புத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்.

புகைப்படங்கள் தேவை என்றால் கூகுலிலேயே தேடிப்பார்கலாம்.இல்லை புகைப்படங்களுக்கு என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்கலாம்.

இப்படி புகைப்படங்களுக்காக என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களில் போட்டோ லைப்ரரியையையும் சேர்த்து கொள்ளலாம்.

புகைப்பட நூலகம் என்னும் பொருள்பட உருவாக்கப்பட்டுள்ள இந்த தேடியந்திரம் என்ன புகைப்படம் வேண்டும் கேளுங்கள் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்று சொல்வது போல நேர்த்தியாக புகைப்படங்களை தேடித்தருகிறது.

அடிப்படையில் கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் குறிச்சொல்லை டைப் செய்து தேட வேண்டும்.ஆனால் அதன் பிறகு தேடுபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல் விதங்களில் தேடலை சுருக்கி கொள்ளலாம்,விரிவு படுத்திக்கொள்ளலாம்.

முதலில் காட்டப்படும் படங்கள் புகைப்பட கலைஞரின் படைப்பாற்றலை உணர்த்தக்கூடிய அருமையான படங்களாக இருக்கின்றன.அந்த வகையான படங்கள் தேவையில்லை என்றால் செய்தி மற்றும் பொழுதுபோக்கு வகை படங்கள் என குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம்.

இந்த தேடியந்திரம் உலகில் உள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களின் படங்களை எல்லாம் தன் வ‌சம் கொண்டுள்ளது.இதன் பொருள் தரமான புகைப்படங்கள் கிடைக்கும் என்பது  ம‌ட்டும் அல்ல அவை காப்புரிமை பெற்றதாக இருக்கும் என்பதால் அவற்றுக்கு உண்டான கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்ந்தெடுக்கும் புகைப்படத்திற்கு ஆன்லைனிலேயே காசு கொடுத்து வாம்ங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது.எல்லொருக்குமே இத்தகைய காப்புரிமை படங்கள் தேவையிருக்காது. பெரும்பாலானோர் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இலவச படங்களையே விரும்புவார்கள்.

அவர்களும் கவலைப்பட வேண்டாம்.தேடும் போதே காப்புரிமை படம் தேவையா இலவச படம் தேவையா என்பதை குறிப்பிட்டு தேடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வளவு ஏன் புகைப்படம் எப்படி இருக்க வேண்டும்? மனிதர்கள் தொடர்பானதாக இருக்க வேண்டுமா?என்றெல்லாம் கூட குறிப்பிட்டு தேடலாம்.இன்னும் ஒரு படி மேலே போய் புகைப்படத்தில் ஆண்கலும் பெண்களும் சேர்ந்து இருக்க வேண்டுமா?இல்லை பெண்கள்/ஆண்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றும் கூட குறிப்பிடலாம்.

கடற்கரையில் மாலை நேரத்தில் சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட காட்சி என்பது போல துல்லியமாக வரையரை செய்தும் தேடலாம்.புகைப்படத்தின் வண்ண‌ம் ,பின்னணி போன்றவற்றையும் தீர்மானித்து கொள்ளலாம்.புகைப்படம் எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.அதாவது ஜேபெக் கோப்பு வடிவிலா அல்லது பிட்மேப் வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேலும் ஒரு பக்கத்தில் எத்தனை புகைப்படங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கூட குறிப்பிடலாம்.

இந்த தேடியந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வதற்காகவே ஒரு வழிகாட்டும் குறிப்புகளை படிக்க சொல்லும் அளவுக்கு கூடுதல் அமசங்களும் வசதிகளும் இருக்கின்ற‌ன என்றே சொல்ல வேண்டும்.

புகைப்படங்களை முன்னோட்டம் பார்க்கும் வசதியும்,டவுண்லோடு செய்து கொள்ளும் வசதிகளும் கூட கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் ஒன்று இந்த அம்சங்களை எல்லாம் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்றால் முதலில் உறுப்பினராக் சேர வேண்டும்.உறுப்பினராக‌ சேர்வது எளிதானது;அதற்கென கட்டணம் தேவையில்லை.

புகைப்பட‌ பிரியர்கள் ஒருமுறை இந்த தேடியந்திரத்தை பயன்ப‌டுத்தினார்கள் என்றால் அன்பிறகு இதன் அபிமானியாகி விடுவார்கள் என்று சொல்லலாம்.

புகைப்படங்களை தேட.;http://www.photolibrary.com/#

———–

புகைப்பட தேடிய‌ந்திரம் தொடர்பான என் முந்தைய பதிவு;

புகைப்பட தேடலுக்கு புதிய தேடியந்திரம்

6 responses to “புத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்.

  1. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான– தமிழ் திரட்டியில் — தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வருகை இனிதாகுக

பின்னூட்டமொன்றை இடுக