டிவிட்டரால் கிடைத்த தொலைந்த லேப்டாப்

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்த ஐ டி ஆலோசகர் ஒருவரின்  தொலைந்து போன லேப்டாப் இப்படி டிவிடட்டர் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது.

அதிலும் ஆச்சர்ய‌ம் என்னவென்றால் கனடாவை சேர்ந்த அவர் அமெரிக்காவில் தனது லேப்டாப்பை தவறவிட்ட பின் சொந்த நாடு திரும்பிய நிலையில் அவரது டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தேடலில் ஈடுபட்டு லேப்டாப் மீட்கப்பட உதவியுள்ளனர்.

கனடாவை சேர்ந்த சீன் பவர் என்னும் அந்த ஐ டி ஆலோசகர் தொழில் முறை பயணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார்.இந்த பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக அவர் தனது லேப்டாப்பை தவறவிட்டார்.லேப்டாப் பையில் அவரது செல்போன் மற்றும் பிறப்பு சான்றிதழ்களும் இருந்தன.

நல்லவேலையாக அவரது பாஸ்போர்ட் அவரிடெமே இருந்ததால் கனடா திரும்பிவிட்டார்.லேப்டாப்பிற்கு பதிலாக ஐபேடை வாங்கி கொண்டவர் தனது வேலைகளில் மூழ்கிவிட்டார்.இருப்பினும் லேப்டாப்பை தவறவிட்டது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.

இதனிடையே லேப்டாபில் பொருத்தப்பட்டிருந்த டிராகிங்க் சாப்ட்வேர் மூலமாக அந்த லேப்டாப் இருக்குமிடம் அவருக்கு தெரிய‌ வந்தது.நியூயார்க்கின் மான்ஹட்டன் பகுதியில் உள்ளரெஸ்டாரண்ட ஒன்றில் யாரோ ஒருவர் அந்த லேப்டாப்பை பயன்படுத்துவதும் தெரியவந்தது.அது மட்டும் அல்ல  சாப்ட்வேர் உதவியுட‌ன் அந்த நபர் லேப்டாப்பை பயன்ப‌டுத்தும் காட்சியையும் சீன் பவரால் புகைப்படம் இணையம் வழியே புகைப்படம் எடுக்க முடிந்தது.அது மட்டும் அல்ல லேப்டாப்பை வைத்திருந்த நபர் அதன் மூலமே தனது சொந்த பெயரிலேயே இணைய தொலைபேசி சேவையான ஸ்கைபையும் பயன்ப‌டுத்தியிருந்தார்.

பவர் உடனடியாக போலீஸில் புகார் தெரிவிக்கவோ அல்லது அமெரிக்காவில் உள்ள யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றோ நினைக்கவில்லை.மாறாக டிவிட்டரை பயன்படுத்தபவர்கள செய்யக்கூடியதை போல இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

‘டிவிட்டர் (தோழர்களே)உதவுங்கள்,என்னுடைய காணாமல் போன லேப்டாப்பை பிரே சாப்ட்வேர் கண்டுபிடித்து விட்டது.அதன் விவரங்கள் இதோ.திருடனையும் பார்க்க முடிகிற்து” என்று அவர் டிவிட்டரில் பதிவை வெளியிட்டார்.

பவர்  டிவிட்டர் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்.அவருக்கு டிவிட்டரில் 12,ஆயிரம் பின் தொடர்பாளர்கள் இருந்தனர்.

பவர் திருடு போன லேப்டாப் பற்றி குறிப்பிட்டதுமே பின் தொடர்பாளர்களில் பலர் இந்த தக‌வலை படித்தனர்.அவர்களில் சிலர் தாங்களே களத்தில் இறங்கவும் தீர்மானித்தனர்.

ஹியூஜ் மைக்குயர் என்னும் பின் தொடர்பாளர் லேப்டாப் திருடனின் பெயரை கூகுலில் தேடிப்பார்த்து அவர் தொடர்பான இணைய முகவரி ஒன்றை கண்டறிந்து கூறினார்.

மற்றொரு பின் தொடர்பாளர் .’உங்கள் லேப்டாப்பை மிட்க ஒரு படையை ஏற்பாடு செய்ய முடியும்,திருடனை சுற்றி வளைத்து விடலாமா? என்று கேட்டிருந்தார்.

ஆனால் பவர் யாருக்கும் ஆப‌த்து ஏற்படுவதை விரும்பவைல்லை.எனவே நியூயார்க் போலீசாரை தொடர்பு கொண்டு ரெஸ்டாரண்டுக்கு காவலர்களை அனுப்பி வைக்க முடியுமா என விசாரித்தார்.அதோடு அங்கிருந்த தனது தோழி ஒருவரையும் ரெஸ்டாரண்டில் காவலர்கள் வருகைக்காக காத்திருக்குமாறு கூறினார்.

