வால்பேப்பரில் திரைப்படம் பார்க்க புதிய வசதி.

desktop-movie
கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.பலருக்கும் பரிட்சயமானது தான் இது.

இப்படி டெஸ்க்டாப்பில் மனதுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கசெய்த படி வேலை பார்ப்பது இனிமையானதும் கூட!

ஆனால் கம்ப்யூட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது சாத்தியமா?

டெஸ்க்டாப்பில் திரைப்படம் ஒடத்துவங்கிய பின் கம்ப்யூட்டர் திரையை அத்திரைப்படமே ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் அதில் உள்ள மற்ற அம்சங்களை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதோடு படம் பார்த்து கொண்டே வேலை செய்வது என்பதும் கடினமானது தான்.

இருப்பினும் ஏதாவது காரணத்திற்காக டெஸ்க்டாப்பில் படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரிலும் சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வழியும் இருக்கிறது.

டெஸ்க்டாப்மூவி என்னும் கம்ப்யூட்டர் செயலி இதனை சாத்தியமாக்குகிறது.இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் மூலம் கம்ப்யூட்டரில் திரைப்படங்களை வால்பேப்பராக பார்த்து ரசிக்கலாம்.

அழகிய புகைப்படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பராக வைத்து கொள்வது போல இந்த செயலி திரைப்படத்தையே வால்ப்பேப்பராக ஆக்கித்தருகிறது.

திரைப்படமே வால்பேப்பராக மாற்றப்படுவதால் டெஸ்க்டாப்பில் உள்ள மற்ற ஐக்கான்கள் எல்லாம் அப்படியே இருக்கும்.எனவே அவற்றில் எது தேவையோ அதனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த ஐக்கான்களின் விண்டோவின் அளவை இஷ்டம் போல மாற்றியமைத்து கொள்ளலாம் என்பதால் அவற்றை சின்னதாக்கி கொண்டு தொடர்ந்து திரைப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்.

இந்த செயலி மூலமே படத்தின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.

திரைப்படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.ஆனால் அந்த வசதியை உருவாக்கி தருகிறது இந்த டெஸ்க்டாப்மூவி செயலி.

பால்கோசாப்ட் என்னும் இணையதளத்தில் இருந்து இதனை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இதைத்தவிர மேலும் பல பயனுள்ள செயலிகள் இந்த தளத்தில் இருக்கின்றன.

இணையதள முகவரி;http://falcosoft.hu/softwares.html#desktopmovie

பின்னூட்டமொன்றை இடுக