உதவிக்கு வந்த டிவிட்டர்.

காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன் மிகுந்ததாகவும் ஆகியிருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவில் காணாமல் போன பெண்மணி டிவிட்டர் குறிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த பெண்மணிக்கு 77 வயதாகிறது.சமீபத்தில் தான் ஜப்பானில் இருந்து அமெரிக்க வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது.

சசக்ஸ் வே என்னும் பகுதியில் தங்கியிருந்த அவர் காலையில் வாக்கிங் சென்ற போது குறித்த நேரத்தில் வீடு திரும்பவில்லை.அநேகமாக அவர் வழி தவறி சென்று அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை நிலைமை மேலும் மோசமாக்கியது.

அவர் காணாமல் போனது உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு,அப்புகுதியை சேர்ந்த போலீசார் விசாரணையை மேற்கொள்ளத்துவ‌ங்கினர்.வழக்கமான முறையில் தகவல்களை பகிர்ந்து கொண்ட போலீசார் இந்த பெண்மணி காணாமல் போன விவரத்தை தங்களது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு அவரை பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டிருந்தனர்.

இந்த குறும்பதிவு அந்த டிவிட்டர் கணக்கின் ஆயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை சென்ற‌டைந்தது.

அடுத்த 15 நிமிடங்களில் டிவிட்டர் பயனாளி ஒருவர் குறும்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த வயதான பெண்மணியை தங்கள் பகுதியில் பார்த்ததாக தகவல் தெரிவித்தார்.அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்திய போது அந்த பெண்மணி தான் காணாமல் போனவர் என்பது உறுதியானது.

உடனடியாக அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

————-

இதற்கு முன்னர் டிவிட்டர் உதவிக்கு வந்த நிகழ்வு;

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை

1 responses to “உதவிக்கு வந்த டிவிட்டர்.

  1. கண்டு பிடிக்க முடியாது என்று எதுவுமில்லை. வழிகள்
    புதிது,புதிதாக இருக்கிரது. நான் சமையலில்லாததும் எழுதி வருகிறேன். அதற்கு குரு நீங்கள்தான்.. நன்றியைத் தெறிவித்துக் கொள்ள இடையே புகுந்ததற்கு மன்னிக்கவும்.
    அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.

    தெறிவித்துக் கொள்ள

பின்னூட்டமொன்றை இடுக