டிவிட்டர் வாங்கித்தந்த லோன்

tஇனி வங்கிகளோ , வர்ததக நிறுவனங்களோ அலைய வைத்தால் டிவிட்டர் மூலம் பாடம் புகட்டலாம் தெரியுமா?

ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வங்கிகடன் பெற்றிருக்கிறார்.

அலிசன் காட்பிரே என்னும் அந்த பெண்மணி சிட்னி நகரில் வசிப்பவர்.காமன்வெல்த் வங்கியிடம் இவர் வீட்டிக்கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். வங்கி அவருக்கு கடன் வழங்கவும் முன்வந்தது.

வங்கி அனுமதியை நம்பி அவர் புதிய வீட்டிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினார்.

ஆனால் வங்கியிடம் இருந்து அதிகாரபூர்வமான அனுமதி வருவது தாமதமாகி கொண்டே இருந்த‌து. அலிசனும் வங்கிக்கு நடையாய் நடந்தார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை. அலிசனும் பொறுமையோடு காத்திருந்தார்.

இதனிடையே வீட்டிறகான ஒப்பந்தத்தை வழங்க இருந்த நிறுவனம் உடனடியாக
கடன் அனுமதி சான்றிதழை சம‌ர்பிக்கவிட்டால் , அபாராதம் செலுத்தவேண்டும் என தெரிவித்த‌து. குறிப்பிட்ட அந்த வீட்டை வாங்க வேறு ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதால், வங்கி அனுமதி சமர்பிக்கப்படும் வரை நஷ்ட ஈடாக அபாராதம் கட்ட வேண்டும் என கூறப்பட்டது.

இதனால் அலிசன் கொதித்துப்போனார். வங்கியின் அலட்சியம் அவரை வெறுத்துப்போகவைத்தது.

அலிசன் டிவிட்டர் பிரியர். இந்த வெறுப்போடு டிவிட்டரில், தனது வேதனையை வெளிப்படுத்தினார். வங்கி படாத‌பாடு படுத்துவதால் இன்ன‌மும் வீட்டு பத்திர ஒப்பந்தம் தமதமாகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் தனக்கு நியாயம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் அவருக்கு இல்லை. தனது உள்ளக்குமுறலை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் வாயிலாக எதையும் பகிர்ந்து கொள்ளலாமே.அதை தான் செய்தார்.

ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் வங்கி வாடிக்கையாள‌ர் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் அவர் டிவிட்டர் பதிவை படித்துவிட்டு அலிசனை தொடர்புக்கொண்டார். அவருடைய கோபத்தை புரிந்துகொள்வதாக கூறிய அதிகாரி பிரசச்சனையை தீர்த்து வைப்பதாகவும் உற்தி அளித்தார்.

அதன்படியே மறுநாள் எல்லம் சரியாகிவிட்டது.

டிவிட்டருக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதலாம்.

டிவிட்டர் மூலம் ஒரு கருத்தை பகிர்ந்துகொள்ளும் போது அது பரவலாக படிக்காப்படும் வாய்ப்பு இருப்பதால் நல்ல செதியாக இருந்தாலும் சரி எதிர்மறையான செய்தியாக இருந்தாலும் சரி காட்டுதீ போல பரவிவிடும்.

வர்ததக நிறுவனங்கள் பற்றி , அவற்றின் சேவை தொடர்பாக வாடிக்கையாளர்கள் மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் நிறுவனத்தின் நன்மதிப்பை அவை பாதிக்கக்கூடும்.

பலவர்ததக நிறுவனங்கள் டிவிட்டர் போன்ற தளங்களில் நிறுவனம் பற்றி கூறப்படுவதை தெரிந்துகொள்வதற்காக என்றே தனியே ஊழியர்களை நியமித்துள்ளன. எனவே டிவிட்டரில் புகார் தெரிவித்தால் ச்து கவனிக்கப்படும் வாய்ப்புள்ளது எனபத‌ற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.

நிற்க அமெரிக்காவில் சமையல்கலைஞர்கள் சிலர் டிவிட்டர் மூலம் சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கியுள்ளனர் தெரியுமா?

சுருக்கெழுத்து போன்ற முறையில் அவர்கள டிவிட்டர் கணக்கில் சமையல் குறிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் பகிர்வு சாதனம் என்பதால் அவரவர்கள் தங்களை சார்ந்த விஷயங்களை பகிந்ந்து கொள்கின்றனர். ச‌மையல் வல்லுனர்கள் அதன்படி சமையல் கலையை பகிர்ந்து கொள்கின்ற்னர்.

4 responses to “டிவிட்டர் வாங்கித்தந்த லோன்

  1. /ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் வங்கி வாடிக்கையாள‌ர் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் அவர் டிவிட்டர் பதிவை படித்துவிட்டு அலிசனை தொடர்புக்கொண்டார். அவருடைய கோபத்தை புரிந்துகொள்வதாக கூறிய அதிகாரி பிரசச்சனையை தீர்த்து வைப்பதாகவும் உற்தி அளித்தார்//

    ஹிஹி! இங்கியெல்லாம் நேரா போயி சொன்னாவே கூட காதுல போட்டுக்க மாட்டாங்க!

  2. நேத்துத்தான் சொன்னேன். டிவிட்டர்ல கலக்குறீங்கன்னு.

    இன்னைக்கு புகுந்து விளையாடுறீங்க.

    வேர்ட்ப்ரஸ்காரங்களே இப்படித்தான் அறிவு ஜீவியா கீறாங்கப்பா..

பின்னூட்டமொன்றை இடுக