வரதட்சனைக்கு எதிராக ஒரு வீடியோ கேம்

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளையாட்டை விளையாடியும் மகிழ்ந்திருக்கலாம்.

இறக்கையில்லா பறவையை கொண்டு அதன் முட்டைகளை கபளிகரம் செய்ய முயலும் பன்றிகளை தாக்க வழி செய்யும் இந்த விளையாட்டு செல்போன் உலகில் சூப்பர் ஹிட்டாகி தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருகிறது.ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாக அறிமுகமான ஆங்ரி பேர்டு வெற்றிகரமான வீடியோ கேமிற்கான மிகச்சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது.

ஆங்ரி கேம் பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால் விக்கிபீடியாவை பார்க்கவும்.இதே தலைப்பில் அங்ரி பேர்டு பற்றி மிக விரிவான தகவல்களை தருகிறது அந்த நீளமான கட்டுரை.

ஆங்ரி பேர்டு சுவாரஸ்யமான விளையாட்டு மட்டும் அல்ல,இதே போன்ற விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் தரக்கூடியது.

இந்த விளையாட்டு தந்த ஊக்கத்தினாலோ என்னவொ இந்தியாவில் அங்ரி பிரைட்ஸ் (கோபக்கார மணமகள் )விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி திருமண சேவை இணையதளமான ஷாதி டாட் காம் இந்த விளையாட்டை பேஸ்புக் சார்ந்த செயலியாக உருவாக்கியுள்ளது.

கோபக்கார மணமகள் என்றவுடன் மாமியார் மருமகள் சண்டை சார்ந்த விளையாட்டோ என்று நினைத்து விட வேண்டாம்.இது வரதட்சனைக்கு எதிரான விளையாட்டு.

சாதி இருக்கின்றதென்பானும், இருக்கின்றானே” என்று பாரதிதாசனை பொங்க வைத்த இந்தியாவுக்கு வரதட்சனை தேசம் என்னும் இன்னொரு இழிவு இருக்கிறது.வரதட்சனை கொடுமையால் இன்னமும் சத்தமில்லாமல் தொடரத்தான் செய்கிறது.

இந்த பிரச்னையை விளையாட்டு மூலம் தட்டி கேட்க முடியுமா என்று தெரியவில்லை,ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.அந்த நம்பிக்கையில் தான் ஷாதி இணையதளம் கோபக்கார மணமகள் விளையாட்டை உருவாக்கி உள்ளது.

அவேச காளியை போல எட்டு கைகளோடு இந்திய மணமகள் காட்சி தரும் இந்த விளையாட்டில் ,அந்த மணமகள் சார்பில் விளையாடுபவர்கள் வரதட்சனை கேட்கும் மாப்பிளைகளை தாக்கி அடித்து விரட்ட வேண்டும்.டாக்டர்,பொறியாளர்,பைலட் என மூன்று விதமான மாப்பிளைகள் இருக்கின்றனர்.ஒவ்வொருவருக்கும் ஒரு விலை பட்டியல் உள்ளது.துடைப்பம்,கரண்டி போன்ற ஆயுதங்களை பயனபடுத்தி இவர்கள் மீது தாக்குதல நடத்த வேண்டும்.

விளையாட்டின் போக்கில் ஒவொரு கட்டமாக முன்னேடி செல்லலாம்.

வரதட்சனை பற்றிய விழிப்புண்ரவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இதனை ஷாதி உருவாக்கியுள்ளது.(இதன் பின்னே உள்ள விளம்பர நோக்கமும் மறைந்திருக்கிறது என்ற போதிலும் சுவாரஸ்யமான விளையாட்டு முலம் வரதட்சனையை மையப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

அதற்கேற்பவே இந்த விளையாட்டிற்கான பேஸ்புக் பக்கத்தில் இதுவரை 3 லட்சம் பெருக்கு மேல இதனை லைக் செய்துள்ளனர்.2 லட்சம் முறைக்கு மேல் இந்த விளையாட்டு டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது.

நம்மூர் பதிரிகைகளை விட அயல்நாடு நாளிதழ்கள் இந்த விளையாட்டு பற்றி அதிக உற்சகத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவை வரதட்சனை தேசமாக பார்க்க விரும்புவதன் வெளிபாடோ!

நிற்க சில மாதங்களுக்கு முன் பார்த் மேட்ரிமோனி டாட் காம் இதே போன்ற விளையாட்டை அறிமுகம் செய்தது நினைவிருக்கிறதா?

ஆன் ஐடியல் வைப் என்னும் பெயரிலான அந்த விளையாட்டு மூலம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்கள் நான்கு விதமான லட்சிய மனைவி மாதிரிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான மனைவியை தேர்வு செய்து கொண்டால் அதன் பிறகு அந்த இணைய மனைவியிடம் இருந்து செல்போன் வழியே தினமும் செய்திகளை பெறலாம்.ஆசை மனவி அனுப்புவது போலவே தோற்றம் தரும் அந்த செய்திகள் மூலம் மணமகன்கள் தங்களுக்கான சரியான மணமகளை தேர்வு செய்வது குறித்த தெளிவை பெறலாம்.

எல்லாம் சரி,இதே போன்ற விளயாட்டு பெண்களுக்காக ஏன உருவாக்கப்படவில்லை என்று தெரியவில்லை.ஆணதிக்கமோ!.

—————-

http://www.facebook.com/shaadicom

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s