என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகியுள்ளது.மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் அடுத்ததாக படிக்ககூடிய புத்தகத்தை பரிந்துரைக்கிறது.

அநேகமாக இந்த தளம் பரிந்துரைக்கும் புத்தகம் புத்தக பிரியர்கள் தேடியதாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது.காரணம் புத்தக பிரியர்கள் எந்த புத்தகத்தை படிக்க விரும்புகின்றன்றோ அதனை இந்த தளம் பரிந்துரை செய்கிறது.

பெரும்பாலான புத்தக் பரிந்துரை தளங்கள் ,ஒருவர் படிக்கும் புத்தக வகையை வைத்து அவருக்கு பிடிக்க கூடிய புத்தகத்தை முன் வைக்கின்றன .இந்த தளமோ எந்த புத்தகம் தேவை என்று கேள்வி கேட்க சொல்கிறது.அந்த கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை பரிந்துரைக்கிறது.

எப்படி என்றால்,எல்லோருமே ஏதாவது ஒரு நோக்கத்துடன் அல்லது எதிர்பார்ப்புடன் தானே புத்தகங்களை தேடுகின்றனர்.உதாரணத்திற்கு ஒருவர் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகத்தை படிக்க விரும்பலாம்.இன்னொருவர் செல்வந்தாராக வழிகாட்டக்கூடிய புத்தகத்தை தேடலாம்.

கொஞ்சம் தீவிர வாசகர்கள் கடவுள் உண்டா என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை படிக்க விரும்புவார்கள்.வாழ்க்கையில் முக்கிய்மானவை எவை என்னும் கேள்விக்கான புத்தகத்தையும் சில தேடலாம்.

இப்படி புத்தகங்கள் விடை அளிக்க கூடிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.இதை தான் எல்லா புத்தகமும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று மைன்ட் த புக் தளம் குறிப்பிடுகிறது.

இந்த கேள்வியை தான் புத்தக பிரியர்கள் கேடவும் கேட்கிறது.

அடுத்ததாக என்ன புத்தகம் படிப்பது என்னும் கேள்விக்கு ஆலோசனை பெற விரும்பும் வாசகர் இந்த தளத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் புத்தகத்திற்கான கேள்வியை கேட்டால் அதற்கான புத்தகத்தை இந்த தளம் பரிந்துரைக்கிறது.

விஞ்ஞானியாவது எப்படி என்பதில் துவங்கி நல்ல படங்களை ரசிப்பது எப்படி (சினிமா ரசனை என்னும் தலைப்பில் அம்ஷன் குமார் அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்)என்பது வரை எந்த கேள்வியை வேண்டுமானாலும் புத்தக பிரியர்கள் கேட்கலாம்.

மனதில் எதுவும் கேள்வி இல்லாவிட்டாலும் பரவாயில்லை,தளத்தில் சக் புத்தக பிரியர்கள் கேட்டுள்ள கேள்விகளையும் அதற்கான புத்தக பரிந்துரைகளையும் ஒரு பார்வை பார்த்து புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் கேட்கப்ட்ட கேள்விகள்,பிரபலமான புத்தக கேள்விகள் என தனித்தனி தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கும் ஒரு பட்டியல் இருக்கிறது.

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்ககூடிய பல புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.கூடவே அந்த புத்தகம் அவற்றுக்கான கேள்விக்கு பதில் தருகின்றனவா என்று வாச்கர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உள்ளது.வாக்குகளாக இவை இடம் பெறுகின்றன.புத்தக பிரியர்கள் தங்கள் பங்கிற்கும் வாக்களிக்கலாம்.தங்களுக்கு தெரிந்த பொருத்தமான புத்தகத்தையும் பரிந்திரைக்கலாம்.

சரியான புத்தகத்தை அடையாளம் காட்டுவதோடு இந்த தளம் தனது சேவையை நிறுத்தி கொள்கிறது.அந்த புத்தகம் அப்படி இப்படி என்னும் அறிமுக குறிப்புகளோ ,விமர்சன குறிப்புகளோ இல்லை.புத்தகத்தை பார்த்து விட்டு நேரடியாக அமேசானில் வாங்கி கொள்ளலாம் .அவ்வளவு தான்.

இந்த எளிமை தான் இதன் பலமும் கூட.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய புத்தகங்கள் வெளியாகி வாசகர்களை புத்தக கடலில் திக்கு முக்காட வைக்கும் நிலையில் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்னும் கேள்விக்கு பெஸ்ட் செல்லர் பட்டியல் ,விமர்சன் குறிப்புகள்,பரிந்துரைகள் ஆகியவற்றை எல்லாம் விட இது சிறந்த வழியாக இருக்கும்.அல்லது அவற்றோடு இதுவும் ஒரு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

எனவே கேட்டுப்பாருங்கள்.நல்ல புத்தகம் கிடைக்கும்.

இணையதள முகவரி;http://www.mindthebook.com/

1 responses to “என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

பின்னூட்டமொன்றை இடுக