புத்தகங்களை பட்டியல் போட வாருங்கள்!

புததகங்களையும் பட்டியலையும் பிரிக்க முடியாது தான்.

புத்தக உலகில் பட்டியல்களுக்கு குரைவில்லை தான்.

அதிகம் விற்கும் பெஸ்ட் செல்லர் பட்டியல்,பிரபலங்களின் நான் விரும்பி படித்த புத்தகங்கள்,வாசிப்பு நிபுணர்களின் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்,உலகின் சிறந்த 100 புத்தகங்கள்,உலகை மாற்றி அமைத்த புத்தகங்கள் என பட்டியலில் பட்டியல் நீள்கிறது.

பட்டியலின் பின்னே வணிக நோக்கம் இருக்கலாம்.சில நேரங்களில் உள் நோக்கமும் இருக்கலாம்.இலகீய உலக அரசியலும் மறைந்திருக்கலாம்.வெறும் மேதாவிலாசத்தின் வெளிப்பாடாக அமையலாம்.இவை பட்டியலின் உள்ளார்ந்த குறைகள் என்றாலும் அற்புதமான‌ புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள பட்டியல்களை போல சிறந்த வழிகாட்டி இல்லை.

ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் குவிந்து கிடக்கும் நிலையில் எந்த புத்தகத்தை படிப்பது என்னும் கேள்விக்கான பதிலை பட்டியல்கள் எளிதாக முன் வைக்கின்றன.

பட்டியல் புராணம் ஒரு புறம் இருக்க இணையம் இதனை மேலும் ஜனநாயகமயமாக்கி இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.பிர‌பலங்கள் மட்டும் தானா பட்டியல் போடலாம்.நீங்களும் பட்டியல் போடலாம்.அவற்றை வெளியிட எந்த பத்திரிகையின் தயவும் தேவையில்லை.இதற்காக என்றே பட்டியல் பகிர்வு தளங்கள் இருக்கின்றன.

22 புக்ஸ் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.புத்தகம் சார்ந்த பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அவற்றை பகிர்ந்து கொள்ளவும் உதவும் எளிமையான பகிர்வு தளம் இது.

இங்கு நீங்கள் தான் வாச‌கன் ,நீங்களே தான் நிபுணரும் கூட!அதாவது உங்கள் மனங்கவர்ந்த புத்தகங்களின் பட்டிய‌லை இங்கே வெளியிடலாம்.

பட்டியலுக்கு என்று எந்த வரம்பும் இல்லை.படித்த புத்தகம்,படிக்க நினைத்த புத்தகம்,படிக்க விரும்பிய புத்தகம் என எந்த பட்டியல் என்றாலும் ஓகே.

இந்த பட்டியலின் நோக்கம் ஒருவரது ரசனையை பகிர்ந்து கொள்வது மட்டும் அல்ல;மற்றவர்களின் பட்டிய‌லை பார்த்து புதிய சுவாரஸ்யமான புத்த‌கங்களை தெரிந்து கொள்ளவும் தான்.அந்த வகையில் இதில் பகிரப்படும் பட்டியல்களை மூலமாக அவரவர் தங்கள் ரசனைக்கு ஏற்ப புதிய புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

முதலில் இங்கே உள்ள பட்டியலை பாருங்கள் அதன் பிறகு உறுப்பினராகி உங்களது பட்டியலை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.

ஜேம்ஸ் அவரி என்னும் புத்தக பிரியர் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.இந்த தளத்திற்கான எண்ணம் தோன்றியதற்கு பின்னே சின்னதாக ஒரு கதை இருக்கிறது என்கிறார் அவரி.

ஒரு முரை அவரது அபிமான எழுத்தாளரான கர்ட் வானெகட் மொத்தம் எழுதிய புத்தகங்கள் எத்தனை என அறிய விரும்பியுள்ளார்.ஆனால் இணையத்தில் எங்கு தேடியும் அந்த பட்டியல் இல்லை.அப்போது தான் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் அமைத்தால் என்ன என்று நினைத்துள்ளார்.அதன் விளைவே 22 புக்ஸ் டாட் காம்.

அதென்ன 22 புக்ஸ்?அவரது அபிமான எழுத்தாளர் மொத்தம் எழுதிய புத்தகங்களின் எண்னிக்கை 22.

இப்படி தேவை சார்ந்து உருவான இந்த தளம் இன்று புத்தகம் தொடர்பான எல்லா வகை பட்டியல்களை பகிர்ந்து கொள்வதற்கான தளமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

பட்டியலை வலைப்பதிவு செய்வது,பேஸ்புக்கில் பகிர வழி செய்வது என புதிய வசதியை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அவரி திட்டமிட்டுள்ளார்.

நீங்களும் பட்டியல் போட தயாராகுங்கள்.இப்போது எல்லாம் ஆங்கில புத்தகங்களாக இருக்கிறது.தமிழையும் இடம் பெறச்செயுங்கள்.

எல்லா வெளிநாட்டினரும் படிக்க வேண்டிய பத்து தமிழ் புத்தகங்கள் என்று திருக்குறளில் ஆரம்பித்து பட்டியல் போடலாம்.இந்தியர்கள் படிக்க வேன்டிய தமிழ் புத்தகங்கள் என்றும் பட்டியல் போடலாம்.

இணையதள முகவரி;http://22books.com/

பின்னூட்டமொன்றை இடுக