புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.

தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த‌ வைர‌ஸ் நீக்க‌ சேவையின் பின்னெ உள்ள‌ இணைய‌தள‌ம் தேடிய‌ந்திர‌த்தில் முன்ன‌ணி பெறுவ‌த‌ற்கான‌ ம‌ற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த‌ சேவை உங்க‌ள் த‌ள‌த்தை தேட‌ல் ப‌ட்டிய‌லில் முன்ன்ணிக்கு கொண்டுவ‌ர‌ உத‌வும் என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌மிழ‌னின் பெருமையை உல‌க‌றிய‌ச்செய்யும் முய‌ற்சியாக‌ ந‌ன்ப‌ர்க‌ளோடு சேர்ந்து இதில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் தெரிவித்துள்ளார்.அவ‌ர‌து முயற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

வ‌ச‌க‌ர் என்ற‌ முறையில் நாக‌ம‌ணி விடுத்த‌ வேன்டுகோளை ஏற்றும் த‌மிழ‌ர்க‌ளின் இணைய‌ முய‌ற்சி வெற்றி பெற‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லிலும் இந்த‌ ப‌திவை எழுதியுள்ளேன்.இணைய‌வாசிக‌ள் இந்த‌ சேவையை பயன்ப‌டுத்திப்பார்த்து பய‌னுள்ள‌து எனில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைச் செய்ய‌லாம்.இந்த‌ தளத்திலும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌லாம்.

———-
link;

36 responses to “புதிய வைரஸ் நீக்கும் சேவை

  1. இந்த வைரஸ் ரீமுவர் பயன்படுத்திய பிறகு என் கம்யூட்டர் நல்ல வேகமாதான்
    இருக்கு , ஆனா ஒன்னு சொல்லியேன் ஆகனும் தமிழன் தான் எல்லா இடத்திலேயும்
    பொழைக்க தெரியாதவனா இருக்கான்.
    ஆனாலும் உங்க சேவைக்கு ஒரு சல்யூட்.
    உண்மையிலே தமிழனை நினைச்சா பெருமையாதான் இருக்கு..

    King – ராஜா

  2. சிறந்த மென்பொருள் நண்பரே,
    என் லேப்டாப் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடிரென்று restart ஆகும்.
    என்ன பிரச்சினை என்று தெரியாமல் இருந்தது. என்னிடம் உள்ள antivirus
    virus எதும் இல்லை என்று சொன்னாலும் இந்த பிரச்சினை தீரவில்லை.
    நீங்கள் தெரியப்படுத்திய இந்த மென்பொருளை பயன்படுத்திய பிறகு
    இந்த பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தது. சிஸ்டமும் வேகமாகத்தான் உள்ளது.
    நல்ல பதிவு.

  3. பிங்குபாக்: வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை. « Cybersimman's Blog·

  4. கண்டிப்பாக நம் கம்யூட்டரில் இருக்க வேண்டிய மென்பொருள்.
    வைரஸ் உலகில் நிச்சயமாக இது ஒரு மைல் கல்லாக இருக்கும்.
    உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்…

  5. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சிம்மனுக்கும் நன்றி….நன்றி…
    Beta version என்பதால் வைரஸை நீக்குவது மட்டும்
    தான் கவனத்தில் கொண்டுள்ளோம். நமது Full version-ல்
    எந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கியுள்ளது
    என்ற முழுவிவரமும் அளிக்கப்படும்.விரைவில்
    winmani virus remover Full version வெளியிடப்படும்
    என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
    -நாகமணி

  6. இதற்கு அப்டேட் எடுக்கத்தேவையில்லையா? எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் தர முடியுமா?

    யாழ்ப்பாணத்திலிருந்து(இலங்கை)
    பிரவீனா

பின்னூட்டமொன்றை இடுக