டிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து கொள்ளும் டிவிட்லேயை பார்த்ததுமே அட மற்றொரு ‘டிக்’ நகல் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.ஆனால் மற்ற டிக் நகல்கள் போல முதல் பார்வைக்கு பின் ஏமாற்றத்தை அளிக்காமல் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் டிவிட்லே தனக்கென தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருக்கிறது.

அடிப்படையில் டிக் போன்றது என்றாலும் ‘டிக்’கைவிட மாறுபட்டது மட்டும் அல்ல ஒருவித்ததில் ‘டிக்’கைவிட‌ டிவிட்லே மேம்பட்டது.

சமுக புக் மார்கிங்க் சேவை என்று வர்ணிக்கப்படும் ‘டிக்’மற்றும் அதன் நகல்களான நியூஸ்வைன்,ரீடிட்,மற்றும் நம்மூரின் தமிழிஷ் உட்பட அனைத்து சேவைகளுமே  இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் கண்டெடுக்கும் சுவாரஸ்யமான இணைப்புகளை சமர்பிப்பதன் மூலம் மற்றவர்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றன.இந்த இணைப்புகள் மீது சக இணையவாசிகள் வாக்களிக்கலாம்,கருத்து சொல்லி விவாதிக்கலாம்.இணையவாசிகளின் வாக்குகள் அடிப்படையிலேயே எந்த இணைப்பு முன்னிலை பெறுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிற‌து.

குறிப்பிட்ட ஆசிரியர் குழு ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக இணையவாசிகளே செய்திகளையும் இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள வழி செய்வதே இந்த வகை தளங்களின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.இதுவே புதுப்புது செய்திகளை தெரிந்து கொள்ளவும் உத‌வுகிறது.

இந்த வசதிகளோடு டிக் அறிமுகமான போது செய்திகளை ஜனநாயகமயமாக்கிய புரட்சிகரமான சேவையாக புகழப்பட்டது.செய்திகள் மற்றும் தகவல்கள் பகிரப்படுவதில் இணையவாசிகளின் பங்களிப்பை முன்னிலை பெற வைத்ததன் காரணமாகவே ‘டிக் ‘இணைய உலகில் பெரும் வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து ‘டிக்’ நகல்களும் உதயமாயின.ஒரு சில வடிவமைப்பை தவிர எந்த மாற்றமும் இல்லாமல் அறிமுகாமாயின.மேலும் சில சின்ன மாற்றத்தோடு இணையவாசிகளை கவர முயன்றன.

இவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு டிவிட்டரின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் வகையில் டிவிட்லே உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது டிவிட்லேயில் எல்லாமே டிவிட்டர் மயம் தான்.

முதலில் டிவிட்லேயை பயன்படுத்த இதில் தனியே உறுப்பினராக வேண்டிய அவசியமில்லை.டிவிட்டர் கணக்கு மூலமே இதில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த‌ பகிர்தல் புதிய செய்தி,தக‌வல்களை கண்டறிய உதவும்.

இப்படி பயனுள்ல் சுவாரஸ்யமான தகவலை பார்த்தால் டிக்கில் என்ன செய்வோம் என்றால் அதற்கு வாக்களிப்போம்.ஆனால் டிவிட்டரில் என்ன செய்வோம்.மறுபதிவிட்டு ,அதாவது ரிடிவீட் செய்து ஆமோதிப்போம் அல்லவா.அதே தான் டிவிட்லேயிலும் நாம் காணும் நல்ல செய்திகளை ரிடிவீட் செய்யலாம்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் டிவிட்லேயில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகள் உடனடியாக அதனை பகிர்பவரின் டிவிட்டர் பக்கத்திலும் வெளியாகும்.இதன் மூலம் அந்த செய்தி அவரது பிந்தொடர்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு விடும்.டிவிட்டர் உலக வழக்கப்படி அந்த செய்தியால் கவரப்படுபவர்கள் அதனை ரிடிவீட் செய்ய முற்படும் போது அந்த ரிடிவீட் வாக்காக கருதப்படும்.ரிடிவீட்டை படிப்பவர்களில் அதனை மீண்டும் ரிடிவீட் செய்வார்கள் அல்லவா அப்போது மேலும் வாக்குகள் கூடும்.இப்படியாக டிவிட்டர் வலைப்பின்னலில் ரிடிவீட் அலை விரிய விரிய செய்திக்கான ஆதாரவும் பெருகி வாக்குகளும் அதிகரித்து அந்த செய்தி முன்னிலை பெறும்.

ஆக தனியே வாக்களிக்கும் தேவை இல்லாலாமல்,டிவிடர் இயல்பு படி எந்த‌ செய்தி ரிடிவீட் தனமையை பெற்றுள்ளதோ அந்த செய்திகளோ முன்னிலை பெறும் .இதன் காரணமாக குழ் சேர்ந்து வாக்களித்து ஒரு செய்தியை முன்னுக்கு கொண்டு வ‌ருவதெல்லாம் சாத்தியமில்லை.

அதோடு டிவிட்லேவுக்கு என்று தனியே எதையும் செய்ய வேண்டியதில்லை.நல்ல செய்தி அல்லது தகவலை பார்க்கும் போது அதனை பகிர்ந்து கொண்டாலே போதும் அது டிவிலேயிலும் வெளியாகும்,டிவிட்டர் கணக்கிலும் வெளியாகும்.

டிவிட்லேயில் பகிரப்படும் செய்திகள் தொழில்நுட்பம்,பொழுதுபோக்கு,செய்திகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இடம்பெறுகின்றன.அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ற செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

டிவிட்லேயில் மேலும் கூடுதலான பல அம்சங்கள் இருக்கின்றன.

இணைய முகவரி;http://twittley.com/

1 responses to “டிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே

பின்னூட்டமொன்றை இடுக