செயலியின் அருமையை உணர்த்திய செயலி

செயலிகள் இன்று இணைய உலகில் சர்வ சகஜமாகிவிட்டன.செல்போன்களில் செயல்படக்கூடிய சின்னஞ்சிரியசாப்ட்வேர்கள் என்ற விளக்கம் தேவையில்லாமலேயே செயலி என்றதுமே புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இவை பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிவிட்டன.

செயலிகள் குறிப்பிட்ட செயல்பாட்டுக்காக செல்போனில் குடியிருப்பவை(டவுண்லோடு செய்யப்படுபவை)என்பது உலாபேசிகள் உலகில் அனைவரும் புரிந்து கொள்ளத்துவங்கிவிட்டனர் என்றாலும் செயலிகள் எந்த அளவுக்கு பயன்மிக்கவையாக விளங்கும் என்பதை முதலில் உணர்த்திய ஆரம்பகால வெற்றிகரமான செயலிகளில் ஒன்றாக டியூப் எக்ஸிட் செய்லியை சொல்ல வேண்டும்.

லண்டன் சுரங்க ரெயிலில் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட டியூப் எக்ஸிட் சுவாரஸ்யமானது மற்றும் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளூம் பிரச்ச்னைக்கு தீர்வாக மையக்கூடியது என்னும் செயலிகள் சார்ந்த அனைத்து அம்சங்களுக்கான அழகான உதாரணமாகவும் திகழ்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் செயலிகளின் பின்னே உள்ளே இருக்கும் தனிமனித முயற்சியின் அடையாளமாகவும் , வெற்றிகரமான செயலியின் மூலம் சாமன்யர்கள் சாப்ட்வேர் அதிபர்களாகவும் உருவாகும் டிஜிட்டல் கதைகளுக்கான சான்றாகவும் இது விளங்குகிறது.

ஒரு தேவை,அதற்கு தீர்வு காணும் வேட்கை ஆகியவற்றின் பயனாக பிறந்தது இந்த செயலி.

டியூப் ரெயில் என்று பிரபலாமாக குறிப்பிடப்படும் லண்டன் சுரங்க ரெயிலில் பயணிகள் எந்த பெட்டியில் அமர்ந்தால் இறங்கும் போது வசதியாக இருக்கும் என்பதை  உணர்த்தும் நோக்கத்தோடு லான்ஸ் ஸ்டுவர்ட் என்னும் லண்டன்வாசி இந்த செயலியை உருவாக்கினார்.

அதாவது நம்மூரில் இரெயிலில் பயணம் செய்யும் போது காலை நேர பரபரப்பில் இறங்கியவுடன் படிகளில் ஏறி செல்வதற்காக படிகளுக்கு அருகே வரக்கூடிய கடைசி பெட்டியில் ஏறிக்கொள்வது உண்டல்லவா?அதே போல லண்டனில் படிகளுக்கு அருகே இறங்கி கொள்வது என்பது அத்தனை சுலபம் அல்ல.காரணம் எந்த பெட்டி எந்த நிலையத்தில் படிகளின் அருகே நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.எனவே படிகளின் அருகே நிறகும் பெட்டியில் இருப்பவர்கள் தங்கள் அதிர்ஷ்ட்டத்தை மெச்சியபடி உடனே படிகளில் ஏறிச்சென்றுவிடலாம்.மற்றவர்கள தங்கள் அதிர்ஷ்ட்டத்தை நொந்தபடி கூட்டத்தில் காத்திருந்து படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

சுரங்க ரெயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கனக்கான பயணிகள் இந்த நிலையை அனுபவித்து வருகின்றனர்.ஆனால் இதற்கு தீர்வு காண முடியும் என எந்த பயணியும் நினைத்தில்லை.ஒரு பயணத்தின் போது லான்ஸ் ஸ்டூவர்ட்டுக்கு இந்த எண்ணம் தோன்றியது.

