புத்தம் புதிதாக ஒரு வேலை!.தேடித்தரும் தளம்

எப்படியெல்லாம் கிரியேட்டிவாக யோசிக்கின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்துகிறது ‘பை இயர் இட்ச்’ இணையதளம்.

இந்த இணையதளம் புதிய பொருத்தமான வேலை வாய்ப்பை தேடித்தருகிறது.ஆனால் இது வேலை வாய்ப்பு தளம் இல்லை.அதாவது படித்து முடித்து விட்டு புதிய வேலை வாய்பபை தேட நினைப்பவர்களுக்கான தளம் இல்லை இது.

மாறாக இந்த தளம் ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கானது!.

ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் எதற்கு வேலை தேட வேண்டும்,இதற்கென ஒரு தளமா என்று கேட்கலாம்?இந்த தேவையை உணர்த்தி அதற்கான தேடலில் உதவுவது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

அதாவது தற்போது பார்த்து கொண்டிருக்கும் வேலை போரடித்து போகலாம்.பல காரணங்களினால் இந்த வெறுப்பு ஏற்படலாம்.பார்ப்பது நல்ல வேலையாக இருந்தாலும் அதில் புதிய சவால்கள் இல்லாமல் ஒரு வித பழகிய தன்மை ஏற்படலாம்.உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லயே என நினைக்கலாம்.பணியில் கிடைக்கும் அனுபவத்தை புதிய திசையில் பயன்படுத்தலாமே என்று தோன்றலாம்.இந்த கட்டத்தில் புதிதாக வேறு ந‌ல்ல வேலை பார்க்கலாமே என்று தோன்றும்.

இதை தான் ஐந்தாண்டு அரிப்பு என்கிறது இந்த தளம்.

எந்த வேலையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அலுத்து விடும்.அப்போது அதைவிட நல்ல வேலைக்கு போய் விட வேண்டும் என்பது பொதுவான கருத்து.இல்லை என்றால் மனதுக்கு பிடிக்காத வேலையில் செக்கு மாடு போல உழல வேண்டியிருக்கும்.

ஒரு வேலை அலுத்து போகும் கட்டம் மாறுபடலாம் என்றாலும் ஐந்தாண்டுகள் என்பது ஓரளவு சரியான சராசரியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் தற்போதைய வேலையை விட்டு விட்டு புதிய வேலையை தேடுவதற்கான காலமாக ஐந்தாண்டு காலத்தை இந்த தளம் தேர்வு செய்து இதனையே ஐந்தாண்டு அரிப்பு என குறிப்பிடுகிறது.

இந்த மனநிலை பணியில் இருக்கும் பலருக்கு ஏற்படலாம் என்றாலும் உடனே வேறு வேலை பார்க்கும் துணிவு எல்லோருக்கு வந்து விடாது.சிலருக்கு பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை விட்டுவிடக்கூடாதே எனத்தோன்றும்.இன்னும் சிலருக்கோ வேறு வேலை தேடுவது மேலதிகாரிக்கு தெரிந்து விட்டால.. என்ற பயம் ஏற்படலாம்.இதை விட நல்ல வேலை கிடைப்பது எப்படி என்ற கேள்வியும் வாட்டலாம்.

இது போன்ற நிலை இருந்தால் நாங்கள் உதவுகிறோம் என்று உக்கம் தருகிறது இந்த தளம்.

வேலை மாற வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்கள் அந்த விருப்பத்தை இந்த தளத்தில் குறிப்பிட்டால் அவர்களின் திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற நல்ல வேலயை தேடித்தருகிறது.

ஆனால் இதற்காக மீண்டும் ஒரு முறை பயோடேட்டாவை எல்லாம் தயார் செய்து கொன்டிருக்க வேண்டாம்.மாறாக இதற்காக என்றே இந்த தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்தால் போதுமானது.

இந்த கோரிக்கை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் என்பதால் வேலை தேடுவது மேலதிகாரிக்கு தெரிய‌ வாய்ப்பில்லை.

அதே நேரத்தில் பல நிறுவன மேலதிகாரிகள் தங்கள் நிறுவனத்திற்கு நல்ல அனுபவம் உள்ள நபர்களை தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் இருக்கலாம்.இது போன்ற நிறுவங்கள் தங்கள் தேவையை குறிப்பிட்டால் இந்த தளம் அந்த நிறுவங்களுக்கு ஏற்ற பொருத்தமான நபரை பரிந்துரைக்கும்.

இதனால் புதிய வேலை தேடுபவருக்கும் பொருத்தமான வேலை வாய்ப்பு கிடைக்கு சாத்தியம் அதிகரிக்கும்.

ஆக அதிக ரிஸ்க் எடுக்காமல் திறமைகேற்ற புதிய வேலை வேன்டும் என நினைப்பவர்கள் அதாவது இந்த தளத்தின் மொழியில் ஐந்தாண்டு அலுப்பால் அவதிப்படுவர்கள் இந்த தளம் மூலமே அதனை அழகாக நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த ஐந்தாண்டு அலுப்பு பற்றி இந்த தளத்தின் வலைப்பதிவு பகுதியில் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தளம் பணி சூழலில் நண்பர்களின் திறமையை பாராட்ட உதவும் லாடிட்ஸ் தளத்தின் இன்னொரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.fiveyearitch.com/welcome
————-

லாடிட்ஸ் தளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த பதிவு வெளியான போதே லாடிட்ஸ் இணையதளம் நன்றி தெரிவித்திருந்து.(மொழி தெரியாவிட்டாலும்).

இப்போது அதனை நினைவு படுத்தி மெயில் அனுப்பியுள்ள லாடிட்ஸ் தளம் தங்களின் இந்த புதிய சேவை பற்றி குறிப்பிட்டுள்ளது.இந்த சேவை பற்றி முதலில் எனக்கு தகவல் சொல்வதாக அவர்கள் குறிப்பிட்டது ஒரு சம்பிரதாயமானதாக இருக்கலாம் என்றாலும் இந்த வலைப்பதிவிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதி இந்த தகவலை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் சிம்மன்

2 responses to “புத்தம் புதிதாக ஒரு வேலை!.தேடித்தரும் தளம்

பின்னூட்டமொன்றை இடுக