‌வே காபிரைட் பிர‌ச்ச‌னை கிடையாது. எதையும் சுத‌ந்திர‌மாக‌ பார்க்க‌லாம். இல‌வ‌ச‌மாக‌வும் தான்.

கூடுத‌ல் வ‌ச‌தி என்ன‌வென்றால் எல்ல‌ கிளிப்பகளுட‌னும் முழு நீள‌ ப‌ட‌த்திற்கான‌ இணைப்பு உண்டு. காட்சி பிடித்து போய் முழு ப‌ட‌த்தையும் பார்க்க‌ விரும்பினால் அப்ப‌டியே கிளிக் செய்து ஆர்ட‌ர் செய்து விட‌லாம்.

நாம் பார்த்து ர‌சித்த‌ காட்சிக‌ளை ந‌ண்ப‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புவ‌து இய‌ற்கை தானே.அதிலும் இன்றைய‌ வ‌லைப்பின்ன‌ல் உல‌கில் எதையும் உட‌னே ப‌கிர்ந்து கொள்ள‌ கைக‌ள் துடிக்கும் அல்ல‌வா?அத‌ற்கும் வ‌ச‌தி இருக்கிற‌து. பேஸ்புக் ,டிவிட்ட‌ர் என‌ ப‌ல‌ வித‌ங‌க‌ளில் கிளிப்க‌ளை ப‌கிர்ந்து கொண்டு விவாதிக்க‌லாம்.யூடியூப் மூலமும் பகிர்ந்து கொள்ள‌லாம்.

முக‌ப்பு ப‌க்க‌ம் முழுவ‌தும் திரைப்ப‌ட‌ கிளிப்க‌ளாக‌ திரைப்ப‌ட‌ சுர‌ங்க‌ம் போல‌ காட்சி த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்.ச‌மீப‌த்திய‌ ப‌டங்க‌ள்,பிர‌ப‌லமான‌ காட்சிக‌ள்,விழுந்து விழுந்து சிரிக்க‌ வைப்ப‌வை,ம‌ற்க்க முடியாத‌வை என‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளின் கீழ் முக‌ப்பு ப‌க்க‌த்தில் கிளிப்க‌ள் அணிவ‌குத்து நிற்கின்றன.சமீபத்திய வரவுகளும் உண்டு. கிளிக்கி கொண்டே இருக்க வேண்டியது தான்.

இது போதாதென்று இப்போது புதிதாக‌ திரைப்ப‌ட‌ காட்சிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்க்கும் புதிய‌ வ‌ச‌தியையும் அறிமுக‌ம் செய்துள்ள‌ன‌ர்.

ஒரு முறை விஜ‌ய‌ம் செய்தால் இந்த‌ த‌ள‌ம் அப்ப‌டியே ந‌ம்மோடு ஒட்டிக்கொண்டுவிடும்.அந்த அள‌விற்கு விஷ‌ய‌ம் உள்ள‌து.அத‌ற்கேற்ப‌ அவ‌ப்போது நேர‌த்திற்கேற்ப‌ அருமையான‌ சேவைகளையும் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.இப்ப‌டி தான் ஆஸ்க‌ர் விருது கால‌த்தின் போது ஆஸ்க‌ருக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளீன் கிளிப்க‌ளை தொகுத்தளித்திருந்த‌ன‌ர்.ஆஸ்க‌ர் ப‌ற்றி வெறும்னே ப‌டிப்ப‌தைவிட‌ கூட‌வே காட்சிக‌ளையும் பார்த்து ர‌சிப்ப‌து த‌னி அனுப‌வ‌ம் தானே.

பாருங்க‌ள் தொலைகாட்சிக‌ளால் ம‌ட்டுமே த‌ர‌க்கூடிய‌ காட்சி அனுப‌வ‌த்தை இந்த த‌ள‌ம் த‌ருகிற‌து. அத‌னால் இந்த‌ த‌ள‌ம் ம‌ற்ற‌ திரைப்ப‌ட‌ த‌ள‌ங்க‌ளில் இருந்து வேறுப‌ட்டு நிற்கிற‌து.

————

http://movieclips.com/

2 responses to “திரைப்பட கிளிப்களை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

  1. அன்பின் சைபர் சிம்மன்

    அருமையான தகவல் – பகிர்வினிற்கு நன்றி – சென்று பயன் படுத்திப் பார்க்கிறேன்

    நல்வாழ்த்துகள் சைபர் சிம்மன்

    நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s