அன்றைய தினம் அவர் வர்த்தக சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அவசரமாக சென்றுகொண்டிருந்தார்.ஆனால் ஆக்ஸ்போர்டு சர்கஸ் ரெயில் நிலையத்தில் தவறான இடத்தில் இறங்க நேர்ந்ததால் அவர் கூட்டத்தின் வால் முனையில் சிக்கிகொண்டு தவித்தார்.இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால் அன்ரை சந்திப்புக்கு குறித்த நேரத்தில் சொல்ல முடியமால் போனது.அட இன்றைய தினம் படிகளில் அருகே வரும் ரெயில் பெட்டியில் ஏறியிருக்க கூடாதா என நினைத்து பார்த்த அவர் ஒவ்வொரு முறையும் ஏன் இப்படி தெரியாமல் தவிக்க வேண்டும் என்றும் நினைத்துப்பார்த்தார்.

அப்போது தான் மின்னல் கீற்று போல சுரங்க ரெயிலில் எந்த பெட்டிகள் எந்த நிலையங்களில் படிகள் அருகே நிற்கும் என்பதை செல்போனில் சுட்டிக்காட்டகூடிய ஒரு சாப்ட்வேரை அதாவது செயலியை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

இப்படி ஒரு செயலியை உருவாக்கினால் ரெயிலில் ஏறும்போதே சரியான பெட்டியாக் பார்த்து ஏற்க்கொண்டு இறங்கும் போது குட்டத்திற்கு முன்பாகவே வாயில்படியில் ஏறிசென்றுவிடலாம் என்ற எண்ணமே அவரை உற்சாக்த்தில் ஆழ்த்தியது.

அந்த உற்சாகம் தந்த உதவேகத்தோடு செயலியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.ஐடி துறையில் அவருக்கு அனுபவம் உண்டே தவிர சாப்ட்வேரை உருவாக்குவதில் முன் அனுபவம் இல்லை.இருப்பினும் துடிப்புடன் இந்த முயற்சியில் இறங்கினார்.முதலில் ஒரு சில வாரங்களில் செயலியை உருவாக்கிவிடலாம் என நினைத்தார்.ஆனால் அது தப்பு கணக்காகி போனது.

காரணம் லண்டன் சுரங்க ரெயில் பாதையில் மொத்தம் 270 ரெயில் நிலையங்களும் 700 நடைமேடைகளும் இருக்கின்றன.ஒவ்வொன்றிலும் ரெயில் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்ற தகவல்களை திரட்டினால் மட்டுமே வழிகாட்டும் செயலியை முழுமையாக உருவாக்க முடியும்.

முதலில் இந்த தகவல்களை திரட்டும் பணியை வேறொருவரிடம் ஒப்படைத்திருந்தார்.ஆனால் அந்த நபரின் பணி திருப்தியை தராததால் ஸ்டுவர்ட்டே களத்தில் இறங்கி ஒவ்வொரு ரெயில் நிலையமாக ஏறி இறங்கி ரெயில் பெட்டி நிற்கும் இடங்கள் பற்றீய விவரங்களை திரட்டினார்.இதற்கு பல மாதங்கள் ஆனது.

பின்னர் சாப்ட்வேர் உருவாக்கம் பற்றி அறிந்த தனது நண்பரின் உதவியோடு டியூப் எக்ஸிட் என்னும் பெயரிலான செயலியை வடிவமைத்தார்.

ரெயிலி ஏறுவதற்கு முன் இந்த செயலியில் பயண இடத்தை கிளிக் செய்தால் ரெயில் பெட்டி நிற்கும் இடத்தை அது சுட்டிக்காட்டிவிடும்.

ஆப்பிளின் ஐபோனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி 2007 ஜூன் மாதம் அறிமுகமானதுமே லண்டன்வாசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டானது.

3 responses to “செயலியின் அருமையை உணர்த்திய செயலி

பின்னூட்டமொன்றை இடுக