ஆனால் பவர் புகார் மனு அளிக்காததால் காவலர்கள் வரமுடியாது என தெரிவித்து விட்டதாக அந்த தோழி எஸ் எம் எஸ் மூலம் தகவல் அனுப்பினார்.இருப்பினும் சும்மாயிருக்காமல் ரெஸ்டாரண்ட் உரிமையாளரோடு பேச்சு கொடுத்தபடி இருந்தார்.

தோழி தெரிவித்த இந்த தகவலையும் பவர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இந்த பதிவுகளால் ஈர்க்கப்பட்ட நிக் ரீஸ் என்னும் பின் தொடர்பாளர் ரேஸ்டாரண்டுக்கு தான்  செல்வதாக டிவிட்டரில் தெரிவித்துவிட்டு நேராக அங்கே சென்று விட்டார்.அங்கே பவரின் தோழியை சந்தித்து பேசிய நிக் ரெஸ்டாரண்டில் இருந்த ஊழியர் ஒருவரிடம் லேப்டாப் பை இருப்பதாக தகவல் தந்தார்.

அதை படித்ததுமே பவர் பதட்டமாகி விட்டார்.தனக்கு உதவ நினைத்து நிக் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்ள போகிறாரே என அஞ்சிய அவர் ,திருடனை பொந்தொடர வேண்டாம்,அது ஆபத்தில் முடியலாம் என தகவல் அனுப்பினார்.

நிக் அப்படி அஞ்சியதாக தெரியவில்லை.ஏற்கனவே ரெஸ்டாரண்ட உரிமையாளரிடம் பேச்சு கொடுத்த போது அவர‌து தொலைபேசி எண் மற்றும் முகவரியை வாங்கியிருந்தார்.

நிக் அளித்த தொலைபேசி எண் மூலம் பவர் ரெஸ்டாரண்ட் உரிமையாளரிடம் பேசி லேப்டாப் பற்றி தெரிவித்தார்.இதனைய‌டுத்து அவர் யாரிடமோ தொலைபேசியில் பேசினார்.

ரெஸ்டாரன்ட் உரிமையாளர் போனில் பேசுகிறார்,லேப்டாப் வைத்திருக்கும் ஊழியரிடம் தான் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என நிக் இது பற்றி தகவல் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து ரெஸ்டாரண்டில் இருந்தவர்களிடம் நிக் மற்றும் பவரின் தோழி இணையத்தில் எடுக்கப்பட்ட லேப்டாப் திருடனின் புகைப்படத்தை காண்பித்த‌னர்.புகைப்படத்தில் இருந்தவர் அங்கே வேலை பார்த்த நபர் என்பது உறுதியான‌து.

இடை அறிந்ததுமே உரிமையாளர் கடுங்கோபம் கொண்டதாக நிக் தெரிவித்தார்.அதை படித்ததும் பவர் கவலையடைந்தார்.உங்களுக்கு ஒன்னும் ஆப‌த்தில்லையே என விசாரித்தார்.சில நிமிடங்களுக்கு எந்த பதிலும் இல்லை.

நாண்கு நிமிடங்கள் கழித்து நிக்,பவரின் தோழியிடம் லேப்டாப் பை ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

லேப்டாப் கிடைத்தது தெரிந்ததுமே பவர் நெகிழ்ந்து போய்விட்டார்.டிவிட்டரில் அதனை பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.லேப்டாப் பையில் எல்லாம் சரியாக இருப்பதாக அறிகிறேன்.இதனை என்னால ந்மபவே முடியவில்லை,நான் 800 கிமீ தொலைவில் இருக்கிறேன்,ஆனால் என்னுடைய லேப்டாப் திரும்பி கிடைத்துவிட்டது என்று அவர் உண‌ர்ச்சி பெருக்குடன் பதிவிட்டார்.

டிவிட்டரில் பின் தொடர்பாளர்கள் இருந்தால் இது போன்ற‌ அதிசயங்கள் சாத்தியமாகலாம் என அவர் குறிப்பிட்டார்.

நிக் என்னும் அறிமுகம் இல்லாத பின் தொடர்பாளர் ஆப‌த்தை பெருட்படுத்தாமல் செய்த உதவி பற்றியும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
ஆனால் நிக்கோ மிகவும் அமைதியாக ,உதவி தேவைப்பட்ட ஒருவருக்கு கைகொடுத்துள்ளேன் அவ்வள‌வே என்று பதில் அளித்தார்.எனக்கு ஒரு பிரச்ச்னை என்றால் மற்றவர்கள் இது போல உதவ மாட்டார்க‌ளா என்றும் கேட்டிருந்தார்.

இந்த‌ உணர்வும் இந்த நம்பிக்கையும் தான் டிவிட்டர் உண்டாக்கும் பந்தத்தினால் உண்டானது என்றும் சொல்லலாம் தானே.

————–

http://twitter.com/#!/seanpower

5 responses to “டிவிட்டரால் கிடைத்த தொலைந்த லேப்டாப்

பின்னூட்டமொன்றை இடுக