தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள்.

இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!.

இது ஒரு புறம் இருக்க, தலைப்பு பார்த்தே புத்தகம் வாங்குபவர்கள் இருக்கின்றனர்.இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த‌ எழுத்தாளரின் புத்தகத்தை பார்த்தால் வாங்கிவிடுவார்கள்.

இவை தவிர சிலர் ஒரு புத்தகத்தை வாங்கும் முன் முதலில் அதன் முதல் அத்தியாயத்தை பொருமையாக படித்து பார்த்து விடுவதுண்டு.முதல் சில பக்கங்களை படித்ததும் தொடர்ந்து படிக்கலாம் என்ற உண்ர்வு ஏற்பட்டால் புத்தகத்தை வாங்கி விட‌லாம்.

இந்த பழக்கம் உங்களுக்கும் இருந்து,புதிய புத்தகங்களை வாங்க இதுவே சிறந்த‌வழி என்று நீங்கள் நினைத்தால் புக் டெய்லி தளத்திற்கு நீங்கள் தினமும் செல்லலாம்.

புத்தக கடலில் இருந்து உங்களுகு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம் என்ற போதிலும் இதனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .காரணம் கொஞ்சமாக படிக்கும் ஆர்வம் இருந்தால கூட இந்த தளம் உங்களை புத்தகங்களுக்கு அடிமையாக்கிவிடும்.அதாவது தினமும் புத்தகங்களை படிக்க வைத்துவிடும்.தினம் ஒரு புத்தகத்தை அதாவது புத்தக மாதிரியை படிக்க விருப்பம் என்றால் இதன் பக்கம் போகலாம்.

புத்தக மாதிரி என்றால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படிப்பது.ஒரு சில இனிப்பு க‌டைகளில் இனிப்புகளை வாங்கும் முன் முதலில் கொஞ்சம் சுவைத்து பார்க்க தருவதில்லை,அதே போல இந்த தளம் ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை இலவசமாக படிக்க தருகிற‌து.

இப்பைட் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து அந்த புத்தகத்தை வாங்க‌ விரும்பினால் இந்த தலம் மூலமே அதனை வாங்கவும் செய்யலாம்.

முகப்பு பக்கத்தில் வரிசையாக புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப பட்டியலிட்டப்பட்டுள்ளது.எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் கிளிக் செய்து அவற்றின் முதல் அத்தியாயத்தை படித்து கொள்ளலாம்.புத்தக் வகைகலூக்கு ஏற்பவும் தேடிப்பார்க்கலாம்.அருகிலேயே இந்த தளத்தின் டாப் டென் புத்தக பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதிலும் தேடலாம்.

எப்படியோ எந்த புத்தகத்தையும் அதன் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தி சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சுருக்கத்தை படிப்பது போல முதல் அத்தியாய்த்தை படித்து புத்த்கம் வாங்குவதும் சிறந்த வழி தான்.ஒரு சில எழுத்தாளர்களின் இனையதளங்களில் இப்பைட் புத்தக்த்தின் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்து பார்க்கும் வசதி அளிக்கபடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்த தள‌ம் 80 ஆயிரம் புத்தகங்களுக்கு இந்த வசதியை தருகிற‌து.

இந்த தள‌த்தில் இன்னொரு சுவாரஸ்யமான‌ விஷயம்.இதில் உங்கலுக்கு என்று ஒரு மாதிரி புத்தக அலமாரிட்யை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் விரும்பும் புத்தகத்தை எல்லாம் சேர்த்து கொள்ளலாம்.அத‌ன் பிறகு தினமும் அடுத்த புத்தகத்தின் மாதிரி அத்தியாயம் இமெயில் மூலமே அனுப்பி வைக்கப்ப‌டும்.ஆக தினமும் கொஞ்ச‌ம படித்து கொண்டே இருக்கலாம்.

இணையதள‌ முக‌வரி:http://www.bookdaily.com/

வழக்கம் போல ஒரு விஷயம்.இந்த தளம் ஆங்கில புத்தகங்களுக்கானது .தமிழிலும் இதே போல ஒரு புத்தக சேவை துவங்கப்பட்டல் நன்றாக இருக்கும்.

(நேற்று புதிதாக பதிவை காணவில்லையே என்று கேட்டு இதனை எழுத தூண்டிய நண்பர் சதாவுக்கு நன்றிகள் பல).

7 responses to “தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

  1. அருமை நண்பரே. ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்கு. தமிழ் புத்தகங்களுக்கு இல்லை என்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. காலப்போக்கில் அதுவும் வந்துவிடும் வாழ்த்துகள்.

  2. ரொம்ப ரொம்ப அருமை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. தமிழுக்கு இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.காலப்போக்கில் அதுவும் வந்து விடும்.வாழ்த்துகள்.

பின்னூட்டமொன்றை இடுக